Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மருதாந்தநாதேஸ்வரர்
  அம்மன்/தாயார்: சுந்தர காஞ்சனி
  ஊர்: ஆங்கரை
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மருதாந்தநாதேஸ்வரர் திருக்கோயில், லால்குடி, ஆங்கரை திருச்சி மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  இங்கு தட்சிணாமூர்த்தி, விநாயகர், தண்டபாணி, சுப்ரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. ஒரே பிரகாரம் கொண்ட இக்கோயிலில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரக சன்னதியும் உள்ளது. 1968ல் கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  இக்கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் தெற்கு நோக்கிய வாசலே பயன்படுத்தப்படுகிறது. அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும், சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அமைக்கப்பட்டு, ஒரே மண்டபமாக கட்டப்பட்டுள்ளது.

அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.
 
     
  தல வரலாறு:
     
  மருதாந்தன் என்பவன் சுஹோலர் என்ற முனிவரின் மகன். முனிவரின் மனைவி தறிகெட்டு நடந்தாள். எனவே முனிவர் அவளை ஒதுக்கிவிட்டார்.
விலகிப்போன மனைவியோ பாவத்தொழிலை செய்துவந்தாள். மருதாந்தன் வாலிபனானான். அந்நாட்டு இளவரசனின் நட்பு அவனுக்கு கிடைத்தது. இளவரசன் பெண்பித்தனாக இருந்தான். அவனோடு சேர்ந்த மருதாந்தனும் அவனைப்போலவே ஆனான். ஒருமுறை அவர்கள் தங்களைவிட வயதில் கூடிய ஒரு பெண் வீட்டிற்கு சென்றனர்.

அந்த பெண்ணிற்கோ இளவரசனுடன் வந்திருந்த வாலிபனைப் பார்த்ததும் சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன்பிறகே அந்த பெண் வந்த வாலிபன் தனது மகன் என்பதை தெரிந்துகொண்டாள். அந்த வாலிபனோ எப்பேர்ப்பட்ட பாவத்தை செய்துவிட்டோம் என புலம்பித் தீர்த்தான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. காட்டில் போய் தியானத்தில் அமர்ந்துவிட்டான். இறைவனைக் காணாதவரை எதுவுமே சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்தான். அறியாமல் பெரும்பிழை செய்த அந்த வாலிபனின் முன் சிவபெருமான் தோன்றினார். அவன் செய்த பிழைக்கு மன்னிப்பு வழங்கினார்.

""எந்த ஒரு வாலிபனும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவனது தாயாகவே கருதவேண்டும். இதை உலகிற்கு உணர்த்தவே இந்த கொடும் நாடகம் ஆடினேன். கலியுகத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழலாம். அவர்கள் எல்லாம் திருந்தவே இவ்வாறு செய்தேன்,'' என்றார். இருப்பினும் அந்த வாலிபனின் மனது படாதபாடு பட்டது. இந்த தோஷத்திற்கு விமோசனம் என்ன என கேட்டான். அதற்கு இறைவன் தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட்டால் பாவம் தீரும் என்றார். அதன்பின் தனது சொந்த உழைப்பில் மருதாந்தன் சிவனுக்கு கோயில் அமைத்தான். அவனுக்கு அம்பாள் ஆறுதல் கூறினாள். சுந்தர காஞ்சனி அம்பாள் என இவள் அழைக்கப்படுகிறாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்பாளையும் சுவாமியையும் ஒரே நேரத்தில் சுற்றிவந்துவிடலாம். இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar