Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கதிர் நரசிங்க பெருமாள்
  உற்சவர்: கதிர் நரசிங்க பெருமாள்
  அம்மன்/தாயார்: கமலவல்லித் தாயார்
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: மோட்ச தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சாரத்ரம்
  புராண பெயர்: தேவர் மறி
  ஊர்: பாளையம்
  மாவட்டம்: கரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்ச்சவம் மற்றும் வைகுணட் ஏகாதசி விழா.  
     
 தல சிறப்பு:
     
  4000 வருடங்கள் பழமையான இந்த கோயிலில், மஹாபாரத போருக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுடன் வந்து வழிபட்டதாக தகவல்கள் உள்ளன. நாயக்க மன்னர்களின் முற்கால திருப்பணி நடைபெற்ற கோயிலாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 முதல் -பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 
   
முகவரி:
   
  கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில், குருணிகுளத்துப்பட்டி,பாளையம், கரூர்  
   
போன்:
   
  +91 99436 10705, 8220012717 
 
பிரார்த்தனை
    
  கோர்ட் வழக்கு உள்ளவர்கள், இராகு கேது தோஷம் நீங்க இங்கு வந்து மனமுருகி வழிபட்டால், வெற்றி நிச்சயம். மேலும் தனி சன்னிதியில் ஈசான மூலையில் காட்சி தரும் சேஷத்திர பாலகரான ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட,  மனநோய் நீங்கும். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரதி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்திலும், சனிக்கிழமை தோறும் நெய் விளக்கு ஏற்றி வழி பட்டால் சத்ரு ஜெயம் உண்டாகும். 
    
 தலபெருமை:
     
  எல்லோர் வாழ்விலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது.எல்லா துன்பத்தையும் போக்கி, ஒரே வரியில் கேட்டதை தரும் மந்திரம் இது. வீட்டில்லட்சுமி நரசிம்மர் படம் வைத்து , பசும் பாலுடன் சிறிது கற்கண்டு பொடி கலந்து படைத்து, இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் 48 தடவை சொல்லி வந்தால் , நினைத்தது கைகூடும். ‘லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே’ கரூர் மவாட்டத்தில் தேவர் மறி என்ற தல பெயருடன். கிழக்கு நோக்கிய நிலையில் சுமார் நான்கு அடியுடன் உள்ள கதிர் ஸ்ரீ நரசிங்கபெருமாள் கோயில் இது. மஹா லட்சுமி கமலவல்லி என்னும் திருநாமத்துடன்க தனி சன்னிதியில் அமர்ந்து கேட்ட செல்வத்தை தரும் செல்ல தாயாராக வீற்றிருக்கிறார்.  
     
  தல வரலாறு:
     
  தன் பக்தன் சொன்ன வார்த்தையை உண்மையாக்குவதிற்க்காக தூணில் இருந்து ஸ்ரீ நரசிம்மராக அவதாரம் செய்து இரண்யன் என்ற அரக்கனை வதம் செய்ததால் ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பெருமாளின் உக்கிரத்தை தணிக்க தேவர்கள் இந்த இடத்தில் தீர்த்ததை உண்டாக்கி அந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்தார்கள்.  அதனால் சாந்தம் அடைந்த பெருமாள் தர்ம விதியின் ஏற்பட்ட தோஷம் நீங்கி, சாந்த மூர்த்தியாக, நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் பின் கைகளில் தாங்கி,  வலது திருக்கை அபய அஸ்தமாகவும், இடது திருக்கை அபயம் தரும் ஆ-ஹ்வான முத்திரையுடன்  வீராசனம் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 4000 வருடங்கள் பழமையான இந்த கோயிலில், மஹாபாரத போருக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுடன் வந்து வழிபட்டதாக தகவல்கள் உள்ளன.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar