Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துமாரியம்மன்
  ஊர்: திருவப்பூர்
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி வெள்ளி  
     
 தல சிறப்பு:
     
  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவப்பூர், புதுக்கோட்டை  
   
 
பிரார்த்தனை
    
  குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட வருவோர், வேலைவாய்ப்புக் கேட்டு வருவோர், குடும்பப் பிரச்சனைகள் தீர்த்திட வேண்டி வருவோர், திருமணம் கைகூட, தடைப்பட்ட திருமணம் நடந்தேற வேண்டுவோர் என அனைவரது குறைகளையும் நீக்கி அருள்மாரி பொழிகின்றாள் அன்னை முத்துமாரி. அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட, அம்பிகையில் அருளால் அம்மைநோய் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து,பொங்கல் வைத்தும், புதுப்புடவை, எலுமிச்சை மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இயங்கி வந்த இக்கோயில், தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வருகின்றது.  
     
  தல வரலாறு:
     
  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள். அருள் வாக்கின்படி, அம்மனின் திருவருவை பூமியிலிருந்து தோண்டி எடுத்து பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்குச் சொந்தமானதாய் இருந்ததால், சமஸ்தானமாக பெரும்புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. மன்னர், முத்துமாரி அம்மன் ஆலயம் வந்து, தனது மகனைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடினார். ஆனால், விதிப் பயன் காரணமாக அரசரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும் அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அம்பாளை அந்த இடத்தில இருந்த வேறு இடம்மாற்ற உத்தரவிட்டார். அரசரின் ஆணைப்படி, சுவாமி சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில், திருவப்பூர் மக்கள் சிலர் வழிமறித்துக் கெஞ்சி, அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். (அந்த இடம் தற்போது காட்டு மாரியம்மன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது). அன்று இரவு, அரசரின் கனவில் முத்துமாரி தோன்றி, உனது மகன் விதிவசத்தால் உன்னை விட்டுப் பிரிந்தாலும், அவனை எனது மகனாக ஏற்றுக் கொண்டேன் எனக் கூறினாள். தவறை உணர்ந்த மன்னர், அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar