Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெங்கடாஜலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வெங்கடாஜலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சக்கரத்தாழ்வார்
  உற்சவர்: வெங்கடாஜலபதி
  ஊர்: கரிசூழ்ந்த மங்கலம்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலின் சிறப்பு அம்சமே மூலவர்தான்.பொதுவாக எல்லா வெங்கடாஜலபதி ஆலயங்களிலும் மூலவரும் உற்சவரும் வெங்கடாஜலபதி பெருமாள் தான் இருப்பது வழக்கம். ஆனால் இக் கோயிலில் உற்சவர் அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதியாகவும் மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் காட்சியளிக்கின்றனர். ஒரே சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும் பின்புறம் நான்கு கரத்திலும் சக்கரம் ஏந்திய நிலையில் யோக நரசிம்மராகவும் மூலவர் காட்சியளிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் உற்சவர் வெங்கடாஜலபதியாகவும் காணப்படுகின்ற நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு இடங்களில் தான் உள்ளன.அவற்றுள் இக்கோயிலும் ஒன்று. இக் கோயிலில் மூலஸ்தான விக்கிரஹத்திற்கு மாதத்திற்கு 10 தினங்களுக்கு மேல் எண்ணெய் சாத்தி அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனாலும் எண்ணெய் சாத்தி அபிஷேகம் செய்த சில மணி நேரங்களில் மூலவர் விக்கிரஹத்திற்கு மேல் எண்ணெய் பசையே இராது. உயிரோட்டமான கல் விக்கிரஹத்தில் இவ்வாறு ஏற்படுவது இயல்பு. எனவே இக் கோயில் மூலவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பது புலப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல்9 மணி வரை, மாலை 6 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெங்கடாஜலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில் கரிசூழ்ந்த மங்கலம், திருநெல்வேலி  
   
    
 பொது தகவல்:
     
  2000க்கு முன் கோயிலின் நிலை: 2000 ஆண்டிற்கு முன்பு கோவில் காம்பவுண்டு சுவர் ஆங்காங்கே இடிந்து காணப்பட்டது. 1993-ல் ஏற்பட்ட பெரும் வௌ்ளத்தில் கோவிலுக்குள் 2 அடி உயரத்திற்கு தண்ணீரும் சேறும் நிறைந்திருந்தது. வௌ்ளம் வடிந்த பின் கோவிலில் காணப்பட்ட சேறு முழுவதும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டபின் நித்திய பூஜைகள் தொடரப்பட்டன. முன்பு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வரை காரிலோ ஆட்டோவிலோ வரமுடியாது. கனகசபாபதி திருக்கோயில் வரை காரிலோ அல்லது ஆட்டோவிலோ வந்து அதன் பின் சுமார் சில கி.மீ நடந்து தான் வரவேண்டும்.கோவிலுக்கு முன் ஒரு வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. அதில் இறங்கி நடந்துதான் வர வேண்டும். இது தவிர கோவிலில் கெருடசேவை நடக்கும் பொழுது கெருட வாகனத்தை ஏற்றவும் இறக்கவும் பலரது உதவி தேவைப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் குறைந்த வண்ணம் இருந்தது.

19.04.2000-ல் கும்பாபிஷேகம்: இந் நிலைகளை அகற்றி திருப்பணிகளைச் செய்து 19.04.2000-ல் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.இதற்கென வெங்கடேஸ்வர பக்த சபா என்னும் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்பணிகள் நடைபெற்றன. கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. கோவிலின் காம்பவுண்டுச்சுவர்கட்டப்பட்டது. கெருடவாகனம் வைப்பதற்கென ஒரு அறை கட்டப்பட்டது. இதன் மூலம் தற்பொழுது வருடந்தோறும் சுமார் 75 கெருடசேவை உற்சவங்கள் நடைபெறுகின்றன. கெருடவாகனம் சுற்றும் பிரகாரம் முழுவதும் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 அல்லது 3 பேர் இருந்தாலும் கெருடசேவை நடக்கக்கூடிய நிலை வந்தது. பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை மற்றும் குளியலறை கட்டப்பட்டது. பக்தர்கள் கோவில் வரை வருவதற்கு வசதியாக ஊரின் ஆரம்பத்திலிருந்து கோவில் வரை உரியவர்களிடம் நிலங்களைப் பெற்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரோடு ஒன்று போடப்பட்டது. முதல் நிலத்திற்கு உரியவரான திரு.யு.சுந்தரம் என்பாரும் மூன்றாவது நிலத்திற்கு உரியவரான திரு.ஐ.சுப்பிரமணியன் என்பாரும் தமது நிலங்களிலிருந்து 8 செண்டு நிலங்களை இலவசமாக அளித்தனர்.ஓடையின் மேல் பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது.இதன் மூலம் தற்பொழுது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

702 வருடங்களுக்குப் பின் நடைபெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் ஊர்மக்கள் அனைவரது முழு ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு கருட சேவை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  நன்மை தரும் நரசிம்மர்: பிரதோஷகாலங்களில் தொடர்ச்சியாக 11 பிரதோஷ தினங்களில் நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

சுக்கிரன் பரிஹார ஸ்தலம்: சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. இக்கோயில் சுதர்சன பெருமான் சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறார்.

கருடசேவை : நமது பெருமாள் கோவிலை குலதெய்வமாகக் கொண்டவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். அவ்வாறு அவர்கள் வரும் பொழுது சுவாமிக்கு கும்பம் வைத்து, அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரங்கள் சாத்தி, பொங்கல் வைத்து, அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். நேரமின்மை காரணமாக காலையில் வந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் தங்கள் வழிபாட்டினை முடித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் பெருமாளின் பரிபூரண அருளினைப்பெற கெருடசேவை செய்வதே சாலச்சிறந்தது ஆகும். தங்கள் வீடுகளில் ஏதேனும் சுபகாரியங்கள் நடக்கின்ற காலங்களில் பெருமாளுக்கு கெருடசேவை வழிபாடு செய்தால் வெங்கிடாஜலபதியின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமாவர்.
 
     
  தல வரலாறு:
     
  (எம் மண்டலம் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரன்1 கி.பி 1298 ) குலசேகரன் குறிப்புக்களில் வெங்கடாஜலபதி திருக்கோயில் விமானம் கானீச ரகுத்தர் மகன் பிதூசி ரகுத்தர் என்ற லாலா ஒருவரால் கட்டப்பட்டது பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

கி.பி.1544ல் ஏர்ர திம்மராஜூவின் ஸ்தான்பதியாக இக் கிராமத்துக்கு வந்த அப்பயங்கார் என்பவர் தாமிரத்தால் மூடிய கொடிமரம் நிறுவி கெருட வாகனம் அளித்து பதினோரு ஆழ்வார்கள் சிலைகள் அமைத்து ஒரு வௌ்ளித் தாம்பாளமும் அளித்தார். கி.பி. 1545 ல் தினசரி பூஜை நடைபெறவும் பிற பணிகளுக்கும் நிலங்கள் கொடையாக அளித்தார். 16ம் நூற்றாண்டு காலத்தில் விஷ்ணு ஆலயங்களில் தாந்தரிக் ஆகமத்திலிருந்து வைகானஸ ஆகமத்திற்கு மாறியது. 1298ப் பின் இக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. வாய்மொழிச் செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

முற்காலத்தில் இக் கோயிலில் கேரள நம்பூதிரிகளின் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும் கீழே குறிப்பிட்டுள்ள விவரங்கள் கேரள நம்பூதிரிகளின் வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டதற்கு சான்றாக அமைகிறது.

கொடிமர அமைப்பு தெற்கு பிரகார மூலையில் காணப்படும் பலிபீடம் மூலஸ்தானத்திற்குள் செல்லும் பொழுது சட்டையை கழற்றி விட்டு செல்லுதல் ஆகியவை மூலம் நம்பூதிரிகள் ஆகம வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டது தெரிய வருகிறது.

சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் : தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார். இந்திரதுய்மன் என்பவன் யானையாக பிறந்த போது கூகு என்பவன் முதலையாக பிறந்தான். யானையின் காலை முதலை கவ்விய போது சக்கரத்தாழ்வார் அனுப்பிய திருமால் முதலையை வதைத்தார். இப் பெருமாளைப் பற்றி அம்பரிசன் கதை, கஜேந்திர மோட்சம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், சிசுபாலவதம், நரகாசுரவதம், மாலிகாவதம் போன்ற புராணக் கதைகள் மூலம் நாம் அறியலாம்.

“ருது சுதர்சந காலே பரமேஷ்ட பரிக்கரஹ” என்று சகஸ்ரநாமம் கூறுகிறது. சக்கரத்தாழ்வாரை பரமாத்மா விஷ்ணு சுழற்றுகிறார் என்று வேதம் கூறுகிறது. “காலச்சக்கரத்தோடு வெண்சங்கம் கையேந்தினாய்” என்று திராவிட வேதம் கூறுகிறது.

“விஷ்ணோதரணித ராச்யுத ஸங்கு சக்ர பாணே” என்று எமன் கூறுகிறார். அதாவது “சக்ரபாணே என்று தொழும் பக்தர்களிடம் செல்லாதீர்கள்” என்று எமதூதர்களிடம் எமதர்மன் கூறுகிறார். இதில் இருந்து சக்கரத்தாழ்வாரின் சிறப்பை நாம் அறியலாம்.

மேலும் பிரம்மத்தின் பிளவுபடாத சொந்த சக்தியே சுதர்சனம் எனப்படும். .இதன் அடிப்படையில் இயற்கையில் இருப்பது பிரிக்க முடியாத சக்தி சூட்சுமமாக ஒருபுறம் சுதர்சன பெருமானாகவும் மறுபுறம் யோக நரசிம்மராகவும் இந்த இறைவன் காட்சியளிக்கிறார்.

வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை எல்லாம் தரும் சுதர்சன பெருமான் அழகிய நல்வழியை காட்டுபவர். எதிரிகளை விலகச் செய்பவர். புத்தி, சாமர்த்தியம்,வெற்றி இவைகளை அளிக்க தயங்காதவர். இவரை வழிபட்டால் குடும்ப ஒற்றுமையும், பக்திப்பெருக்கும் ததும்பும். பிறரின் அதிகாரத்திற்கு உட்படாமல் தன் சக்தியின் மூலம் ஏற்பட்ட பகவானின் சங்கல்பம் இத்தலத்தில் சுதர்சனமாக விளங்குவதால் இவரை வழிபடுபவர்களுக்கு எந்தத் தடையும் வராது. அவர் கையிலுள்ள ஆயுதங்கள் விழிப்புடன் இருந்து பக்தர்களைக் காப்பாற்றுகின்றன.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலின் சிறப்பு அம்சமே மூலவர்தான்.பொதுவாக எல்லா வெங்கடாஜலபதி ஆலயங்களிலும் மூலவரும் உற்சவரும் வெங்கடாஜலபதி பெருமாள் தான் இருப்பது வழக்கம். ஆனால் இக் கோயிலில் உற்சவர் அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதியாகவும் மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் காட்சியளிக்கின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar