Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கல்யாணவெங்கட்ரமணர்
  உற்சவர்: ஸ்ரீ நிவாசர்
  அம்மன்/தாயார்: ஸ்ரீ தேவி பூமிதேவி
  புராண பெயர்: தட்சிணாதிருப்பதி
  ஊர்: தான்தோன்றிமலை
  மாவட்டம்: கரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி உற்சவம் - 22 நாட்கள் - 1 லட்சம் பக்தர்கள் கூடுவர் மாசி மகத்தேர் - 17 நாட்கள் - 50 ஆயிரம்பேர் கூடுவர் கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பெருமாள் பாறையில் பிரம்மாண்டமான சுயம்பு மூர்த்தியாக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் செருப்பை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில், தான்தோன்றிமலை - 639005, கரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4324 2355531, 2365309 
    
 பொது தகவல்:
     
  இத்தலப் பெருமாள் ஏக தள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
 

உடம்பின் மீதுள்ள மரு ஏற்பட்டால் நிவர்த்தி செய்ய உப்பு மிளகு வெல்லம் போட்டு பெருமாளை பிரார்த்தனை செய்தல் வேண்டும். தவிர குழந்தை பாக்கியம், கல்யாண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உடம்பு சம்பந்தமான எந்த வியாதியானலும் பெருமாளை பிரார்த்தனை செய்தால் குணம் அடைகிறது.




 
    
நேர்த்திக்கடன்:
    
  அபிசேகம், சந்தனக்காப்பு கல்யாண உற்சவம் ஆகியவை பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சுந்தனம் பூசுதல், பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  இது ஒரு குடவரைக்கோயில்.

செம்மாலி சமர்ப்பணம் : செருப்பு தைக்கும் சக்கிலியர் என்ற இனத்து பெரியவர்கள் கனவில் பெருமாள் வந்து தனது வலது காலுக்கோ அல்லது இடது காலுக்கோ அல்லது இரண்டு கால்களுக்குமோ அளவு சொல்லி அதேபோல் செய்து கொண்டு வரச் சொல்கிறார். அந்த இனத்து மக்கள் பெருமாளுக்கு மனதுக்கு பிடித்த அவர் சென்ன அளவுள்ள செருப்புகளை தயாரித்து கொண்டு கோமாளி வேசம் போட்டு கொண்டு வந்து பெருமாளுக்கு படைப்பர். இது இக்கோயிலில் விசேசமான ஒன்று. இதற்கு செம்மாலி சமர்ப்பணம் என்று பெயர்.

குடவரைக் கோயில் என்பது சிறப்பு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில். சுவாமி அருபி(ரூபம் கிடையாது) தென் திருப்பதி என்ற பெயர் பெற்றது. மார்பில் வட்டிஸ்தலத்தில் லட்சுமி (தாயார்) உள்ளார். திருப்பதியில் இருப்பது போல இங்கும் தனியாக தாயார் சன்னதி இல்லை.
 
     
  தல வரலாறு:
     
  சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம் மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார்.தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar