Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரசன்ன விநாயகர்
  உற்சவர்: பிரசன்ன விநாயகர்
  ஊர்: கணபதி புதூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்

சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிரசன்ன விநாயகர் மாலை,காட்சி விநாயகர் மாலை ஆகிய பாடல்களை இயற்றியுள்ளார்.
 
     
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிவெள்ளி, மார்கழிபூஜை, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல், கார்த்திகை தீபம் விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், டெக்ஸ்டூல்(எல்.எம்.டபுள்யூ) எதிர்புறம், சத்தி ரோடு, கணபதி புதூர், கோயம்புத்தூர்- 641006.  
   
போன்:
   
  +91 99449 47151 
    
 பொது தகவல்:
     
  பிரசன்ன விநாயகர், காட்சி விநாயகர், சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை மற்றும் நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு அமைந்துள்ள பிரசன்ன விநாயகரை வணங்கினால் திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிட்டும், தொழில் விருத்தி பெறும், கல்விவளம் செல்வ வளம் பெருகும், நினைத்த காரியம் தடங்கள் இல்லாமல் வெற்றி பெறும். 
    
நேர்த்திக்கடன்:
    
  அபிஷேக அலங்காரம் செய்தும், அன்னதானம் செய்தும், சிதரு தேங்காய் உடைத்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பக்தர்களின் நினைத்த காரியம் நிறைவெற்றும் சிறப்பு பெற்ற விநாயகப்பெருமான் திருத்தலம்.
 
     
  தல வரலாறு:
     
  இத்தலமானது 1937ம் ஆண்டு சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில் நிறுவப்பட்டது. பிறகு கோயில் சேதமடைந்ததால் 2012ம் வருடம் திருப்பணி தொடங்கி 11.04.2016 அன்று தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பேரூர் ஆதினம் கயிலை குருமணி திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்களின் அருளார்ந்த ஆசிகளோடும், சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில், பேரூர் ஆதினம் இளையபட்டம் கயிலை புனிதர் தவத்திரு மருதாச்சல அடிகளார், தென்சேரிமலை திருநாவுக்கரசர் மடம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார், பேரூர் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் தவத்திரு பொன்மணிவாசக அடிகளார் ஆகியோரது முன்னிலையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar