Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நாராயணன்
  உற்சவர்: வரதராஜ பெருமாள்
  அம்மன்/தாயார்: லட்சுமி
  ஊர்: இடையாற்றுமங்கலம்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் இடையாற்றுமங்கலம், லால்குடி, திருச்சி மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். அதையடுத்து மகாமண்டபம். மகாமண்டபத்தின் நடுவே கருடாழ்வார் பெருமாளைப் பார்த்தபடி நின்ற கோலத்தில் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலதுபுறம் ஆஞ்சநேயரின் சன்னதி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலை துவாரபாலகர்களின் சுதைவடிவத் திருமேனி அலங்கரிக்க, அர்த்த மண்டபத்தில் பெருமாளின் உற்சவத் திருமேனி உள்ளது. வரதராஜப் பெருமாள் என்று திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார், உற்சவர். அலங்காரப் பிரியரான பெருமாளுக்கு இங்கு நடக்கும் அலங்கார ஆராதனைகள் அற்புதமானவை. அடுத்துள்ள கருவறையில் பெருமாள், லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள ஆஞ்சநேயரை மனமுருகி வேண்டினால் சனிதோஷ நிவர்த்தி ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், வடை மாலையும் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை வழிபடுவதால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும்; மனவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் எனவும் பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக திருவோண நட்சத்திரத்தில் பெருமாளையும் தாயாரையும் ஆராதனை அபிஷேகம் செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும் செயலாகும். உற்சவர் வரதராஜ பெருமாள் அனைத்து வரங்களையும் தரக்கூடியவர். வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை ஆகிய நாட்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளும் தாயாரும் வீதியுலா வருவதுண்டு. இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று இவரிடம் வேண்டிக் கொள்ளும் கன்னியரின் கவலையை நீக்கி அவர்களுக்கு நல்ல வரன் அமைந்திட வரம் தருவதாக கன்னிப்பெண்கள் நம்புகின்றனர். குழந்தைச் செல்வம் இல்லையே என ஏக்கத்துடன் இந்த ஆலயம் வரும் தம்பதியர் தங்களுடன் ஒரு சிறிய மரத் தொட்டிலை கொண்டு வருகின்றனர். அந்தத் தொட்டிலை இந்த ஆலயத்தில் கயிற்றிலோ அல்லது சேலையிலோ கட்டுகின்றனர். பின்னர் இந்த சந்தானகோபால கிருஷ்ணனை அந்தத் தொட்டியில் இட்டு தொட்டிலை மெல்ல ஆட்டுகின்றனர். அச்சமயத்தில் சிலர் ரம்மியமாய் பாடுவதும் உண்டு. பின்னர் மூலவருக்கு அர்ச்சனையோ அபிஷேக ஆராதனையோ செய்துவிட்டு நிறைந்த மனதோடு இல்லம் திரும்புகின்றனர். இந்தத் தம்பதியர் மறு ஆண்டு தங்கள் வீட்டில் தொட்டி கட்டி அதில் தங்கள் குழந்தையைக் கிடத்தி தாலாட்டுப் பாடுவது நிச்சயம் என்கின்றனர், பலனடைந்த பக்தர்கள். தங்களது பிரார்த்தனை பலித்ததும் மீண்டும் இந்த ஆலயம் வரும் தம்பதியர், பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நன்றிக் கடனை கண்ணீர் மல்க செலுத்தும் காட்சி இங்கு அடிக்கடி காணக்கூடியது. இங்கு உற்சவர் வரதராஜப் பெருமாளின் அருகே சுமார் 20 செ.மீ. உயரத்தில் சந்தான கோபால கிருஷ்ணனின் விக்ரகம் ஒன்றுள்ளது.



 
     
  தல வரலாறு:
     
  கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar