Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிதம்பரேஸ்வரர்
  அம்மன்/தாயார்: சிவகாம சுந்தரி
  தல விருட்சம்: செவ்வரளி
  தீர்த்தம்: சிதம்பர தீர்த்தக் குளம்
  புராண பெயர்: சாத்தனூர்
  ஊர்: சாத்தூர்
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன. வைகாசி விசாக பிரமோற்சவம் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் திருநாளில் தேரோட்டம் நடைபெறும். ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களும் சிறப்புக்குரியவை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்.  
   
போன்:
   
  +91 4562-260322. 94434 06995 
    
 பொது தகவல்:
     
  நாற்புறமும் உயர்ந்த மதில் சூழ்ந்த கோயில். கிழக்கு நோக்கி அமைந்த கோயிலின் எதிரே மிகப்பரந்த அளவில் மைய மண்டபத்துடன் சிதம்பர தீர்த்தக் குளம் காணப்படுகிறது. சுவாமி அம்மனுக்கு தனித்தனியே பிரதான வாயில்கள் உள்ளன. சுவாமி சன்னதி வாயிலில் விநாயகர் அருள்கிறார். கருவறையின் தென்புறம் சிவகாமசுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. அங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தீசர் காணப்படுகிறது. பிராகாரத்தில் சந்திரன், சூரியன், சேக்கிழார், நால்வர், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, கணபதி, ஐயப்பன், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சண்டேஸ்வரர், துர்க்கை, மகாலட்சுமி, சனீஸ்வரர், நவகிரகம், காலபைரவர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  தம்பதியர் இடையே ஒற்றுமை வளரவும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கவும் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிதம்பரேஸ்வருக்கு செவ்வரளி மாலை சாத்தி மனமுருக வேண்டிக்கொண்டால் தம்பதியர் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது நம்பிக்கை. 
    
 தலபெருமை:
     
  விஸ்தாரமான பிராகாரத்தில் உள்ள மண்டப விதானத்தில் பன்னிரு ராசிகளைக் குறிக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பலிபீடம், கொடிமரம், நந்தியைத் தொடர்ந்து சிம்மத் தூண் தாங்கிய பதினான்கு கால் மண்டபம் உள்ளது. மகாமண்டப வாசலில் துவார பாலகர், துவார சக்திகளும், வடபுறம் நடராஜர் - சிவகாமி அம்மன் சன்னதியும் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தை அடுத்து கருவறையில் இறைவன் சிதம்பரேஸ்வரர் லிங்கத் திருவடிவினராக எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம், பாண்டியர் கால பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமூக வாழ்வுக்கு பரிகார பூஜைகளும் நடத்தப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.  
     
  தல வரலாறு:
     
  மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகள் கொண்டது, சாத்தூர் சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில். ஆதியில் சோணாடு என்ற பகுதியில் சிறப்பாக விளங்கிய சாத்தனூர் என்ற ஊரே காலப்போக்கில் சாத்தூர் என அழைக்கப்படுகிறது. சாத்தூர் அருகே முற்காலப் பாண்டிய மன்னனான மாற வல்லபன் (கி.பி. 815-862) காலத்தில் இருப்பைக்குடிக் கிழவன் என்பவன் வெட்டி வைத்த பிரமாண்ட ஏரி குறித்த வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றன. அதில் புதியதாக ஏரியைத் தோற்றுவித்தல், பழைய ஏரிகளையும், மடைகளையும் புதுப்பித்தல், பண்டைய நீர்ப்பாசனத் தொழில் நுட்பங்கள் குறித்தும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்தியில் இக்கோயில், தான்தோன்றீசுவரம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 13-ம் நூற்றாண்டில், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் வைப்பாற்றின் வடகரையில் உருவாக்கப்பட்ட கோயில்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நாற்புறமும் உயர்ந்த மதில் சூழ்ந்த கோயில். கிழக்கு நோக்கி அமைந்த கோயிலின் எதிரே மிகப்பரந்த அளவில் மைய மண்டபத்துடன் சிதம்பர தீர்த்தக் குளம் காணப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar