Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: துர்கா பரமேஸ்வரி
  தீர்த்தம்: நேத்ராவதி நதி
  ஊர்: கட்டீல்
  மாவட்டம்: மங்களூரு
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  ஏப்ரல் 13 முதல் 20 வரை பிரம்மோற்ஸவம், நாக பஞ்சமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி.  
     
 தல சிறப்பு:
     
  நேத்ராவதி நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், பிரசாத குங்குமமும் ஈரமாக இருக்கிறது. பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் கட்டீல், மங்களூரு, கர்நாடகா.  
   
போன்:
   
  +91 824 - 220 0361, 220 0591, 220 0861 
    
 பொது தகவல்:
     
  மகா கணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாகதேவதை, பிரம்மா சன்னதிகளும் இங்கு உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்னை தீர இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்கு அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
 

கோயிலின் பின்பகுதியில் நந்தினி ஆறு இரண்டாக பிரிந்து, மாலை அணிவித்தது போன்று சுற்றி ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் காட்டு பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்குள் நுழையும் போது சலசல என ஓடும் நதியின் சத்தம் ரம்மியமாக உள்ளது. நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், பிரசாத குங்குமமும் ஈரமாக இருக்கிறது. பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


இளநீர் அபிஷேகம்: உக்கிரமாக இருந்த அம்மனை தேவர்களும், முனிவர்களும் அபிஷேகம் செய்து குளிர்வித்தனர். இதன் அடிப்படையில் அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம் நடக்கிறது. வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்னை தீர பக்தர்கள் இளநீர் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் காலை கோயில் இவற்றை அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். வாரம் மூவாயிரம் இளநீர் அபிஷேகம் செய்யப்படும்.


உடுப்பி சங்கரபுரம் மல்லிகை: தமிழகத்தில் மதுரை மல்லிகைக்கு பெயர் பெற்றுள்ளது போல, கர்நாடகாவில் உடுப்பி சங்கரபுரம் மல்லிகை புகழ்பெற்றதாக உள்ளது. அம்பாளுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இது முக்கிய இடம் பிடிக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, இந்த மலரை வாழைநாரில் தொடுத்து அணிவிக்கின்றனர். கர்நாடக மக்கள் இந்த அம்பாளை துர்க்காம்மா என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.


கோலா ஆட்டம்: கோயிலில் யட்சகானம் என்ற கோலா ஆட்ட வழிபாட்டுக்கு வரும் 25 ஆண்டுகளுக்கும், சண்டி ஹோமத்திற்கு ஒரு ஆண்டுக்கும் முன்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தெய்வ வேடமிட்டு வந்து பிரார்த்தனை நிறைவேற்றுவது போல், இங்கும் 16 கைகளுடன் கூடிய அம்மன் வேடமிட்டு வந்து பிரார்த்தனை நிறைவேற்றுவதே கோலா ஆட்டம். இதற்காக, ஒரு கோஷ்டியே இங்குள்ளது. இவர்களிடம் பதிவு செய்து கொண்டால் இந்த பிரார்த்தனையை நிறைவேற்றித் தருவார்கள். பக்தர்களே வேடமிட்டும் நடத்தலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை அதிகமாக இந்த வழிபாட்டை நடத்துவர். தினமும் 6,500 கூவின பூஜை (மல்லிகை அர்ச்சனை), வாகன பூஜை, அன்னதானம் உண்டு. கோயில் வருவாயிலிருந்து பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படுகிறது. இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் தங்கள் வீட்டு திருமணங்களை கோயிலில் தான் நடத்துகின்றனர். இதற்கு 300 ரூபாய் செலுத்தினாலே போதும்.


 
     
  தல வரலாறு:
     
  ஒரு காலத்தில் உலகில் பஞ்சம் தாண்டவம் ஆடியது. ஜாபாலி முனிவர் வறுமை நீங்க இறைவனை எண்ணி தவம் மேற்கொண்டார். இதனால், காமதேனு பசுவின் மகளான நந்தினி பசுவை பூலோகம் சென்று வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளையிட்டான். பாவிகள் நிறைந்த பூலோகத்திற்கு செல்ல நந்தினி மறுத்தது. அத்துடன் தன்னை பூலோகத்திற்கு அனுப்பக்கூடாது என அன்னை உமையவளை வேண்டியது. உமையவள் அவளிடம், நீ பசுவாகச் செல்ல வேண்டாம். புண்ணியம் மிக்க நதியாக மாறி பூமிக்குச் சென்று மக்களுக்கு பணியாற்று, என்றாள். நந்தினியும் நேத்திரவதி என்ற பெயரில் ஓட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அருணாசுரன் என்பவன், பூவுலகில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து உயிர்களைக் காக்கும்படி தேவியை முனிவர்கள் வேண்டினர். அசுரனைச் சம்ஹாரம் செய்ய அம்பிகை, மோகினியாக தோன்றினாள். அவளது அழகில் மயங்கிய அசுரன் அம்பிகையை விரட்டினான். நேத்திராவதி நதி நடுவில் இருந்த பாறையின் பின், அம்பிகை ஒளிந்து கொள்வது போல பாவனை செய்தாள். அருணாசுரன் அவளைப் பிடிக்க முயன்றான். அவள் வண்டு வடிவெடுத்து அவனை சம்ஹாரம் செய்தாள். மிகுந்த உக்கிரத்துடன் இருந்த அவளை சாந்தப்படுத்துவதற்காக. முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர். உக்கிரம் தணிந்த அவள், நந்தினி நதியின் நடுவில் துர்கா பரமேஸ்வரி என்ற பெயரில் கோயில் கொண்டாள். இவள் லிங்க வடிவில் இருப்பதாகவும், அம்பாளாக அலங்காரம் செய்து உள்ளதாகவும் சொல்கின்றனர். நதியின் மடியில் தோன்றியதால் அம்பிகை தோன்றிய இடம் கடில் எனப்பட்டது. கடில் என்றால் மடி. கடில் என்பது மருவி தற்போது கட்டீல் எனப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நேத்ராவதி நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், பிரசாத குங்குமமும் ஈரமாக இருக்கிறது. பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar