Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்யாண வேங்கடேச பெருமாள்
  ஊர்: சீனிவாசமங்காபுரம்
  மாவட்டம்: திருப்பதி
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
 திருவிழா:
     
  மாசியில் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா வருகிறார்.  
     
 தல சிறப்பு:
     
  கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில், சீனிவாசமங்காபுரம், திருப்பதி ஆந்திர மாநிலம்.  
   
போன்:
   
  +91 877-210 0105 
    
 பொது தகவல்:
     
  திருமலையில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் காத்து நின்றாலும் தரிசிப்பது என்னவோ ஓரிரு நிமிடங்களே. ஆனால், சீனிவாசமங்காபுரத்தில் பெருமாள் அதேகோலத்தில் கம்பீரமாக எட்டடியில் காட்சி தருகிறார். பெருமாளை நாம் விரும்பிய படி சாவகாசமாக தரிசனம் செய்வதற்கு சீனிவாச மங்காபுரம் மிக வசதியாக இருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பெருமாளை வேண்டிச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து, திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

தனக்கு திருமணம் நடந்த நாராயணவனத்தில் 5 அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமாக யௌவன பருவத்திலும் (இளைஞன்), திருமலையில் 6அடி உயரத்தில் சம்சாரக் கோலத்திலும் (குடும்பஸ்தன்) பெருமாள் காட்சி தருகிறார். இம் மூன்று மூர்த்திகளும் சீனிவாசப் பெருமாளின் ஒரே வடிவங் களே என்பது குறிப்பிடத்தக்கது. 1540ல் அருகிலுள்ள கல்யாணி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டபோது ஆலயம் நலிவடைந்தது. மூலவர் சன்னதி புற்றால் மூடப்பட்டது. பின்னாளில் சிறிய அளவில் பூஜை செய்யப்பட்டு வந்தது. 1967ல் திருப்பதி தேவஸ்தானத்தில் கட்டுப் பாட்டின் கீழ் இக்கோயில் வந்தது. அதன்பின் கோயில் சீர்படுத்தப்பட்டு பூஜைகள் முறையாக நடக்க ஆரம்பித்தன.


மூன்று வடிவம்: கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். சன்னதி
எதிரில் கருடாழ்வார் பெருமாளை வணங்கிய நிலையில் இருக்கிறார்.


திருமலையில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் காத்து நின்றாலும் தரிசிப்பது என்னவோ ஓரிரு நிமிடங்களே. ஆனால், சீனிவாசமங்காபுரத்தில் பெருமாள் அதேகோலத்தில் கம்பீரமாக எட்டடியில் காட்சி தருகிறார். பெருமாளை நாம் விரும்பிய படி சாவகாசமாக தரிசனம் செய்வதற்கு சீனிவாச மங்காபுரம் மிக வசதியாக இருக்கிறது.


 
     
  தல வரலாறு:
     
  திருமலை சீனிவாசப் பெருமாளுக்கும், சந்திரகிரி மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதிக்கும் நாராயணவனத்தில் (திருப்பதியில் இருந்து 40கி.மீ. தொலைவிலுள்ள புத்தூர்) திருமணம் நடந்தது. பின்னர் மணமக்கள் வேங்கடமலைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் விருந்தளித்தார். திருமணமான தம்பதிகள் ஆறுமாதம் மலையேறக் கூடாது என்ற அகத்தியரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட சீனிவாசன் அங்கேயே தங்க சம்மதித்தார். பெருமாளும் பத்மாவதியும் தேனிலவு கொண்டாடிய அத்தலம் பின்னாளில் கோயிலாக அமைந்தது. சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் ஆனது. புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் பெயருண்டு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar