Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அம்பலவாணர்
  அம்மன்/தாயார்: சிவகாம சுந்தரி
  தீர்த்தம்: சிவகாமி புஷ்கரணி
  ஊர்: முடுக்கங்குளம்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, பிரதோஷம், மார்கழி  
     
 தல சிறப்பு:
     
  மாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது, பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில் முடுக்கங்குளம், விருதுநகர்.  
   
போன்:
   
  +91 94431 18313, 99768 35232 
    
 பொது தகவல்:
     
  ஆறுகால் மண்டபம் , பைரவர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  அரசியல்வாதிகள் இங்கு வழிபட, சிறந்த எதிர்காலம் உருவாகும். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

நீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள். சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் எழுந்ததன் அடையாளமாக பாண்டியரின் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 

கல்யாண விநாயகர்: கோயில் வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் கல்யாண விநாயகர் என்ற அழைக்கப்படுகிறார். வடக்கு முகமாக இருக்கும் இவர் கல்யாண வரம் தருபவராக அருள்கிறார். மண்டோதரி, தனது திருமணம் சிறப்பாக நடக்க அருள் பெற்றதால் இக்கோயில் கல்யாண தலமாக விளங்குகிறது. இவ்வூரில் உள்ள மக்கள், இந்தக் கோயிலில் திருமணங்களை நடத்துகின்றனர். இங்குள்ள குளத்திற்கு சிவகாமி புஷ்கரணி என்று பெயர். இதைத் தவிர கோயிலுக்குள் சதுரமான கிணறு ஒன்றும்உள்ளது.

சூரியன் பூஜிக்கும் சிவன்: மாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் சுவாமி சந்நிதி எதிரில் உள்ளது. சூரியதிசை, சூரியபுத்தி நடப்பில் உள்ளவர்கள் அம்பலவாணசுவாமியை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கும், அரசியல்வாழ்வில் இடைஞ்சலைக் களைந்து முன்னேற விரும்புபவர்களுக்கும் இக்கோயில் வழிபாடு நன்மை தரும். இக்கோயிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சுரங்கம் இருந்ததாக  கூறுகின்றனர்.

 
     
  தல வரலாறு:
     
  ராவணன் மனைவி மண்டோதரி. இவள் கன்னியாக இருந்தபோது, திருமணத்தடை நீங்க அசுரகுரு சுக்ராச்சாரியாரை நாடினாள். தென்பாண்டி நாட்டிலுள்ள முடுக்கங்குளத்தில் (நெருக்கமாக தாமரைகளைக் கொண்ட குளம்) இருக்கும் அம்பலவாணர் என்னும் நாமம் தாங்கிய சிவனை பூஜிக்கும்படி கூறினார். அதன்படி, மண்டோதரிதாமரைக்குளத்தில் நீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள். சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் எழுந்ததன் அடையாளமாக பாண்டியரின் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது, பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar