Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வாலீஸ்வரர்
  உற்சவர்: சந்திரசேகரர், சவுந்தரவல்லி
  அம்மன்/தாயார்: வடிவாம்பிகை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: நொய்யல்
  ஆகமம்/பூஜை : காரணாகமம்
  புராண பெயர்: குறிச்சி
  ஊர்: சுந்தராபுரம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஐப்பசி சூரசம்ஹாரம், தைமாதம் ஆண்டுவிழா, புரட்டாசி சிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  வாலி பூஜை செய்த தலம், சோமாஸ்கந்த முகூர்த்தம், ராமாயண காலத்தில் நிர்மாணம் செய்யப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், சுந்தராபுரம், கோயம்புத்தூர்-641024  
   
போன்:
   
  +91 99446 58646. 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு திசைநோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வெளி பிராகாரத்தை 12 முறை வலம் வந்தால் திருமணம், குழந்தை பேறு ஆகிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் பிரகாரம் சுற்றி வந்து ஆதி விநாயகரை வழிபட்டு, நந்தி, வல்லப விநாயகரை தரிசித்து, மூலவர் வாலீஸ்வரரை தரிசிக்க வேண்டும். பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணமணியர், வடிவாம்பாள், நடராஜர் ஆகியோரை வணங்கி நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  வடிவாம்பிகையிடம் திருமணம், புத்திரப்பேறு வேண்டுதல், காலபைரவரிடம் சத்ரு பயம் நீங்குதல், சுப்ரமண்யரிடம் தொழில் வளர்ச்சிக்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது. 
    
  தல வரலாறு:
     
  கோவை மாவட்டம்  சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரர் சுவாமி கோவில், திரேதாயுகத்தில் ராமாயண காலத்தில் வாலியால் பூஜிக்கப்பட்ட சிவன்கோயில் ஆகும். நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள 38 சிவன்கோயில்களில் 3ம் நூற்றாண்டில் கரிகாலசோழனால் திருப்பணி செய்யப்பட்டது இக்கோயில். கோவை பேரூர் புராணத்தில் அமரபயங்க சோழன் செப்பேட்டில் கி.பி.987–1018 வரை சொல்லப்பட்ட பழம் பெருமை வாய்ந்த 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் ஆகும். சிவன், பார்வதிக்கு நடுவில் திருமணகோலத்தில் வள்ளி,தெய்வானையுடன் முருகப்பெருமான்  சோமாஸ்கந்தராக அமையப்பெற்றுள்ளார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வாலி பூஜைசெய்த தலம், சோமாஸ்கந்த முகூர்த்தம், ராமாயண காலத்தில் நிர்மாணம் செய்யப்பட்டது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar