Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோட்டை முனியப்பன்
  ஊர்: அரியலூர்
  மாவட்டம்: அரியலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, அமாவாசை  
     
 தல சிறப்பு:
     
  வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருக்கிறார் என்பதுதான்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோயில் அரியலூர்.  
   
    
 பொது தகவல்:
     
  சிறிய சுவரில் செதுக்கிப்பதித்தது போல் சில சிலைகள், அருகில் அகல் விளக்கு ஏற்றும் இடம், சிறு சிறு காவல் தெய்வச் சிலைகள், சற்றே தொலைவில் காவலன் போல் கம்பீரமாக நிற்கும் மதுரைவீரனின் கதை உருவம்.  
     
 
பிரார்த்தனை
    
  நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருவிழாவின் போது பால்குடம் எடுத்து, பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருக்கிறார் என்பதுதான்.

இந்த ஊரில் எந்த விட்டில் விசேஷம் நடந்தாலும் முதல் மரியாதை முனியப்பசாமிக்குத் தான். அவர் உத்தரவு தந்த பின்பு தான் காரியத்தை துவங்குகிறார்கள். அந்த ஊரில் குழந்தை பிறந்தவுடன் முனியப்ப சாமியின் பெயரையே முதலில் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் முடியிறக்குவது முனியப்ப சுவாமிக்குத்தான். வருடத்திற்கு ஒரு முறை ஊரில் அனைவரும் ஒன்றுகூடி திருவிழா நடத்துகிறார்கள்.  திருவிழாவின் போது பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். கோட்டை முனியப்பருக்கு கோட்டை ஏதும் இல்லாவிட்டாலும் சிறு கோயிலில் அமைந்திருப்பதே ஊருக்கு கோட்டை அமைந்தது போல் காவலாக உள்ளது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

 
     
  தல வரலாறு:
     
  பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தார்கள் ஆட்சிக் காலத்தில் எப்படி பிரதிஷ்டை செய்தார்களோ அப்படியே மாறாமல் இருக்கிறது கோயில். அதைப்போலவே அந்தப் பகுதி மக்கள் கோட்டை முனியப்பசாமி மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மாறாமலிருக்கிறது கோயில் எழுந்த காலம் எவருக்கும் தெரியவில்லை. என்றாலும் மன்னரின் கனவில் வந்த முனியப்பன் தனக்கு ஒரு இடம் தருமாறும், ஊருக்கே காவலாக இருப்பதாகச் சொன்னதுமான செவிவழிக்கதை மட்டும் பலருக்கும் தெரிந்திருக்கிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது மறந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருக்கிறார் என்பதுதான்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar