Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன்
  தல விருட்சம்: ஆலமரம்
  தீர்த்தம்: வற்றாத தீர்த்த கிணறு
  ஊர்: கோயம்புத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  5 வருடத்திற்கு ஒரு முறை பூச்சாட்டு, அமாவாசை, பௌர்ணமி பூஜைகள்  
     
 தல சிறப்பு:
     
  வடக்கு பார்த்த மாரியம்மன். பல வருடத்திற்கு முன்பே தோன்றிய வற்றாத கிணறும், என்றும் நிலையாக இருக்கு குளவி கல்லும் கோவில் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், மதுக்கரை மார்க்கெட், கோவை-641 105  
   
போன்:
   
  +91 91- 9976987945 
    
 பொது தகவல்:
     
  கோவிலின் அமைப்பு: வடக்கு பார்த்த மாரியம்மன் கோவிலின் முன்புறம் தலவிருட்சகமான ஆலமரம் உள்ளது. அதை கடந்து கொடிமரமும், அதனையடுத்து கோவிலின் கோபுரம் வருகிறது. கோபுரத்தின் உள்ளே சென்றதும் கோவிலின் பரந்து விரிந்த நான்கு முனைகளும் மனதிற்கு இதம் தரும் அழகுடன் அமைந்துள்ளது.கிழக்கு பகுதியில் திரும்பியதும் வற்றாத கிணறும், குழவி கள்ளும் இருக்கும். அதை கடந்து கோவிலை சுற்றி வரும் போது கிழக்கு பார்த்த விநாயகரும், மேற்கு பார்த்த இரண்டு நந்தி சிலைகளும் வீற்றிருக்கும். பின்னர் அம்மனை தரிசிக்க முன்புறம் வழியாக உள்ளே செல்லும் போது பார்த்த ஊஞ்சல், மற்றும் சிம்ம வாகனம் அமைந்துள்ளது. அங்கிருந்து வழிபடும் போது வடக்கு பார்த்த மாரியம்மன் வீற்றிருக்கும் அழகு தெரியும்.  
     
 
பிரார்த்தனை
    
  அம்மை, பூ போட்டு காரியம் கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் 
    
நேர்த்திக்கடன்:
    
  கெடாவெட்டு, உருவார பொம்மை, பூச்சட்டி 
    
  தல வரலாறு:
     
   350 வருடங்களுக்கு முன்பு தோன்றிய கோவில். திப்பு சுல்தான் காலத்தில் உருவானது. ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளை காரனிடமிருந்து கன்னிபெண்ணை காப்பாற்றிய குளவி கல் அந்த பெண்ணால் மதுக்கரை அங்காடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதில் சுவர் அதிகம் காணப்பட்டதாலே இந்த பகுதிக்கு மதுக்கரை என்றும் பெயர் வைக்கப்பட்டது. கன்னி பெண்ணால் கொண்டு வரப்பட்ட குளவிக்கல் மீண்டும் பலமுறை பலரால் பல இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும், மீண்டும் இதே இடத்திற்கு தானாகவே வந்துள்ளது. அந்த குளவி கல் இங்கேயே நிலையாகி போனதையடுத்து,  அது அம்மன் சக்தி என மாரியம்மன் கோவில் நிறுவப்பட்டது. குளவிக்கல் இங்கே நிறுவியதன் பின்னர் அந்த ஊர் மக்களுக்கு நல்ல காரியங்கள் அதிகமாக நடக்க துவங்கியது. மேலும் 7 ஊர் மக்களுக்கு இந்த அம்மன் குல தெய்வம். மதுக்கரை மக்களுக்கு காவல் தெய்வம். 5 வருடத்திற்கு ஒரு முறை பூச்சாட்டுதல் விழா நடைபெற துவங்கியது. முதல் பூச்சாட்டு 1938 ல் துவங்கியது. ஆரம்ப காலத்திலிருந்தே வற்றாத இந்த கிணறும் இங்கேயே இருக்கிறது. 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பாபி?ஷகம் நடைபெறும்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வடக்கு பார்த்த மாரியம்மன். பல வருடத்திற்கு முன்பே தோன்றிய வற்றாத கிணறும், என்றும் நிலையாக இருக்கு குளவி கல்லும் கோவில் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar