Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காரணவிநாயகர்
  ஊர்: மத்தம்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் தொடர்ந்து திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம் - 641 019 கோயம்புத்தூர் மாவட்டம்  
   
போன்:
   
  +91-4254 - 272 900 
    
 பொது தகவல்:
     
 

காரணமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகள் இங்குள்ளன.




 
     
 
பிரார்த்தனை
    
  விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இதுதவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள காரணவிநாயகர் கோயில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்த காரணத்தால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்தனர். கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோயில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர்.

ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar