Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரசன்ன வெங்கடாஜலபதி
  உற்சவர்: பூதேவி-ஸ்ரீதேவி சமேத ஆதிபெருமாள்
  அம்மன்/தாயார்: அலமேலுமங்கை-பத்மாவதி
  ஊர்: செவ்வாய்ப்பேட்டை
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கார்த்திகையில் தீப அலங்கார பூஜை, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி. அன்று ஏகாதசி மண்டபத்தில் உற்சவர் மண்டபத்தில் காட்சி தருவார். தைப்பூசத்தன்று கருடசேவை, புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், கார்த்திகை பஞ்சமி திதியில் தாயாருக்கு ஐந்து நாள் பிரம்மோற்ஸவம், ஆழ்வார்கள் திருநட்சத்திரம், தீபாவளி.  
     
 தல சிறப்பு:
     
  பாண்டிய மன்னர்களின் காலத்தில் மூடப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றின் மீது கருவறை அமைக்கப்பட்டுள்ளது.மன்னர்கள் இந்த சுரங்கப்பாதையை ஆபத்து காலத்தில் பயன்படுத்திய போது, இந்தப் பெருமாளே தங்களுக்கு காவலாக இருக்க வேண்டும் என வணங்கிச் சென்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் செவ்வாய்ப்பேட்டை, சேலம்.  
   
போன்:
   
  +91 94877 09883 
    
 பொது தகவல்:
     
  மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி, பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக திருமணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தனித்தாயாராக அலமேலுமங்கை பத்மாவதி தாயார் உள்ளார். பூதேவி, ஸ்ரீதேவி சமேத ஆதிபெருமாள், கருடாழ்வார், வீரஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்பெருமாள், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார்கள் ஆகியோர் சுற்றுப்புற மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள கருடாழ்வாரை வணங்கினால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இங்குள்ள அனுமானை வழிபட்டால் அறிவு, பலம், தைரியம், கீர்த்தி, செல்வாக்கு வளரும். 
    
நேர்த்திக்கடன்:
    
  புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் வஸ்திரம் சாத்தி, திருமஞ்சனமும் அலங்காரமும் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கை, நேர்த்திக் கடனைக் கூட பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு செலுத்துகின்றனர்.


தோஷம் நீக்கும் கருடாழ்வார்: இங்குள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்குவதால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இவருக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து வணங்குவதால் நல்ல பலன் கிடைக்கிறது. இங்குள்ள அனுமானை வழிபட்டால் அறிவு, பலம், தைரியம், கீர்த்தி, செல்வாக்கு வளரும்.


சுதர்சன சக்கரப்பாடல்: தீர்க்காயுளுடன் வாழ, விருப்பங்கள் நிறைவேற, நல்ல குடும்பம் அமைய, திருமணமாக, தெளிவான அறிவு பெற, மனம் மகிழ்ச்சியடைய, எதிரிகளால் ஏற்படும் சிரமம் நீங்க, பாவங்கள் தொலைய, வீடுகட்ட, செல்வம் பெருக, செயல்பாடுகள் அனுகூலமாக, ஆபத்து அகல, மனக்குறை நீங்க, சோம்பல் ஒழிய, உயர் பதவியடைய, துக்கம் விலக, புகழும் கீர்த்தியும் பிரகாசிக்க, குடும்பம் நலம் பெற, குபேரசம்மந்தம் அடைய, பக்தி பெருக, அரசு தேகபலம் பெற, பயம் பாவம் போக, தொலைந்த பொருள் கிடைக்க, சிறப்பாக படிக்க, தொழில் வளர, ஆன்மிக அறிவு ஏற்பட, நாடும் வீடும் நலம் பெற இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் பக்தர்கள் சுதர்சன சக்கரப்பாடல் பாடி வழிபடுகின்றனர். காலையும், மாலையும் விளக்கேற்றி, சக்கரத்தாழ்வாரை ஒரு முகமாய் மனத்தில் நினைத்து பாடல்களைப் பாடுவோருக்கு எண்ணியது ஈடேறும் என்ற நம்பிக்கையுள்ளது.


 
     
  தல வரலாறு:
     
  பாண்டிய மன்னர் ஒருவர் தன்னுடைய குருவிடம், மந்திர உபதேசம் பெற்று, தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த செவ்வாய்பேட்டையில் பெருமாள் எழுந்தருள பக்தர்களுடன் சேர்ந்து கடும் தவம் புரிந்தார். தவத்தை ஏற்ற பெருமாள், திருமணக்கோலத்தில் தாயார்களுடன் காட்சி தந்தார். தான் கண்ட பெருமாளுக்கு பிரசன்ன வெங்கடாஜலபதி என்று பெயரிட்ட மன்னர், தன் முன்னால் தோன்றிய பெருமாளைப் போலவே சிலை வடித்தார். பின்பு கோயில் கட்டப்பட்டது. மீன் சின்னத்தையும் பொறித்தார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பாண்டிய மன்னர்களின் காலத்தில் மூடப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றின் மீது கருவறை அமைக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் இந்த சுரங்கப்பாதையை ஆபத்து காலத்தில் பயன்படுத்திய போது, இந்தப் பெருமாளே தங்களுக்கு காவலாக இருக்க வேண்டும் என வணங்கிச் சென்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar