Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஏகாம்பரேஸ்வரர்
  அம்மன்/தாயார்: அன்ன காமாட்சி
  ஊர்: ஓமாந்தூர்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, பொங்கல், ஆங்கிலவருடப்பிறப்பு, ஆடி 18, ஆடி 28.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 முதல் பகல் 2 மணி வரை திறக்கப்படும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில் ஓமாந்தூர், திருச்சி.  
   
போன்:
   
  +91 4327-235 640 
    
 பொது தகவல்:
     
  ஓமாந்தூரில் தங்கிய தெய்வங்களுக்கு சிலைகள் எதுவும் வடிக்கப்படவில்லை. அன்னகாமாட்சியம்மன், பெரியண்ண சுவாமி, ஏகாம்பரேஸ்வரர், தேவராய சுவாமி, கவுதாரி அம்மன், முனீஸ்வரர், கரட்டடியான், பச்சைநாச்சி அம்மன், சண்டிகேஸ்வரர், கவுதாரி அம்மன், லாடப்ப சன்னாசி, மதுரை வீரன், புதுகருப்புசாமி, பச்சாயி அம்மன், காத்தவராயன், பைரவர் ஆகியோருக்கு தனிசன்னதிகளும், மாசிகருப்பண்ணசுவாமி, நல்லேந்திர சுவாமி, ஜலகண்டேஸ்வரர், அப்பச்சியாயி குப்பச்சியாயி ஆகியோருக்கு ஒரு சன்னதியும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் கல்வி அறிவு பெறவும், திக்கு வாய் மற்றும் நோய்கள் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அனைத்து தெய்வங்களும் ஜோதி வடிவில் இருப்பதால் சந்நிதிகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை, மாறாக விளக்குகளுக்கு தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஓமாந்தூரில் தங்கிய தெய்வங்களுக்கு சிலைகள் எதுவும் வடிக்கப்படவில்லை. அன்னகாமாட்சியம்மன், பெரியண்ண சுவாமி, ஏகாம்பரேஸ்வரர், தேவராய சுவாமி, கவுதாரி அம்மன், முனீஸ்வரர், கரட்டடியான், பச்சைநாச்சி அம்மன், சண்டிகேஸ்வரர், கவுதாரி அம்மன், லாடப்ப சன்னாசி, மதுரை வீரன், புதுகருப்புசாமி, பச்சாயி அம்மன், காத்தவராயன், பைரவர் ஆகியோருக்கு தனி சன்னதிகளும், மாசிகருப்பண்ணசுவாமி, நல்லேந்திர சுவாமி, ஜலகண்டேஸ்வரர், அப்பச்சியாயி குப்பச்சியாயி ஆகியோருக்கு ஒரு சன்னதியும் உள்ளன. ஆனால், விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிகிறது. ஓமரிஷி , தென்கைலாசம், முப்பத்துமுக்கோடி தேவர்கள், நாற்பத்தொன்றாயிரம் ரிஷிகள், நாயன்மார்கள், சப்தரிஷிகள், மகாமுனீஸ்வரர், செட்டியப்பன், புரவியப்பன், முத்துகருப்பண்ண சுவாமி ஆகிய தெய்வங்கள் சுவர் போன்ற அமைப்பிலும் (மேடை) அமைக்கப்பட்டுள்ளன. சன்னதியில்உள்ள தெய்வ ஜோதிகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது, பக்தர்களுக்கு இந்த ஆரத்தி தரப்படுவதில்லை. அம்மன் ஜோதி உள்ள சந்நிதியின் பின்புறம் ஸ்ரீசக்ரமகாமேரு யந்திரம் செதுக்கப்பட்டுள்ளது.

வேலுடன் கோயில் வலம்:
மாசி பெரியண்ண சுவாமி சந்நிதி எதிரில் கொடிமரத்துக்கு பதிலாக பெரிய வேல் ஊன்றப்பட்டுள்ளது. விழா காலங்களில் பக்தர்கள் கல்வி அறிவு பெறவும், திக்கு வாய் மற்றும் நோய்கள் நீங்கவும் உடுக்கை அடிக்கப்படுகிறது.

பக்தர்கள் தீபம் ஏற்றுவதில்லை:
அனைத்து தெய்வங்களும் ஜோதி வடிவில் இருப்பதால் சந்நிதிகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை, மாறாக விளக்குகளுக்கு தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர். திருநீறுக்கு பதிலாக புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி நாட்களில் கோயில் திறப்பதில்லை.

சிவராத்திரி சீர்வரிசை:
சிவராத்திரியன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. ஊரின் தென்பகுதியிலுள்ள நாச்சியாரம்மனுக்கு, கோயில் சார்பில் சீர் வழங்கப்படுகிறது. தேங்காய், வாழைப்பழம், வேகவைத்த பயறுவகை, 64 பானைகளில் சுண்டல், பூஜைபொருட்கள், மாலைகள் பெரிய பூஜாரியார் தலைமையில் கொண்டு சென்று வழங்கப்படுகிறது. பின்னர் சுண்டல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  காராளன் என்ற பத்து வயது சிறுவன் கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள ஜெம்பு ஏரி பகுதியில் (தற்போதைய புளியஞ்சோலை) 800 ஆண்டுகளுக்கு முன் பெற்றோருடன் வசித்து வந்தான். இவனது தொழில் மாடு மேய்ப்பது. அப்போது, கொல்லிமலையிலுள்ள பெரியண்ண சுவாமியை மலையாள மக்கள் பூஜித்து வந்தனர். அவர்கள் விசேஷமாகச் செய்யும் பூஜைகளில் குறிப்பிட்டவர்களை தவிர மற்றவர்கள் பங்கேற்க அனுமதிப்பதில்லை. மலையாள பூஜாரியார் மகனும், காராளனும் நண்பர்கள். ஒருமுறை காராளன், பூஜையைக் காண விருப்பம் தெரிவித்தான். யாரும் அறியாமல் பரண் அமைத்து அவர்கள் பூஜையை பார்த்தனர். அப்போது அருள் வந்த மலையாள பூஜாரி, நம்முடைய தெய்வீக அந்தரங்கங்களை அந்நியன் ஒருவன் பார்த்து அறிந்து கொண்டான். அவனை வெட்டுங்கள், என உத்தரவிட்டார். காராளன் பிடிபட்டு தண்டனையை மறுநாள் காலை நிறைவேற்றுவதற்காக ஓரிடத்தில் சிறை வைக்கப்பட்டான். அவன் பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மனின் பக்தன். தனது நிலை குறித்து சுவாமியிடம் வேண்டினான். இரவில் தன்னை மறந்து உறங்கும்போது, கனவில் வந்த பெரியண்ண சுவாமி, இங்கிருந்து தப்பி இரவோடு, இரவாக உன் மாடுகளுடன் தென்திசை சென்றுவிடு, ஒவ்வொரு இரவும் தங்கி, பின் தொடர்ந்து பயணம் செய். எந்த இடத்தை விட்டு மாடுகள் போகாமல் சுற்றி வருகிறதோ, அங்கு நான் கோயில் கொள்வேன். அந்த இடத்தில் நீயும் உன் சந்ததியினரும் எனக்கு கோயில் கட்டி பூஜை செய்ய வேண்டும், என்று கூறி மறைந்தார். அதன்படி காராளன் அங்கிருந்து தப்பி தன் பெற்றோருடன் ஒரு குன்னிமரத் தோட்டத்துக்கு வந்தனர். அங்கே மாடுகள் சுற்றி சுற்றி வந்தன. அப்போது பேரிரைச்சலுடன் சுழற்காற்று வீசியது. மாடுகள் கதறின. காராளன் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டான். அன்னகாமாட்சி அம்மனும், மாசி பெரியண்ண சுவாமியும் அசரீரியாக, நாங்கள் இங்கே தங்கியுள்ளோம், நீங்களும் இங்கேயே பாதுகாப்பாக தங்கி கொள்ளலாம், என்று கூறியதை தொடர்ந்து காராளன் அங்கு தங்கினான். தொடர்ந்து அப்பகுதியில் கோயில் கட்டப்பட்டது. துரையூர் ஜமீன்தார் மண்டபங்களை கட்டினர். அவர்கள் தங்கிய இடமே ஓமாந்தூர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar