Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கருநெல்லிநாதர் ( சொக்கப்பன் )
  அம்மன்/தாயார்: சொக்கி
  தல விருட்சம்: கருநெல்லி
  தீர்த்தம்: அர்ச்சுனாநதி
  புராண பெயர்: திருத்தங்கால்
  ஊர்: திருத்தங்கல்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை மாதம் - சித்திரை திருவிழா- 11 நாட்கள் திருக்கார்த்திகை திருவிழா - பழநியாண்டிக்கு பெருவிழா பவுர்ணமி தோறும் மீனாட்சி அம்மனுக்கு திருவிளக்கு பூ‌ஜை பிரதோசம் ‌தோறும் சுவாமிக்கு புறப்பாடு செவ்வாய் தோறும் துர்க்கைக்கு அபிசேகம் ஆராதன‌ை தவிர பவுர்ணமி, அமாவாசை, பிரதோச நாட்களில் ‌கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருக்கும். தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ‌கொள்வர்.  
     
 தல சிறப்பு:
     
  அர்ச்சுனனால் உருவாக்கப்பட்ட அர்ச்சுனா நதி  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல் - 626 130 விருது‌நகர் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  பழனியில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் அருள் பாலிப்பது போல் இங்கு அதே கோலத்தில் காட்சியளிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
 

செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் வழிபட்டால் திருமணம் கைகூடுகிறது. பிரதோசம் தோறும் இந்த ஆலயம் வந்தால் பிணிகள் நீ்ங்குகிறது. பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும். கார்த்திகையில் முருகனைக் கண்டால் விதியின் வேகம் குறைந்து வாழ்க்கை வளமாகிறது.


 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு முடி இறக்குதல், சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் ‌படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். 
    
 தலபெருமை:
     
 

பஞ்சபாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது அதிகாலை வேளையில் சூரியன் உதிக்கும் வேளை கங்கா தேவியை நினைத்து வணங்கி தன்னுடைய அம்பினால் பூமியைப் பிளக்க புனிதநீர் கொப்பளித்து பூமியெங்கும் பரவி ஓடியது. பஞ்சபாண்டவர்கள் அந்த புனித நதிகளில் நீராடி பூஜைகள் முடித்து மகிழந்தனர். அந்த நதியே அர்ச்சுனா நதி எனும் புண்ணிய நதியாகும் இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். மலை மீது அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பழமையானது. திருத்தங்கல் ஊரின் பெருமை சங்க கால இலக்கியமாம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திலும் சிறப்பிக்கப்படுகிறது.


 
     
  தல வரலாறு:
     
  இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழநிக்கு சென்று தண்டாயுத பாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம். ஒருநாள் தம்பிரான் தங்கை வீரலட்சுமி அம்மாள் பழநி முருகனைத் தரிசிக்கும் ஆவலைத் தெரிவித்தார். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக்காலத்தில் பழநி சென்று வரும் இன்னல்களைத் தங்கைக்கு எடுத்துரைத்தார். ஆனால் முருகப்பெருமானை தரிசிக்கப் பிடிவீதமாக இருந்து ஒரு தைப்பூச நன்னாளில் அண்ணனுடன் கிளம்பிவிட்டார். தங்கையுடன் செல்வதால் பழநி சென்றடைய காலதாமதமாகிவிட்டது. அவருக்குக் காத்திருந்தாலும் காலதாமதம் கருதி முருகன் சள்ளிதானத்தில் பூஜைகள் முடித்தனர்.

தாமதமாக வந்த ஆறுமுகனார் முருகப்பெருமானை தரிசிக்க இயலாததால் மிகுந்த வருத்தமுற்றார். வருடம் முழுக்க இந்நன்னாளில் உன்னை தரிசிக்க வேண்டும் உன் புகழ் பாட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் வரும் எனக்கு இன்று தரிசனம் கிட்டவில்லை. உன் முன் உள்ளம் உருகி பாடவும் இயலவில்லை. உன்பெருமைகளைப் பாட இயலாத என் நா எதற்கு? என்று கூறி தன் நாவினைத் துண்டித்தார். அவரது அளப்பரிய பக்தியைக் கண்ட தண்டாயுதபாணி ஆறுமுகனாருக்குக் காட்சியளித்து ஆறுமுகத்தம்பிரானே! கலங்காதே! உனக்குத் தனிமையில் காட்சி தரவே தாமதமாக வரவழைத்துத் திருவிளையாடல் புரிந்து சோதித்தோம். உன் மெய்யான பக்தியினால் சோதனைகளை வென்றாய். இனி எம்மைத் தரிசிக்க பழநி வர வேண்டாம். உனது ஊரான திருத்தங்கல் குன்றின் மீது எமக்குக் கோவில்கட்டி என்றும் வழிபடு. தைப்பூச நாளில் அங்கேயே காவடி செலுத்தினால் போதும், எனக் கூறி நாவினை பழைய நிலையடையச் செய்தார். ஆலயங்கட்டுமளவிற்குத் தம்மிடம் பொருள் இல்லாததை தம்பிரான் எண்ண, சென்று வா, வழி பிறக்கும், என ஆசி கூறி மறைந்தார்.

புதையல்: இறைதரிசனம் பெற்று பிறவிப்பயனடைந்த ஆறுமுகத்தம்பிரான் தம் தங்கையுடன் திருத்தங்கல் நோக்கி பயணமானார். இரவு துவங்கிய போது, ஓட்டன்சத்திரம் என்ற இடத்தில் தங்கினர். அங்கு சமையல் செய்ய அடுப்புக்காகக்குழி தோண்டிய பொழுது பானை ஒன்று தட்டுப்பட்டது. பானை நிறையப் பொன்னைக் கண்டு திருக்கோவில் கட்ட முருகப்பெருமானே கொடுத்த நிதி என உணர்ந்து அப்புதையலைப் பத்திரப்படுத்தினர். பின் சமைத்து உண்டுவிட்டு அயர்ந்து உறங்கினர்.

அவ்வேளையிலே கள்வர் கூட்டம் தம்பிரானுக்குக் கிடைத்தப் புதையலைக் களவாடிச் சென்றனர். சில அடிதூரம் செல்வதற்குள் கள்வர் கூட்டம் முருகப்பெருமானின் திருவிளையாடலால் கண்ணொளி பறிக்கப்பட்டு அலறியது. அவர்களின் கூக்குரலைக் கேட்டு விழித்தார் தம்பிரான். தம் தவறை உணர்ந்த கள்வர்கள் புதையலைத் தம்பிரானிடம் ஒப்படைத்து அவரது மன்னிப்பையும் மீண்டும் கண்பார்வையினை மீட்டுத் தரவும் வேண்டினர். முருகப்பெருமானின் பேரருளை எண்ணி நெகிழ்ந்த தம்பிரான் திருமுருகனைப் பிரார்த்தனை செய்ய கள்வர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. பின் திருத்தங்கல் திரும்பிய ஆறுமுகத்தம்பிரான் முருகப்பெருமானின் திருவருளால் கிடைத்தப் புதையலைக் கொண்டு திருத்தங்கல் குன்றின் மீது பழநி தண்டாயுதபாணிக் கோவிலைப் போன்றதொரு கோவிலைக் கட்டினார். பழநி முருகன் போல் திருத்தங்கல் பழநியாண்டி அருள் சக்தி கொண்டவராய் இப்பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அர்ச்சுனனால் உருவாக்கப்பட்ட அர்ச்சுனா நதி.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar