Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஐயப்பன்
  ஊர்: சாஸ்தாநகர்
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகர ஜோதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பவானி கூடுதுறையில் உற்சவருக்கு ஆறாட்டு நடத்தி, யானையின் மேல் திருவாபரண பெட்டி வைத்து வீதியுலாவாக சேலம் கொண்டு வரப்பட்டு, "கூச' மலையில் கற்பூர ஜோதி ஏற்றப்படுகிறது. அதேபோன்று தினமும் கணபதிஹோமம் செய்து கோயிலை சுத்தம் செய்தும், பூஜைக்கு பின்னர் இரவு ஹரிவராசனத்துடன் நடையை சாத்துகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை இத்தலத்தில் சிறப்பு. சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சாஸ்தாநகர் - சேலம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 9842743430 
    
 பொது தகவல்:
     
 

கோயிலின் உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது பலிபீடமும், 42 அடி உயர கொடி மரமும்தான். இடது பக்கத்தில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. கோயிலுக்குள் நடு நாயகமாக பிறந்த குழந்தையை போன்று, சாந்தமே உருவாக காட்சியளிக்கிறார் ஹரிஹர மைந்தன். வலப்பக்கத்தில் அவரது சகோதரன் "ஆனைமுகன்' அருள்பாலிக்கிறார். மேலும் தியான மண்டபம், இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வோர் அமர்வதற்கு தேவையான இடம் உள்ளிட்ட இதர வசதிகள் உள்ளது.


 
     
 
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை தமிழகத்தில் எங்குமில்லை. புதுச்சேரி மாநிலத்தின் புகழ் பெற்ற திருநள்ளாறு தலத்தில் கூட இப்பூஜை இல்லை. ஆனால், இந்த பூஜை சேலம் சாஸ்தாநகர் ஐயப்பன் கோயிலில் நடக்கிறது.


தோஷ நிவர்த்தி கோயில் : குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இந்த குறையுடன் வருபவர்களுக்காக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மேலும் சனிதோஷம் உள்ளவர்களுக்காக "நீராஜனம்' என்ற விசேஷ பூஜை இங்கு செய்யப்படுகிறது. இந்த பூஜை சனிபகவான் ஸ்தலமான திருநள்ளாறு கோயிலில் கூட இந்த பூஜை ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் நவக்கிரக ப்ரீதியும் செய்யப்படுகிறது.


ஆண்டுதோறும் "சகஸ்ர கலசாபிஷேகம்' நடக்கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து "புனித நீர்' கொண்டுவரப்படுகிறது. அந்த சமயத்தில் பிரம்மாண்டமான வேள்வி நடத்தி, புண்ணிய நதிகளின் நீரை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு பூஜை செய்வர்.


சேவை : ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்கள் தங்க இடமும், உணவும் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

ஐயப்பக்தர்கள் ஐயப்பனுக்கு சேலத்தில் சன்னிதானம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஒரு டிரஸ்டை துவக்கினர். ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் தோன்றிய விதமே சுவாரஸ்யம் தான். சேலத்தில் எந்த இடத்தில் கோயில் கட்டலாம் என்று குரங்கு சாவடி சென்றாய பெருமாள் கோயிலில் நிர்வாகிகளிடம் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை செய்தபோது, திடீரென ஒரு ஒளி தோன்றி கோயில் அமைக்கும் இடத்தை காண்பித்ததாம். அதன் பிறகு அந்த இடத்தை வாங்கி, அங்கு கோயில் நிர்மானிக்கும் வேலைகளை துவக்கினர்.


கோயிலுக்கான வரைபடத்தை "காணிப்பையூர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி' வரைந்து கொடுத்தார். இவர் சபரி மலை மற்றும் குருவாயூர் கோயில்களை நிர்மானித்த பரம்பரை வழி வந்தவர். பின்னர் கோயிலை மகாபலிபுரம் கணபதி ஸ்தபதி கட்டி முடித்தார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை இத்தலத்தில் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar