Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: லட்சுமி நரசிம்மர்
  உற்சவர்: பிரகலாத வரதன்
  அம்மன்/தாயார்: அமிர்தவல்லி
  தல விருட்சம்: நெல்லி
  தீர்த்தம்: சக்கர தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
  புராண பெயர்: தெட்சிண அகோபிலம்
  ஊர்: பூவரசன்குப்பம்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாத சுவாதி நட்சத்திரம், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, , புரட்டாசி சனிக்கிழமை, வைகாசி விசாகம் கருட சேவை, தைமாதம் 5ம் தேதி தீர்த்தவாரி.  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் தேவஸ்தானம், பூவரசன்குப்பம் - 605 105. மோட்ச குளம் வழி, விழுப்புரம் மாவட்டம்  
   
போன்:
   
  +91-413 269 8191, 94439 59995 
    
 பொது தகவல்:
     
 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின் பல்லவர்கள் நரசிம்மருக்கு கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இக்கோயிலில் தாயார், ஆண்டாள் சன்னதிகள் தனியாக அமைந்துள்ளன. இங்குள்ள அமிர்தவல்லி தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். அதனால் தான் "அமிர்தபலவல்லி' என அழைக்கப்படுகிறாள்.




 
     
 
பிரார்த்தனை
    
 

வாடும் பக்தர்களின் துயர்துடைத்துஅவர்களுக்கு நலம் தரு வதற்காக அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். அனைத்து கஷ்டங்களும் அனுபவித்து விட்டோம். இனி கஷ்டப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கலங்கி நிற்பவர்கள் உயிர் பிரிய இருக்கும் வேளையில் அருள் புரியக்கூடியவர் நரசிம்மர்.




 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  தென் அகோபிலம்: நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலா தனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் "அகோபிலம்' என் றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன் குப்பம் என்றும் கூறுவர். எனவே இத்தலம் "தென் அகோபிலம்' எனவும் அழைக்கப்படுகிறது.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார். உடனே  நரசிம்மர், ""நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்' என்றார். அதற்கு லட்சுமி,"" ""கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவே தான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்' என்றார். அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

சிறப்பம்சம்: நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை  அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக  நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  பகவான் நரசிம்மர் அகோபிலத்தில் இரண்யனை அழித்த பிறகு உக்கிரம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்கு பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்து தவமிருந்த முனிவர்கள் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டினர். அப்படி காட்சியளித்த தலங்கள் தமிழகத்தில் எட்டு உள்ளது. இத்தலத்தின் கிழக்கே சிங்கரி கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்க பெருமாள் கோயில், தெற்கே நாமக்கல், சிந்தலவாடி ஆகியன அமைந்துள்ளன. சோளிங்கரிலும் அந்திலியிலும் யோக நரசிம்மராகவும், சிங்கிரியில் உக்கிர நரசிம்மராகவும், பூவரசன் குப்பத்தில் லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார் நரசிம்மர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar