Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ரங்கநாதர்
  அம்மன்/தாயார்: கடல்மகள் நாச்சியார்
  தீர்த்தம்: சரஸ்வதி தீர்த்தம்
  ஊர்: திருப்பாற்கடல்
  மாவட்டம்: வேலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி மாதப் பிறப்புகள்  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள இறைவனின் மூர்த்தம் அத்தி மரத்தால் செய்யப்பட்டிருப்பது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், திருப்பாற்கடல், வேலூர் மாவட்டம்.  
   
 
பிரார்த்தனை
    
  கல்வியில் மேன்மை பெறவும், மனச் சஞ்சலத்தில் இருந்து விடுபடவும், திருமணமாகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறவும், ம்ருத்ய தோஷங்கள் விலகவும் பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில் இங்கு வந்து, செவ்வாழை, அத்திப்பழம், நல்லெண்ணைய் தானம், ஆஞ்சநேயருக்கு கூழ்பாண்டம், பூசணிக்காய் தானம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஆதிசேஷனின் மேல் சயனித்த திருக்கோலத்தில், சுமார் 9 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீரங்கநாதர். அத்தி ரங்க அத்தி ரங்க ஆதிமூல சுவாமியாம்; இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம் என்பதற்கு ஏற்ப, அத்தி மரத்தாலான மூர்த்தமாக சேவை சாதிக்கிறார். அத்தி ரங்க தரிசனம், பாவ வினைகளை எல்லாம் போக்கும் என்பர். சித்ரகுப்தன், அத்தி மர சமித்துகளைக் கொண்டு மிகப்பெரிய ஹோமம் நடத்தி திருமாலை வழிபட்டிருக்கிறான். எனவே, திருப்பாற்கடல் தலத்துக்கு வந்து, ஸ்ரீரங்கநாதரை பிரார்த்திக்க, சித்ரகுப்தன் எழுதி வைத்துள்ள மொத்தப் பாவக் கணக்குகளும் நீங்கும்; வைகுண்டப் பதவியை அடையலாம் என்று நிகமாந்த மகாதேசிகர் தனது மெய்விரத மான்யத்தில் அருளிச் சென்றுள்ளார். நாராயண சதுர்வேதிமங்கலம் என ஆதியில் அழைக்கப்பட்டு, தற்போது திருப்பாற்கடல் என அழைக்கப்படும். சப்தக விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார் திருமால். சப்த ரிஷிகளும் இங்கு வாசம் செய்து, பரம்பொருளை வழிபடுவதாக ஐதீகம். விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில் இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட, சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை. கல்வியில் மேன்மை பெறவும், மனச் சஞ்சலத்தில் இருந்து விடுபடவும், கால்கள் சம்பந்தமான பிரச்னைகள் நீங்கப் பெறவும் நல்லெண்ணெய் தானம் செய்து, அத்தி ரங்கனை வழிபடுவது சிறப்பு என்கின்றனர். இங்கு 116 விரலி மஞ்சளைக் கொண்டு மாலையாக்கி அத்திரங்கப் பெருமாளுக்கு சார்த்தி வழிபட, திருமணமாகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். கருடாழ்வாருக்கு ராகு காலத்தில் தேன் திருமஞ்சனம் செய்து வழிபட்டால், நோய்களும் தோஷங்களும் நீங்கும்; சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கு கூழ்பாண்டம் செய்து (11 எண்ணிக்கை கொண்ட பூசணிக்காய் மாலை) மாலை சார்த்திப் பிரார்த்தித்தால், ம்ருத்ய தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.  
     
  தல வரலாறு:
     
  திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர்; படைப்புக்கு அதிபதி என்று மகா பெருமையுடன் திகழும் பிரம்மாவுக்கு ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவமே திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது. கர்வம் என்பது நமக்கெல்லாம் அலட்டல். ஆனால் இறைவனின் கர்வத்தில், உலக உயிர்களுக்கான பாடம் அரங்கேறும் விளையாட்டு நிகழும். ஒரு கட்டத்தில், உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா, தற்போதைய காஞ்சியம்பதிக்கு வந்து திருமாலை மனதில் நிறுத்தி, யாகம் ஒன்றை நடத்துவது என முடிவு செய்தார். மனைவியை அருகில் வைத்துக் கொண்டு யாகமும் பூஜையும் செய்வதுதானே மரபு! எனவே, சரஸ்வதி தேவியை யாகத்துக்கு வரும்படி அழைக்க... கர்வத்துடன் திரிவது கணவனேயானாலும் மன்னிக்க மாட்டேன் என்று சொல்லி, வர மறுத்தாள். உடனே, சாவித்திரியையும் காயத்ரியையும் அழைத்துக் கொண்டு, யாகத்துக்குப் புறப்பட்டார் பிரம்மா. இதில் ஆவேசமானாள் சரஸ்வதி. அவளும் பூமிக்கு வந்தாள். நதியாக உருவெடுத்து, யாகம் நடைபெறும் இடத்தையே தண்ணீரில் மூழ்கச் செய்வது எனத் திட்டமிட்டாள். பூமிக்கு வந்தவள், நதியானாள். கடும் உக்கிரத்துடன் மிக வேகமாகப் பாய்ந்து வந்தாள். இதனால், அந்த நதிக்கு, வேகவதி எனப் பெயர் அமைந்தது. மனிதர்கள்தான் இனமும் குணமும் பார்ப்பார்கள். எந்தப் பாகுபாடுகளும் இன்றி, ஆட்கொள்பவன் ஆண்டவன் மட்டுமே! ஆகவே பிரம்மாவின் யாகத்தையும், அதனைக் கலைக்க சரஸ்வதிதேவி, நதியாக உருவெடுத்து வந்திருப்பதையும் அறிந்த திருமால், தன் பக்தனுக்கு வந்த சோதனையை முறியடிக்கத் திருவுளம் கொண்டார். யாகம் நடைபெறும் இடத்தை நோக்கி, சீறிப் பாய்ந்தபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த வேகவதி நதிக்கு முன்னே.. தன் ஆதிசேஷனின் பிரமாண்டமான திருவுருவத்தை அப்படியே அணையாக்கிக் கொண்டு, அந்த ஆதிஷேசன் மீது மிக ஒய்யாரமாகச் சயனித்திருந்தார் திருமால். திருப்பாற்கடலில் சயனித்துள்ளதைப் போலவே எதிரில் வீற்றிருக்கும் பிரமாண்ட ஆதிசேஷனையும் பரம்பொருள் திருமாலையும் கடந்து வேகவதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தன் தவற்றை உணர்ந்தாள். கணவரிடமும் கடவுளிடமும் மானசீகமாக மன்னிப்பு வேண்டினாள். திருமாலும் பிரம்மனுக்குத் திருக்காட்சி தந்தார். அவரிடம், எனக்கு அருளியது போல், பூவுலகத்து மனிதர்கள் யாவருக்கும் இந்த ÷க்ஷத்திரத்தில் இருந்து அருள்பாலியுங்கள் சுவாமி என்று வேண்டினார் பிரம்மன். அதை ஏற்று, இன்றும் அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார் பரந்தாமன்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள இறைவனின் மூர்த்தம் அத்தி மரத்தால் செய்யப்பட்டிருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar