Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன் (மகாமாரி)
  புராண பெயர்: கருவூர்
  ஊர்: கரூர்
  மாவட்டம்: கரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசிப் பெருந்திருவிழா - 21 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழா. தவிர ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி பெரிய கார்த்திகை பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிசேக ஆண்டுவிழா, பங்குனி உத்திர திருவிழா நாட்களின் போதும் பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் - 639 001, கரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4324- 246 0146 
    
 பொது தகவல்:
     
 

இந்துக்கள் தவிர அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் ஆலயம்.




 
     
 
பிரார்த்தனை
    
  அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்தல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை. இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசேகம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். 
    
 தலபெருமை:
     
  திருமண தத்துவம்:  மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித் தாயின் வயிற்றில். எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.

கிரமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.

வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar