Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு எல்லைக் கருப்பராயன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு எல்லைக் கருப்பராயன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: எல்லைக் கருப்பராயன்
  உற்சவர்: முருகன்
  அம்மன்/தாயார்: மாகாளியம்மன்
  தல விருட்சம்: ஆலமரம்
  தீர்த்தம்: சிறுவாணி
  ஊர்: பேரூர் காப்புக்காடு
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரைத்திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இதில், சித்திரை திருவிழா அன்று கருப்பராயனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள். தொடர்ந்து, காலப்போக்கில் கருப்பராயன் எழுந்தருளிய இடத்தை சுற்றி முருகன், அம்மன் உள்ளிட்டவையை மக்கள் வைத்து வழிபடத்துவங்கியதால், முருகனுக்காக தைப்பூசமும், அம்மனுக்காக ஆண்டு விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழா, தைப்பூதம், மாதாந்திர கிருத்திகை, அம்மாவாசை ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.  
     
 தல சிறப்பு:
     
  கருப்பராயன் சுயம்புவாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிவது இங்கு சிறப்பாக கருதப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு எல்லைக்கருப்பராயன் திருக்கோயில், செட்டி வீதி,கோவை, கோவை– 641026.  
   
போன்:
   
  +91 94432 94963, 99440 67975, 909233 09589 
    
 பொது தகவல்:
     
  கோயில், மக்கள் உள்ள பகுதியில் மிகவும் நெருக்கடியான ஓர் சூழலில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் செல்வ சிந்தாமணி குளம் அமைந்துள்ளதால், கோயிலில் எப்போதுமே குளிர் காற்று வீசிக்கொண்டே இருக்கும்.மேலும், கோயில் முந்தைய காலத்தில் இருந்ததை விட தற்போது, மிகவும் பள்ளமான இடத்தில் உள்ளது. கோயில் சுயம்புவாக எழுந்தருளிய கருப்பராயனின் சிலை சுமார் 5 அடிக்கு காணப்பட்டது. ஆனால், தற்போது ஒரு அடி அளவிற்கே சுயம்பு வடிவம் காணப்படுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக ஆபத்துகளில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும், உடல் நலன் குறித்த பிரார்த்தனைகள் முக்கியமான பிரார்த்தனைகளாக வைக்கப்படுகிறது. இந்த பிரார்த்தனையின்போதே மக்கள் பலி கொடுத்து தான் பிரார்த்தனை வைக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பெரியளவிலான நேர்த்திக்கடன் எதுவும் செய்யப்படுவதில்லை என்றாலும் இந்த கோயிலில் உள்ள கருப்பராயனை பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குல தெய்வமாக வைத்துள்ளனர். இதனால், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்தல், மற்றும் வேண்டுதல் நிறைவேறினால், கோயிலில் ஒரு வாரம் தங்கி கோயில் பணிகளை செய்வார்கள். இதை தவிர, பணமாகவோ, பொருளாகவோ கருப்பராயனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தக்கூடாது என்பது இக்கோயிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
    
 தலபெருமை:
     
  இங்கு சுமை தாங்கி கல் என்ற ஒன்று இந்த கருப்பராயன் கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது. வனப்பகுதியிலிருந்து, விறகு உள்ளிட்ட தங்களுக்கு தேவையானவற்றை மக்கள் சேகரித்துவிட்டு வந்து எல்லைப்பகுதியான இந்த கருப்பராயன் அமைந்திருக்கும் இடத்தில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். மக்கள் தங்கள் சுமைகளை இறக்கிவைத்து ஓய்வெடுப்பதால், அந்த கல் சுமைதாங்கி கல் என அழைக்கப்பட்டது. பின்னர், தற்போது நவீன காலத்தில் மக்கள் அதனை தவறாக பயன்படுத்த துவங்கியதால், அந்த கல்லை வைத்து படிக்கட்டு அமைத்து அதன் பயனை தொடர்கின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  பல ஆண்டு காலத்திற்கு எல்லைச் சாமியாக இக்கோயில் இருந்தது. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது, பேரூர் கோயிலுக்கு முன்பு அமைந்துள்ளது. பேரூர் கோயிலானது பல ஆண்டு காலத்திற்கு முன்னர் வனப்பகுதியில் அமைந்திருந்ததாக வரலாறு உண்டு. அத்தகைய வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனத்திற்க்கு செல்லும் மக்கள் இந்த கருப்பராயனை காவல் தெய்வமாக வழிபட்டு செல்வர். மேலும், வனப்பகுதியிலிருந்து அவர்கள் வேட்டையாடி வந்த விலங்குகளை இந்த சாமிக்கு படையலிட்டு தங்கள் நன்றியை செலுத்துவார்கள். இதிலிருந்து தான், கருப்பராயனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவேண்டுமானால், பலி கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை உருவானது. முந்தைய காலத்தில் பிரார்த்தனையின்போது மக்கள் பலி கொடுத்து வந்தனர். ஆனால், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையில், சித்திரைத்திருவிழா காலத்தில் மட்டும் பலி கொடுக்கின்றனர். தொடர்ந்து, இந்த கோயிலில் வேண்டுதல் வைத்து, வெற்றி பெற்றவர்கள், சிங்கப்பூர், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறாக ஆண்டு விழா கொண்டாடத்தவறும் பட்சத்தில், கோயில் வாசலில் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக இக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருப்பராயன் சுயம்புவாக எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிவது இங்கு சிறப்பாக கருதப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar