Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: அழகிய பொன்னம்மை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: தாமிரபரணி
  ஆகமம்/பூஜை : காமீகம்
  ஊர்: தென்திருப்பேரை
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலம் நவகைலாயங்களில் ஏழாவது தலம். இது புதன் தலமாகும். குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்து இறைவன், வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை - 628 621, திருநெல்வேலி மாவட்டம்  
   
போன்:
   
  +91- 93658 89291 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனைப்போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருவது விசேஷம். இவருடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
 

ஜாதகத்தில் புதன் தோஷம் இருப்பவர்களும், கல்வியில் சிறப்பிடம் பெற விரும்புபவர்கள் சுவாமிக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.





 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  குதிரை வாகனத்தில் கிரகங்கள்: குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர்.

கொம்பு தேங்காய்:
அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒருசமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர், ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி " அந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தரமுடியாது' என சொல்லிவிட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம், ""இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சு போடு' என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்டமுடியாமல் ஒரு இளநீரை பறித்துப்போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்துவிட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்துவிட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.

ஆறு கை பைரவர்:
இங்குள்ள நந்திக்கு, தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்வது விசேஷம். இவ்வூரில் உள்ள மகரநெடுங்குழைக்காதர் (பெருமாள்) கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்கும் ஊர் என்பதால் இங்கு வந்து பெருமாளையும், கைலாசநாதரையும் வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்து இறைவன், வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை. பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இங்கு வல்லப விநாயகர், சக்தி விநாயகர், கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்களை தரிசிக்கலாம். பெரிய கோட்டையை உடைய ஊரை "பேரை' என சொல்வார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே இருப்பதால், தென்திருப்பேரை என்று பெயர் பெற்றது.
 
     
  தல வரலாறு:
     
  சிவதரிசனம் பெற விரும்பிய அகத்தியரின் சீடர் உரோமசர், அவரது ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar