Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காரைக்காலம்மையார்
  அம்மன்/தாயார்: காரைக்காலம்மையார்
  ஊர்: காரைக்கால்
  மாவட்டம்: காரைக்கால்
  மாநிலம்: புதுச்சேரி
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் ஆனி மாதத்தில் நடக்கும் "மாங்கனி அழைத்தல்" திருவிழா மிகவும் பிரசித்தம். இம்மாத பவுர்ணமியன்று சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர். மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில் கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது. அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும். பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும். அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள். பங்குனியிலும் அம்மையார் ஐக்கிய விழா கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  காரைக்கால் அம்மையாருக்கு உள்ள தனி கோயில்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால்,-609 602. புதுச்சேரி.  
   
போன்:
   
  +91- 4368 - 222 717. 
    
 பொது தகவல்:
     
 

இங்குள்ள சிவனின் திருநாமம் சோமநாதர்.


தல விநாயகர்: சம்பந்த விநாயகர்.


 
     
 
பிரார்த்தனை
    
  திருமணமான பெண்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  காரைக்காலம்மையாருக்கு மாங்கனி நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

காரைக்காலம்மையார் சிறப்பு: தும்புரு என்ற தேவர் வீணை இசைப்பதில் வல்லவர். இவரது மகள் சுமதி, சிவனை வேண்டி தவம் செய்தாள். அப்போது துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுமதி, துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம்கொண்ட அவர், அப்பெண்ணை மானிடப்பிறப்பு எடுக்கும்படி சபித்து விட்டார். அவளே புனிதவதியாக பிறந்தாள். சிவன் "அம்மையே!' என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்' என்று அழைக்கப்படுகிறார். இவரே இக்கோயிலின் மூலவர்.


 
     
  தல வரலாறு:
     
 

முன்னொரு காலத்தில் காரைவனம் எனப்பட்ட இப்பகுதியில் வசித்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு புனிதவதி என்ற மகள் பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டிருந்த அவளை, பரமதத்தன் என்ற வணிகனுக்கு மணமுடித்து கொடுத்தனர். திருமணமான பின்னரும் அவள் சிவசேவையில் நாட்டம் கொண்டிருந்தாள்.


ஒருசமயம் ஒரு சிவபக்தர் மூலமாக, இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கிடைக்கும்படி செய்தார் சிவன். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனை வீட்டிற்கு கொடுத்து விட்டான். சிவன், அவனது வீட்டிற்கு அடியார் வேடத்தில் சென்றார். கணவன் இல்லாத வேளையில் வந்த அவரை வரவேற்ற புனிதவதி அன்னத்துடன் ஒரு மாங்கனியையும் படைத்தாள். சாப்பிட்ட அடியார் அங்கிருந்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறிய புனிதவதி, ஒரு மாங்கனியை வைத்தாள். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டான் பரமதத்தன். கணவன் பேச்சை அப்படியே கேட்ட புனிதவதி செய்வதறியாது திகைத்தாள்.


சமையலறைக்குள் சென்று, தனக்கு ஒரு கனி கிடைக்க சிவனிடம் வேண்டினாள். அவள் கையில் ஒரு மாம்பழம் வந்து அமர்ந்தது. அதனை கணவனுக்கு படைத்தாள் புனிதவதி. முதலில் வைத்த மாங்கனியைவிட அதிக சுவையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டான். புனிதவதி நடந்ததை கூறினாள்.  பரமதத்தன் நம்பவில்லை.  சிவன் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். புனிதவதியும் சிவனை வணங்கவே, கனி கைக்கு வந்தது. தன் மனைவி தெய்வப்பிறவி என நினைத்த பரமதத்தன், அவளை விட்டு பிரிந்தான். வேறு ஊருக்கு சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டான். அவளுக்கு பிறந்த குழந்தைக்கு "புனிதவதி' என்று பெயர் வைத்தான். புனிதவதி இதையறிந்து கணவனை அழைக்கச் சென்றான். அவன் அவளை தெய்வமாகக் கருதி காலில் விழுந்தான்.


புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது ""கைலாயம் செல்க'' என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு ""தாயே சுகமாக வந்தனையா?'' என்றார். தன் நடனத்தை காட்டியருளினார். புனிதவதியாருக்கு அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: காரைக்கால் அம்மையாருக்கு உள்ள தனி கோயில்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar