Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிவனணைந்த போற்றி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சிவனணைந்த போற்றி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிவனணைந்த போற்றி, ஆதி நாராயணன், சங்கிலிவீரப்ப சுவாமி
  அம்மன்/தாயார்: மீனாட்சியம்மன், ஸ்ரீதேவி பூதேவி
  ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, மஹா சிவராத்திரி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சிவன் சன்னிதியும், விஷ்ணு சன்னிதியும் ஒரே கோயிலில் இருப்பது இத்தல சிறப்பாகும். ஆதிநாராயணுக்கு எதிரே எமதர்ம ராஜா எழுந்தருளியுள்ளது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணசுவாமி, ஸ்ரீ மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி சங்கிலி வீரப்பசுவாமி திருக்கோவில் சிவந்திப்பட்டி கிராமம்,மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்  
   
போன்:
   
  +91 93620 12305 
    
 பொது தகவல்:
     
  விநாயகர், முருகன், மீனாட்சி சமேத சிவனணைந்த போற்றி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணன், சங்கிலி வீரப்பசுவாமி, பொன் மாடன், ஊன முத்து, எமதர்ம ராஜா ஆகிய தெய்வங்கள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு அமைந்துள்ள சிவனையும், ஆதிநாராயணனையும் வேண்டினால் நினைத்தது நிறைவேறும், திருமண தடைகள் விலகும். இங்குள்ள காவல் தெய்வமான சங்கிலி வீரப்ப சுவாமி, பொன் மாடன், ஊன முத்து ஆகிய தெய்வங்களை வணங்கினால் தொழில் விருத்தி பெறும். குழந்தை பேறு கிடைக்கும். பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். எம தர்மனுக்கு புதன் கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட்டால் எமபயம், மரண பயம் நீங்கும். என்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அபிஷேக அலங்காரம் செய்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  விஷ்ணு சன்னிதியில் திருநீறு  பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்தல விஷ்ணு சூரிய நாராயணனின்  அம்சமாக விளங்குவதால் இவருக்கு ஆதிநாராயணன் என பெயர் வந்தது. சிவபெருமான் இங்கு லிங்க வடிவமாக அருள் பாலிக்கிறார். வருடத்திற்கு ஒரு முறை மஹா சிவராத்திரி அன்று சுவாமிகளுக்கு குற்றால தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. நான்கு கால பூஜைகளும் காவல் தெய்வங்களுக்கு படைப்பு பூஜையும் நடைபெறுகின்றது.
 
     
  தல வரலாறு:
     
  சிவ பெருமான் தனது மைத்துனரான விஷ்ணுவுடன் எழுந்தருளி விஷ்ணுவின் அவதாரமான சங்கிலி வீரப்பசுவாமியையும், சிவனின் அவதாரமான பொன் மாடனையும் காவலுக்கு வைத்த தலம். சூரியனின் மகனான எமன் எமலோக பணியை மறந்து மற்ற தேவையற்றவைகளை செய்தமையால் சூரியனால் சாபம் பெற்று பூலோகம் சென்று ஆதிநாராயணனையும் சிவனையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் எமதர்மன் தனது தந்தையான ஆதிநாராயணன்(சூரிய நாராயணன்)எதிரே  இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மதுரை மற்றும் ராஜபாளையம் வாழ் விஸ்வகர்ம வம்சத்தினரால் இத்தலம் நிறுவப்பட்டது. இத்திருக்கோயிலில் கடந்த 2013ம் ஆண்டு ஆனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் சன்னிதியும், விஷ்ணு சன்னிதியும் ஒரே கோயிலில் இருப்பது இத்தல சிறப்பாகும். ஆதிநாராயணுக்கு எதிரே எமதர்ம ராஜா எழுந்தருளியுள்ளது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar