Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: உன்னி கிருஷ்ணன்
  ஊர்: குருவாயூர்
  மாவட்டம்: திருச்சூர்
  மாநிலம்: கேரளா
 
 திருவிழா:
     
  சித்திரை விஷு, விருச்சிக ஏகாதசி  
     
 தல சிறப்பு:
     
  குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு எதிரில், ஸ்ரீ கிருஷ்ண பகவான் மஞ்சுளால் என்ற அரசமர வடிவில் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர்- 680 101, திருச்சூர், கேரளா மாநிலம்  
   
போன்:
   
  +91-487-255 6335, 255 6799, 255 6347, 255 6365 
    
 பொது தகவல்:
     
  குருவாயூர் கிருஷ்ணர் கோயில் செல்பவர்கள் அருகிலுள்ள மம்மியூர் மகாதேவர் கோயில் சென்று தரிசனம் செய்தால் தான் குருவாயூர் முழு தரிசன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குருவாயூரில் குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறான். உருவத்தில் தான் அவன் குழந்தை. ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன் அவன்.

குருவாயூர் கோயிலில் திருமணம் முடித்தவர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வர். இதனால் இங்கு தினமும் திருமணக் காட்சியைக் காண முடியும்.

இத்தலத்தில் பூஜைகள் மிகுந்த சாஸ்திரப்படியும், சித்த சுத்தியுடனும், இறைமாட்சிக்கு ஏற்றம் தரும் வகையில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. உள்ளத்தாலும், மனதாலும், தூய்மையான புனித வாழ்வு நெறி அர்ச்சகர்களின் பணிக்காலத்தில் கடைபிடித்து அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் இத்தலத்தில் இறைவனின் திருவருளைப்பெற திருக்கோயிலில் உள்ள ருத்ர தீர்த்தத்தில் மூழ்கி ஈர ஆடைகளுடன் தரிசித்தால் மஹா புண்ணியத்தை பெறுவர்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தைகளுக்கு ருசியான சோறு கிடைக்க, தம்பதியினர் தீர்க்க ஆயுளுடன் வாழ, வெண்குஷ்டம் நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கார்த்திகை முதல் நாள் முதல் மார்கழி 11 வரை 41 நாட்கள் மண்டல காலம் என்பர். இந்த மண்டல காலத்தில் வரும் ஏகாதசி சிறப்பு தரும். ஏனெனில் அர்ஜுனனுக்கு, பகவான் கிருஷ்ணன் கீதையை உபதேசித்து ஏகாதசி அன்றே.

குழந்தைக்கு முதன் முதலாக சோறூட்ட வேண்டும். எந்தக் கோயிலில் போய் ஊட்டினால் அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ருசியான சோறு கிடைக்கும் என கேட்டால் எல்லோருமே சொல்வது குருவாயூரைத் தான். ஏப்ரம் 14ம் தேதி சித்திரை விஷு இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு முக்கிய பண்டிகைகள் பல உண்டு. அனைத்து வைணவ பண்டிகைகளும் இங்கு நடக்கும். இங்கு விருச்சிக ஏகாதசி மிக முக்கியமான பண்டிகை. இந்த ஏகாதசிக்கு 18 நாட்கள் முன்னதாகவே விழா தொடங்கி விடும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்களால் யானைகள் காணிக்கையாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் பத்மநாபன், கஜராஜன், கேசவன் என்ற பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் போற்றப்பட்டு வருகிறது. மேலும் இங்கு 52 யானைகள் உள்ளன. இங்கு யானை தான் சன்னதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானையே சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தை பெறும். இப்படி பல்வேறு வித்தியாசமான நடைமுறைகள் இந்தக் கோயிலில் உண்டு.

இங்கு காலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு விடும். முதல் நாள் அணிந்த மாலை மற்றும் அலங்காரங்களுடன் பூஜை நடத்தப்படும். இதை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் அபிஷேகம் நடக்கும் . தொடர்ந்து 12 கால பூஜைகள் நடத்தப்படும். இந்தக் கோயிலுக்கு சித்திரை முதல் நாள் சென்று வருவது மிகுந்த சிறப்புக்குரியது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு "கை நீட்டம்' வழங்கப்படும். அதாவது ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் மேல்சாந்தி வழங்குவார். கேரள அரசியல்வாதிகளுக்கு கை நிறைய காசு கொடுப்பது இப்போதும் வழக்கம். குருவாயூரப்பனின் அருளால் ஆண்டு முழுவதும் செல்வம் வற்றாமல் இருக்கும் என்பதே கை நீட்டத்தின் தத்துவம்.

நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம். பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் எல்லாம் குருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் குருபாவன புர மகாத்மியம் குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது. குருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டபோது. அங்குள்ள மரச்சுவர்கள், தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். விஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்க ஒரு தூணில் கம்ச வத காட்சியை வடித்திருந்தார் சிற்பி.

ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள்! என்றான் அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இது வரை வடிக்கவில்லையே! என்றார். உடனே சிறுவன் சிற்பவேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று, கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். இந்தத் தூண் குருவாயூரப்பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம். அதன் பிறகு கம்ச வத தூணை உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

குருவாயூரில் துலாபாரத்துக்கு இணையான வேறொரு சிறப்பும் உள்ளது. அதுதான் கிருஷ்ணாட்டம். இரவு சுவாமி சன்னதியின் நடை அடைத்தபின் தொடங்கி, காலையில் நடை திறப்பதற்கு முன் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை வைத்து கிரீடம் தயார் செய்து, அதை அணிந்து கொண்டு இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். கண்ணனுக்கு இந்த நாட்டியம் ரொம்பப் பிடிக்குமாம்.

குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.

*இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

*குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

*இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

*இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.

*இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

*நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

*இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

*குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

*கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.
 
     
  தல வரலாறு:
     
 

குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.

இங்கு குருவே ஒரு ஊரை எழுப்பியுள்ளார் என்றால் அங்கு இருக்க கூடியவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.

குருவோடு வாயு பகவான் இங்கு ஏன் வந்தார் தெரியுமா? வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு.

ஆக எல்லா வகையிலும் உயர்ந்த தலம் குருவாயூர். குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால்செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாக கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர். துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

கண்ணன் சொன்னது போலவே நடந்தது. வாயு பகவான் கண்ணனின் கட்டளையை ஏற்று புயலாய் மாறினார். மழை கொட்டியது. கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்தது. குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார்.

குருவும், வாயுவும் இவ்விதம் கண்ணனின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். எனவே கண்ணன் தான் குடியிருந்த அந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல் குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் "குருவாயூர்' என பெயர் சூட்டினார்.




அவதார காரியம் முடிந்ததும் ஸ்ரீகிருஷ்ணர் வைகுந்தம் ஏகுவதற்கு ஆயத்தமானார். அப்போது அவருடைய நண்பரும் சீடருமான உத்தவர் கிருஷ்ணா! நீங்கள் இல்லாத உலகைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லையே! என்றார் அதற்கு கிருஷ்ணர் உத்தவா! அவதார காரியம் பூர்த்தியானது. என் யதா ஸ்தானம் திரும்புவதுதானே முறை? என்றார். உடனே உத்தவர் இருந்தாலும் நீங்கள் இல்லாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்? நாங்கள் என்ன செய்வோம்? என்று கவலையுடன் கிருஷ்ணரிடம் வேண்டினார். கவலையை விடு உத்தவா! நான் இல்லாத குறையை, இதோ, பிரம்மா வழங்கிய இந்த ஸ்ரீமந்நாராயண விக்கிரகம் தீர்த்து வைக்கும். எனது அவதார முடிவில் ஏழு நாட்களுள் துவாரகையைக் கடல் கொள்ளும். அப்போது வெள்ளத்தில் இந்த விக்கிரகம் மிதந்து வரும். தேவகுரு பிருஹஸ்பதியைக் கொண்டு இதைத் தக்க இடத்தில் பிரதிஷ்டை செய் என கிருஷ்ணர் உத்தவரிடம் கூறினார்.




பிறகு கிருஷ்ணர் ஒரு வேடனின் அம்பினால் அடிபட்டு வைகுந்தம் சென்றார். மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீக்ஷித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்பயாகம் செய்தான். அதனைக்கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம்... மன்னா, இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க, யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழுநோயால் பீடிக்கப்பட்டான்.




சில காலம் கழிந்து, கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா! உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன். அதேவேளையில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி, தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து, கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தனர். ஆஹா! இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினார். ஆம் குருவே! நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம். முடிவில் இருவரும் பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தன். பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார், பரசுராமரே இந்த ஸ்ரீமந் நாராயண விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான், உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து நின்றனர். இங்கேயே விஸ்வகர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் ÷க்ஷமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார். அதன்படி, கோவில் எழுப்பப்பட்டு விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது, சிவபெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி மம்மியூர் மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.




ஆஹா, இந்த விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார். பிருஹஸ்பதியும், வாயுவும் இந்த விக்கிரகத்தை இங்கே எழுந்தருளச் செய்தனர். ஆதலால் இத்தலம் இனி, குருவாயூபுரம் என்று அழைக்கப்படும். சில தினங்களில் பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து ஜனமேஜயா! உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. ஸ்ரீகிருஷ்ணனைக் குறித்து தவமியற்று. ஸ்ரீகுருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். ஸ்ரீகிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும், அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி.... ஜனமேஜயா! உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகிவிடும் என்று கூறினார். ஆஹா! என் நோயை முற்றிலும் நீக்கிய என் ஜயனுக்கு இன்னமும் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். ஜனமேஜயன் நாடு திரும்புமுன் குருவாயூரப்பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார்.




பக்தர்களே! உடல் நலம் குன்றியவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடிப் பக்தியுடன் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று மன்னர் மக்களிடம் கூறினார். மிகவும் நன்றி மன்னா. தாங்கள் செய்துள்ள உதவி மிகப் பெரிது. ஸ்ரீகுருவாயூரப்பன் புகழ் ஓங்குக! என்றார். ஸ்ரீகுருவாயூரப்பன் இன்றளவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது கண்கூடு. மேப்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டத்திரிக்கு வந்திருந்த கடுமையான வாத நோயைக் குணப்படுத்தினார். பட்டத்திரி ஸ்ரீகுருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம், பகவானின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடலும் முடிந்தவுடன் பட்டத்திரி குருவாயூரப்பனிடம், இப்படி லீலை செய்தாயா? என்று கேட்டதாகவும் அதற்கு குருவாயூரப்பன் தலை அசைத்துச் சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.




 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar