Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காசிவிஸ்வநாதர்
  அம்மன்/தாயார்: விசாலாட்சி
  புராண பெயர்: திருக்காந்தல்
  ஊர்: ஊட்டி
  மாவட்டம்: நீலகிரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி 3 நாள் திருவிழா 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். புதுவருடப் பிறப்பு அன்றும் விஷேச நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி - 643 001, நீலகிரி மாவட்டம்.  
   
போன்:
   
  +91-423-244 6717 
    
 பொது தகவல்:
     
  இங்குள்ள சித்தர்கள் சமாதி அருள் வாய்ந்தது. (மடத்தை ஸ்தாபனம் செய்தவர்கள்). இம்மண்டபம் தியானம் செய்ய ஏற்றது.

நீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள சிவாலயம் இது என்றதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளதால் இவ்வாலயத்தில் பிரார்த்தனை செய்தால் மன அமைதி கிடைக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  மனமுருகி வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழுந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகிறது.

தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவை இத்தலத்தில்செய்தால் புண்ணியம் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்திலேயே சிறப்பு வாய்ந்த சிவதலம். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம், சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். 
    
 தலபெருமை:
     
  பாணலிங்கம் : பாணலிங்கத்திற்கு இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருக்கும்.ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம். பாண லிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

யோக தட்சிணாமூர்த்தி: மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்குவது நலம்.

 
     
  தல வரலாறு:
     
  இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882 ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் இஷ்டம் போல் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார்.

இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar