Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பயற்ணீசுவரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பயற்ணீசுவரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பயற்ணீசுவரர்
  உற்சவர்: பயற்ணீசுவரர்
  அம்மன்/தாயார்: நறுமலர் பூங்குழல் நாயகி
  தல விருட்சம்: மகிழ மரம்
  தீர்த்தம்: காண்டீப (வில்வடிவ) தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காமிகம்
  ஊர்: உடையார்பாளையம்
  மாவட்டம்: அரியலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி பிரம்மோற்ச்சவம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களின் அனைத்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையமும் ஒன்று. வீரத்திற்க்கும் தியாகத்திற்க்கும் கல்விக்கும் பெயர்பெற்ற பல ஜமீன்தார்கள் இதனை ஆண்டு இதற்க்கு நற்பெயரை கொடுத்து உள்ளார்கள். இதன் அதிபர்களாககிய *காலாட்கள் தோழ உடையார்கள்* தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயர் உண்டாயிற்று. இந்த ஊரில் உள்ள திருக்குளம் வற்றியதே இல்லை. உடையார் பாளையத்தில் தெப்பஉற்சவம் அழகு என்பது வாக்கு. 18 ஆம் நூற்றாண்டில் அன்னியர்களின் படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில்லுள்ள ஸ்ரீ ஏகாம்பரேசுவரர், ஸ்ரீ காமாட்சியம்பிகை, ஸ்ரீ வரதராஜர் முதலியவர்களின் உத்றவ மூர்த்திகள் உடையார்பாளத்திற்க்கு எழுந்நதருளுவிக்கப்பெற்றன நித்திய நைமித்தங்கள் நடக்கப்பெற்றன. உடையர் பாளையத்திற்க்கு சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்து வந்தது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 
   
முகவரி:
   
  ருள்மிகு பயற்ணீசுவரர் திருக்கோயில் உடையார் பாளையம் போஸ்ட் மற்றும் தாலுகா அரியலூர் மாவட்டம் 621 804  
   
போன்:
   
  +91 93624 03076 
    
 பொது தகவல்:
     
  தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையமும் ஒன்று. வீரத்திற்க்கும் தியாகத்திற்க்கும் கல்விக்கும் பெயர்பெற்ற பல ஜமீன்தார்கள் இதனை ஆண்டு இதற்க்கு நற்பெயரை கொடுத்து உள்ளார்கள்.  இதன் அதிபர்களாககிய *காலாட்கள் தோழ உடையார்கள்* தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயர் உண்டாயிற்று. இந்த ஊரில் உள்ள திருக்குளம் வற்றியதே இல்லை. உடையார் பாளையத்தில் தெப்பஉற்சவம் அழகு என்பது வாக்கு.
 
     
 
பிரார்த்தனை
    
  பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறுகிறது. பௌர்ணமி அன்று இந்த ஆயலத்தையும், காண்டீப திருக்குளத்தையும் வலம் செய்வதால்  கைலாயம் மற்றும் கங்கையை சேர்த்து வலம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் ஸ்ரீ துர்க்கையை நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் உள்ள இராகு தோஷம் நீங்கி திருமணம் விரைவில் கைகூடும். இத்திருத்தலத்தில் உள்ள நவக்கிரகங்கள்யாவும் அவற்றுக்குரிய வடிவ பீடங்களில் காட்சி தருகின்றனர். இத்தலம் நவக்கிரக பரிகார தலமாக விளங்குகிறது. 
    
 தலபெருமை:
     
  மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது முற்கபுரி என்றழைக்கப்பட்ட இந்நாளைய உடையார்பாளையத்தில் தங்கியிருந்தனர்.  அப்போழுது தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட போது விநாயக பெருமானை வேண்டி கொண்டனர். விநாயக் பெருமான் அர்ஜூனனுடைய காண்டிப வில்லை வளைத்து அந்த இடத்தில் ஏரியை உண்டாக்கினார். இதனால் திருக்குளம் வில் வடிவத்திலேயே அமைந்துள்ளது. அவ்வாறு வில்லை வளைத்த நிலையிலேயே இந்த ஆலய வாசலில் ’வில் வளைத்த விநாயகராக’ காட்சி தருகிறார்.

ஈசனுடைய  திருக்கல்யாண வைபவத்தை காண யாவரும் கைலாய மலைக்கு சென்று விட பாரத தேசம் இரண்டாகி தென் கோடி உயர்ந்து வட கோடி தாழ்ந்து விட்டது. எனவே இறைவன் குறு முனியாம் அகத்தியரை அழைத்து தெற்கே சேன்று நிற்க . பூமி சமமாகும் என்று உத்திரவிடுகிறார். அந்த உத்தரகை ஏற்று அவர் தென்கோடி செல்லும் போது இந்த ஆலயத்தில் அமர்ந்து தியானத்திலே இருக்கும் போது இந்த ஏரியில் இருந்த தவளைகள் எல்லாம் சப்தமிட்டு இடையூறு செய்து கொண்டிருந்தன.  அதனால கோவம் கொண்ட அகத்திய முனிவர் இனி இந்த ஏரியில் தவளைகள் சப்தம் செய்யக் கூடாது என்று சாபமிட்டார்.  அன்றிலிருந்து இந்த ஏரியில் உள்ள தவளைகள் சப்தம் செய்வதில்லை.  

 
     
  தல வரலாறு:
     
  சுமார் 1400 வருடங்களுக்கு பழமையானது இந்த கோயில் . மலை நாடான  திவாகரபுரமென்னும் ஊரிலிருந்து வந்த வணிகன் ஒருவன்  சோழ நாட்டிலும் மற்ற பிற நாட்டிலும் மிளகு பொதிகளை மாடுகளின் மேல் ஏற்றிக் கொண்டு இந்த ஊர் வழியாக விருத்தாசலத்துக்கு சென்றார். அப்போழுது ஒரு சுங்கச்சாவடி இருந்தது. மிளகுக்கு அதிக வரி கொடுக்க வேண்டியருந்ததால் வணிகன் அதிகாரியிடம் இந்த ஊர் இறைவன் சாட்சியாக பொதிமூட்டைகளில் இருப்பது பயறு என்று பொய் கூறி அதற்க்கு உண்டான வரியை கொடுத்தார்.

விருத்தாசலம் சென்று பொதியை அவிழ்க்கும் போது எல்லாம் பயிறாக இருந்ததை கண்டு மிகவும வருந்தினான். பொய் சொன்னதிற்க்கான கிடைத்த தண்டனை என்று எண்ணி பழமலைநாதசுவாமியிடம் முறையிட்டான். அப்போது *விட்ட இடத்தில் தேட வேண்டும்* என்ற அசரீரி கேட்டது. உடனே வணிகன் இத் தலத்திற்க்கு திரும்பி வந்து சிவபெருமானை வழிபட்டான். ஈசன் அருளால் பயிறெல்லாம் மீண்டும் மிளகாக மாறியதால்  வணிகன் மகிழ்ச்சியுடன் சென்றான்.

மிளகைப் பயிறாகச் செய்த காரணம் பற்றிச் சிவபெருமானுக்கு பயிறணி நாதர் என்னும் திருநாமமும் இந்த ஊருக்கு பத்ராரண்யம், பயறணீச்சுரம் மற்றும்   முற்கபுரி என்ற பெயர்களும் வழங்குகின்றன. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் (முற்கம் என்றார் பயறு) தமிழில் பயறணி நாதரெனவும் வழங்கப்படுகிறது. அம்பாளின் பெயர் வடமொழியில் சுகந்த குசும  குந்தலாம்பிகை,
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar