Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாலட்சுமி குபேரன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகாலட்சுமி குபேரன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாலட்சுமி, குபேரன்
  உற்சவர்: மகாலட்சுமி, ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: தாமரை
  ஊர்: விழுப்புரம்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அட்சயதிரிதியை இங்கு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு வைபவம், சித்ரா பவுர்ணமி வைபவம் சம்ப்ரோஷண தினஆண்டு விழா வைபவம் ஏகதின லட்சார்ச்சனை வைபவம், அட்சய திருதியை வைபவம் பக்தர்கள் கையினால் குபேரனுக்கு சொர்ண அர்ச்சனை செய்தல். வைகாசி விசாகம். ஆடி வெள்ளி விளக்கு பூஜை. ஆடி பூரம். கோகுலாஷ்டமி. விநாயகர் சதுர்த்தி. நவராத்திரி பூஜை. புரட்டாசி அனைத்து சனி கிழமைகளில் விசேஷ திருமஞ்சனம். தீபாவளி மற்றும் குபேர பூஜை வைபவம் அன்று பக்தர்கள் கையினால் சொர்ண அர்ச்சனை செய்யப்படும். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வைபவம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் வீதி உலா வைபவம் நடைபெறும், புத்தாண்டு வைபவம், தினசரி தனுர்மாத பூஜைகள், கூடாரவள்ளி வைபவம். தை பொங்கல். தை கடைசி வெள்ளி அன்று தாயாருக்கு பால் அபிஷேகம். ஸ்ரீராம நவமி. பங்குனி உத்திரம் தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருகல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாதம் தோறும் பவுர்ணமியில் மகாலட்சுமி ஹோமம், விஷ்ணு ஸஹஷ்ரநாமம் பாராயணம் நடைபெறுகிறது. மாதம் தோறும் பூச நட்சத்திரத்தில் குபேரபூஜை நடைபெறுகிறது. பிரதி ஆண்டு சித்திரை திங்களில் சம்ப்ரோஷண ஆண்டு விழா மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடைபெறும். பிரதோஷங்களில் சக்கரத்தாழ்வாருக்கு பானக அபிஷேகம் நடைபெறும்.பிரதி புதன்கிழமை சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். பிரதி வெள்ளி கிழமை தோறும் காலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும் மாலை 6மணிக்கு தாயார் சன்னதி புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறும். பிரதி வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை காலையில் திருநகர் மகளிர் மன்றம் நாம சங்கீர்த்தனம் நடைபெறும். பிரதி வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீநவ நரசிம்ஹ சத்சங்கம் கோவிந்தபுரம் ஸ்ரீசுந்தர வெங்கடேச பாகவதர் குழுவினரின் பஜனை நடைபெற்று வருகிறது.  
     
 தல சிறப்பு:
     
  தினமும் காலை 7 மணிக்கு மகாலட்சுமி மீது சூரிய(நாராயண)னின் ஒளிக்கதிர்கள் படர்வது சிறப்பு. பொதுவாக குபேரன் அவருக்குரிய வடக்கு திசையை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் குபேரன் தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய கோலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும், தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திரிதியை தினத்தில் பக்தர்கள் தங்களது கரங்களாலேயே மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாலட்சுமி குபேரன் திருக்கோயில், கிழக்கு பாண்டிரோடு, திருநகர், விழுப்புரம்.  
   
போன்:
   
  +91 98843 27379, 97517 99423 
    
 பொது தகவல்:
     
  விழுப்புரம் மாவட்டம் சுற்றியுள்ள கடலூர், பாண்டி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில், மகாலட்சுமிக்கு என்று தனி சன்னதி மற்றும் குபேரனுக்கு என்று தனி சன்னதி அமைத்த ஒரே இடம் விழுப்புரம் திருநகர்தான் ஆகும். கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தல மகாலட்சுமி முன்னிரு திருக்கரத்தில் அபய வரத முத்திரையுடனும், பின்னிரு திருக்கரங்களில் தாமரை மொட்டும் ஏந்தி சதுர்புஜத்தில், பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் மகாலட்சுமிக்கு இடது புறம் குபேரன் தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. தவிர  தும்பிக்கையாழ்வார், அஷ்டலட்சுமி, கருடாழ்வார், ஸ்ரீனிவாசப்பெருமாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் ஆகியோரும் பிரகாரத்தில் அருள்கின்றனர். கோயிலின் ஈசான்ய பகுதியில் அமைந்துள்ள பள்ளியறையில் உற்சவ மகாலட்சுமி ஊஞ்சலில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். குபேரன் சன்னதிக்கு எதிரில் உள்ள நுழைவு வாசலின் மேல் கோபுரத்தில் குபேர லட்சுமியும் அவர்களது வாகனமாக குதிரையும், முதலையும் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை வைபவம்: 02.11.2011 புதன்கிழமையன்று பஞ்சலோக மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி,  ஸ்ரீனிவாச பெருமாள் உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை நடைபெற்றது.

இக்கோயிலில் தெற்கு மற்றும் வடக்கு விரிவாக்க பணி 22.09.2013ம் தேதியில் துவங்கப்பட்டது. கோயிலில் வடமேற்கு திசையில் சக்கரதாழ்வார்க்கு தனி கோயில் நிர்மானம் செய்து 13.03.2014 அன்று சக்கரதாழ்வார்க்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் வடகிழக்கில் உற்சவமூர்த்திகளுக்கு கண்ணாடி அறை நிர்மாணிக்கபட்டு தெற்கு நோக்கி உள்ள குபேரனுக்கு பிரதான சாலையை நோக்கி குபேர வாயில் சொர்க்கவாசல் 12 அடி உயர அலங்கார கதவுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென்மேற்கில் ஊர்ச்சவமூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் செய்ய ஷேசவாகனம் சிலாரூபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரில் ஓமகுண்டம் நிறுவப்பட்டுள்ளது. கோயிலில் தெற்கில் சால கோபுரமும் அஷ்டலக்ஷ்மிகள் அமர்ந்தநிலையில் மற்றும் 2 குபேரன் சிலாரூபங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோயிலில் கருவறையை சுற்றி நின்ற நிலையில் அஷ்டலக்ஷ்மிகள் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் துவார பாலகிகள் சிலாரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 07.09.2014 அன்று சால கோபுரம், அஷ்டலக்ஷ்மிகள், சொர்க்கவாசல், உற்சவ சக்கரத்து ஆழ்வார் மற்றும் பள்ளியறை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். அட்சய திரிதியை அன்று அனைத்து செல்வத்தையும் வளர்க்கும் கடவுளான மகாலட்சுமி திருக்கோயிலுக்கு செல்வது சிறப்பு. அட்சய திருதியை முன்னிட்டு 20, 21.04.2015 குபேர மூலமந்திரம் மற்றும் விசேஷ திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

பக்தர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட குபேர எந்திரம்: ரூ. 50
குபேர பஞ்சலோக டாலர்: ரூ. 50
குபேர பஞ்சலோக காயின்: ரூ. 50
பக்தர்களுக்கு ஹரி பலம் என்று அழைக்கப்படும் லக்ஷ்மி குபேரனுக்கு உகந்த நெல்லிக்கனி வழங்கப்படும். இக்கோயிலில் வேத சாஸ்திர முறைப்படி பட்டாச்சாரியார் மூலமாக வைபவங்கள் நடைபெற்று வருகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணம் ஆகாதவர்கள் இங்கு அதிகமான பக்தர்கள் முக்கிய பிரார்த்தனையாக வேண்டுகின்றனர். பங்குனி உத்திர திருக்கல்யாணத்தின் மறுநாள் திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலர்களுக்கும் கோயிலில் காலையில் காப்பு கட்டும் வைபவம் நடைபெற்று வருகிறது. இதனால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கிறது என்பது நம்பிக்கை. இத்தலத்தில் குபேரன் தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய கோலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும், தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. நோய் நிவர்த்தி கடன் நிவர்த்தி தோஷ நிவர்த்தி இங்கு நிவர்த்தி நடைபெறுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் மகாலட்சுமிக்கும் சீனிவாச பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்கின்றனர். திருக்கல்யாணமும் செய்து வைக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  அட்சய திரிதியை தினத்தில் பக்தர்கள் தங்களது கரங்களாலேயே மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.

 
     
  தல வரலாறு:
     
  தமிழகத்தில் மகாலட்சுமிக்கு என அமைந்த கோயில்களில் முக்கியமானது விழுப்புரம் மகாலட்சுமி குபேரன் கோயிலாகும். விழுப்புரம் மாவட்டத்தில் பல கோயில்கள் இருந்தாலும் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு கோயில் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. 22.08.2005 அன்று கோயில் நிர்மானபூஜை செய்யப்பட்டு திருப்பணி துவங்கப்பட்டது. திருப்பணி நடைபெற்ற தருணத்தில் நகரவாசிகளால் பொது குழு கூட்டம் கூட்டப்பட்டு இந்த திருப்பணிக்கு நன்கொடை வசூலிக்க கலந்து பேசி முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் பொழுது, ஒரு பக்தர் என்ன கோயில் கட்ட போகிறீர்கள் என்று வினவி நிர்வாகிகள் மகாலட்சுமி குபேர கோயில் கட்டுவதாக உள்ளோம் என்று தெரிவித்தபோது, அவர் முன் எதிரிலுள்ள குபேர மகாலட்சுமி படத்தை காண்பித்து இந்த கோயில் கட்ட போகிறீர்களா என்று தெரிவித்து, எனக்கு இரவிலேயே கனவில் தோன்றி காட்சி அளித்து நாளை உங்களை சந்திக்க கோயில் நிர்வாகிகள் வருவார்கள் அவர்களிடம் கோயில் திருப்பணிக்கு கைங்கரியம் செய்ய உத்தரவு கிடைத்ததாக கூறினார். உடனே  தாயாரின் கிருபையால் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. திரு என்றால் மகாலட்சுமி, திருநகர் என்ற பெயரில் உதயம் ஆனநகரில் 06.06.2005 ஆம் ஆண்டு பூமி பூஜை நடைபெற்றது. இந்த கோயில் திருப்பணி 22.8.2005ல் துவங்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் 04.05.2006 அன்று நடைபெற்றது. இந்த கோயில் திருப்பணி கட்டிமுடிக்க சரியாக 8 மாதம் 14 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. விழுப்புரத்தில் திரு நகர் என்று பெயரமைந்த இப்பகுதியில் பக்தர்கள் மகாலட்சுமிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தினமும் காலை 7 மணிக்கு மகாலட்சுமி மீது சூரிய(நாராயண)னின் ஒளிக்கதிர்கள் படர்வது சிறப்பு. பொதுவாக குபேரன் அவருக்குரிய வடக்கு திசையை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் குபேரன் தனது துணைவி சித்ரலேகாவுடன் தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய கோலத்தில் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும், தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திரிதியை தினத்தில் பக்தர்கள் தங்களது கரங்களாலேயே மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar