Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீநிவாசபெருமாள்
  உற்சவர்: ஸ்ரீநிவாசபெருமாள் , ஆஞ்சநேயர்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: துளசி
  தீர்த்தம்: சுவேத நதி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பஞ்சராத்திரம் (வைகானாசம்), வைணவம், இரண்டு கால பூஜை
  புராண பெயர்: ஸ்ரீமுக்தியூர்
  ஊர்: சி.முட்லுார்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி, ராம நவமி, ஜூன் மாதம் வைகாசி விசாகம், ஆகஸ்ட் மாதம் கோகுல அஷ்ட்டமி உறியடி மற்றும் ஆவணி அவிட்டம். செப்டம்பர் மாதம் 9 நாள் நவராத்திரி விழா டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு. மார்கழி மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அதிகாலை 4.00 மணி முதல் காலை 10.00 மணி வரை திருப்பள்ளி எழுச்சியும் நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதுார் உள்ளதுடன், முழுக் குத்துறைக்கு தீர்த்த வாரியாக ஸ்ரீ முஷ்னம் பூவராகசுவாமி வருகை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. 
   
முகவரி:
   
  சி.முட்லுார் மற்றும் அஞ்சல், கிள்ளை வழி புவனகிரி வட்டம், கடலுார் மாவட்டம்  
   
போன்:
   
  +91 9659098067,9865844986 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் நுழைவு வாயில், நுழைவு வாயில் மேல் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  சீனீவாசபெருமாள் சுதையில் ஒரு கலசத்துடன் கூடிய சந்நதியில் அருள் பாலிக்கிறார். மகா மண்டபத்தில் நான்கு பகுதியில் கருடாழ்வாரும், விமானத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் நுழைவு வாயில் வலப்பக்கம் ஈசான மூலையில் தீர்த்தக்கிணறும் அருகில் தெற்கு முகம் பார்த்த நோக்கில் சாந்த ரூபத்தில் ஆஞ்சநேயர் ஒரு சிறு கலவசத்துடன் அமைக்கப்பட்ட கூடத்தில் அருள் பாலிக்கிறார். வல பக்கம் மடப்பள்ளியும் அருகில் தல விருட்சமான துளசியும் இடம் பெற்றுள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். நுழைவு வாயில் அருகில் பலி பீடம் அதற்கு பின் பக்கம் மேற்கு நோக்கிய திசையில்  கருடாழ்வார் கை கூப்பிய நிலையில் நின்று அருள் பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் ஒரே நேர்க்கோட்டில் வலது பக்கத்தில் நின்று தென்முகம் பார்த்து வேதாந்த தேசிகர், ராமானுஜர், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வாழ் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் அருள் பாலிக்கின்றனர்.  அத்துடன்  அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமனர்,பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன்மற்றும்  கல்கி என 10 அவதாரங்களுடன் கூடிய புகைப்படம் இடம் பெற்றுள்ள. கருவறை பக்கம் பக்தர்களை அழைக்கும் நோக்கில் துவார பாலகர்கள் சிரித்த கோலத்தில் நின்று அருள் பாலிக்கின்றனர். கருவறையில் கருங்கல் விக்கரகத்தில் வடிவமைக்கப்பட்டு கிழக்குப் பக்கம் பார்த்து ஸ்ரீதேவி பூதேவியுடன் சீனுவாச பெருமாள் அருள் பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  தீராத நோய், கல்வி, விவசாய அபிவிருத்தி, திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம் மற்றும் கிராம காவல் தெய்வமாக உள்ளார். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் விருப்பத்திற்கு சிறப்பு அபிேஷகம் 
    
  தல வரலாறு:
     
  கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீமுக்தியூர் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் முட்லுார் என வழங்கப்படும் இந்த ஊரில் நிலக்கிழார் ஒருவருக்கு இரு ஆண் பிள்ளைகள் பெற்றோர்களுடன் வளர்ந்தவர்கள் இதில் முதல் பிள்ளயைான நரிபூசி என்பவர் திரவு பதியம்மன் கோவில் கட்டி அப்பகுதிக்கு பெருமை சேர்த்தார். அவருடைய தம்பி  ஸ்ரீனிவாசன் என்வருக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.  பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சித்த வைத்தியரிடம் அழைத்துச்சென்று வைத்தியம் அளித்த நேரத்தில் அவர் மயங்கி விழுந்து ஆன்மீகம் உரை நிகழ்த்தி உபதேசம் செய்துள்ளார்.  அவருடன் சென்றவர்கள் வியந்து போய் அவரிடம் பல்வேறு ஆலேசசனைகளை பெற்றுள்ளனர். தன் அண்ணன் கட்டிய திரவு பதியம்மன் கோவில் அருகில் பெருமாள் கோவில் கட்டி அதற்கு ஸ்ரீனிவாச பெருமாள் என பெயரிட்டுள்ளார். கோவிலுக்கு என நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் எழுதி வைத்து பராமரித்து வந்தார். அப்போது மாணிக்க தேவன் என்ற திருடன் கோவில்களில் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தவனை யாராலும் பிடிக்க முடிய வில்லை. அந்த நேரத்தில் திருடன் சி.முட்லுார் என்று அழைக்கப்படும் இங்குள்ள கோவிலில் திருட வந்தான். இதை அறிந்த ஸ்ரீனிவாச பெருமாள் ஒருசாதாரன சந்நியாசியைப்போல் திண்ணையில் படுத்திருந்தார். அப்போது திருட வந்த மாணிக்க தேவன் மை பூசி தன்னை மறைத்துக் கொண்டு கோவிலுக்குள் வந்து ஒளிந்தான். அப்போது ஸ்ரீனிவாசபெருமாள் ஒரு தீவட்டியை வைத்து சூடு படுத்தியதில் அலறி துடித்தான். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் நீண்ட நாள் தேடிய திருடனை பிடித்து தந்த ஸ்ரீனிவாசபெருமாளை வணங்கினர். அன்று முதல் தங்களை பாதுாக்கும் காவல் தெய்வமாகவே வணங்கி வருகின்றனர். தற்போது ஸ்ரீனிவாச பெருமாள் தலைமுறையைச் சேர்ந்த ஜனகன் தற்போது பராமரித்து வருகிறார். கோவிலுக்கு உள்ள நிலங்களில் வரும் வருவாய் மூலம் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. 12 ஆண்டுக்கு ஒரு  முறை கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதுார் உள்ளதுடன், முழுக் குத்துறைக்கு தீர்த்த வாரியாக ஸ்ரீ முஷ்னம் பூவராகசுவாமி வருகை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar