Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலசுப்பிரமணியர் ( பழநியாண்டவர்)
  உற்சவர்: கல்யாண சுப்பிரமணியர்
  தீர்த்தம்: கிணற்று தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  ஊர்: மோகனூர்
  மாவட்டம்: நாமக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர் - 637 015. நாமக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4286 - 645 753, +91- 98424 41633. 
    
 பொது தகவல்:
     
  இத்தலவிநாயகர் அரச விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் உள்ள சிவதுர்க்கை எட்டு கரங்களுடன், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருவது விசேஷம். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் வாகனத்துடன், நின்ற கோலத்தில் இருக்கின்றன. விஸ்வநாதர், விசாலாட்சி, முருகனின் படைத்தளபதியான வீரபாகு, சூரியன், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்தும், விசேஷ பூஜை செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  முருகன்சிறப்பு: பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இக்கோயிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளே இந்த படிக்கட்டுகளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. சித்ரா பவுர்ணமியன்று படிபூஜை மற்றும் மாத கிருத்திகை, சஷ்டியில் விசேஷ பூஜை நடக்கிறது.

சிறப்பம்சம்: கோயிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோயில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு "ஜெயந்திவிழா' வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. கால பைரவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமியின்போது இவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற ஊர் என்பதால் "மகனூர்' என்றழைக்கப்பட்ட இத்தலம், "மோகனூர்' என்று மருவியதாக சொல்கிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  நாரதர் கொடுத்த கனியை தனக்கு தராததால் கோபம் கொண்ட முருகன், கைலாயத்திலிருந்து தென்திசை நோக்கி வந்தார். சிவனும், பார்வதியும் அவரை சமாதானம் செய்தும் கேட்கவில்லை. அவரை பின்தொடர்ந்த அம்பிகை, "மகனே நில்!' என்று அழைத்தார். தாயின் சொல் கேட்ட முருகன், நின்றார். அவரிடம் பார்வதி, கைலாயத்திற்கு திரும்பும்படி அழைத்தாள். ஆனால், முருகன் கேட்கவில்லை. தான் தனித்து இருக்க விரும்பியதாக கூறிய அவர் பழநிக்குச் சென்று குடிகொண்டார். இவ்வாறு முருகனை அம்பாள் அழைத்தபோது, இத்தலத்தில் நின்றதாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் பாலகனாக, "பால சுப்பிரமணியர்' என்ற பெயரில் அருளுகிறார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar