Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சீனிவாசர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சீனிவாசர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சீனிவாசர்
  உற்சவர்: வரதராஜப்பெருமாள்
  தீர்த்தம்: சஞ்சீவி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  ஊர்: உடுமலைப்பேட்டை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பவுர்ணமி, அனுமன் ஜெயந்தி, விஜயதசமி, வைகுண்ட ஏகாதசி.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயில், உடுமலைப்பேட்டை - 642 126 கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4252 - 224 755. 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் நாகர், சித்தி விநாயகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறைக்கு பின்புறம் சஞ்சீவி தீர்த்தக்குளம் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை வரம், திருமண வரம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, திருடுபோன பொருட்கள் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், ஆஞ்சநேயருக்கு வடை, வெற்றிலை, துளசி மாலைகள் சாத்தி சிறப்பு அபிஷேக வழிபாடு செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  வடக்கு நோக்கிய தலம் என்பதால் செல்வச்சிறப்பு வேண்டுவோர் இத்தலத்தில் வழிபடலாம். ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப்பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது.மேலும் மத்வாச்சாரியார், ராகவேந்தர் ஆகியோரும் பெருமாள் அருகில் உள்ளனர். மூலவர், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது சிறப்பு.

 
     
  தல வரலாறு:
     
  பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், "எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா!' என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், "அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றார். அதன்படி பக்தர், பெருமாளை கண்டெடுத்து கோயில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar