Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காயத்திரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காயத்திரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காயத்திரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன்
  அம்மன்/தாயார்: காயத்திரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன், துர்க்கை, ஆதிபராசக்தி, ஸ்ரீதேவி, பூதேவி, லெட்சுமி
  தல விருட்சம்: அரசமரம், இச்சிமரம்
  தீர்த்தம்: பஞ்ச தீர்த்தம் (பண்ணாரி, மேட்டுப்பாளையம், பவானி கூடுதுறை, அவிநாசி, பாரியூர்)
  புராண பெயர்: செங்குட்டை, (காயத்திரிபுரம்) சுந்தராபுரம்
  ஊர்: கோயம்புத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதிவருடம் தைமாதம் 2ம் நாள் பஞ்சதீர்த்த அபிஷேகம், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மன் பூச்சாட்டுதல் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுகின்றன. பிரதிவாரம் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ராககாலபூஜை, அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனையும், பவுர்ணமி திருவிளக்கு வழிபாடு, அஷ்டமி பைரவர் வழிபாடு சங்கடஹரசதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி, பூசநட்சத்திர வழிபாடு நவராத்திரி சிறப்பு பூஜைகள் (கொலுவைத்தல்) ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பாள். முக்கிய விழாவாக அமைந்துள்ளது.  
     
 தல சிறப்பு:
     
  கோயிலில் அம்மன் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மாரியம்மன் ஸ்தாபிதம் செய்து காவிரியின் தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டதால் காயத்திரி ரூபமாக அருள்பாலித்து வருகிறாள் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காயத்திரி பஞ்சமுக பூங்குழலி மாரியம்மன் திருக்கோயில், மதுக்கரை ரோடு, சிட்கோ (அஞ்சல்), எம்.ஜி.ஆர் நகர், கோயம்புத்தூர்-641021.  
   
போன்:
   
  +91 9360799717 
    
 பொது தகவல்:
     
  கிழக்குதிசை நோக்கி ராஜவிநாயகர், பாலமுருகன், கன்னிமூலகணபதி, சாந்தலிங்கேஸ்வரர், லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, கருப்பணசாமி, கன்னிமார் தெய்வம், வேட்டைக்காரசாமி, நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீக்கம் மற்றும் புத்திர தோஷம், அம்மை போட்டவர்களுக்கு சீக்கிரம் நிவாரணம் கிடைப்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருவிழா காலங்களில் காவிரி மற்றும் ஐந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து, பக்தர்கள் நேரிடையாக அம்மனுக்கு அபிஷேகம் செய்தல் (பூச்சாட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம், சக்தி கரங்கள் எடுத்து வருதல், அழகு போட்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
   கோயிலினுடைய பக்தர்கள் மேட்டுப்பாளையம் ஆற்றங்கரை தீர்த்தத்தில் இருந்து அருவ லிங்கமாக எடுக்கப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை அஸ்த நட்சத்திரம் பிரம்மனுடையது, காயத்திரியை படைத்த நட்சத்திரமும் அஸ்த நட்சத்திரம் எனவே அம்மனுடைய உண்மை வரலாற்று ரீதியாக இந்த எழுந்தருளி வருகிறார். அதுமட்டுமின்றி மார்கழி சிறப்பு விரத வழிபாடும், விரதம் மேற்கொண்டு பஞ்சதீர்த்தம் கொண்டுவருதல் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  ஊர் பொதுமக்கள் அம்மன் கோயில் அமைக்க வேண்டும் என்று ஆலோசனையின் பேரில் கோயில் கமிட்டியர் மேட்டுப்பாளையம் ஆற்றங்கரையில் தீர்த்தத்தில் இருந்து அருவ லிங்கமாக எடுத்து வரப்பட்டு பூங்குழலி மாரியம்மன் என பெயரிட்டு வழிபாடு நடைபெறு வந்தது. திருவிழா நடத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டு அம்மன் தீர்த்த கரையிலிருந்து எடுக்கப்பட்ட மார்கழி மாதத்தில் 30 தினங்களும், அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு தை முதல் நாள் 100க்கு கணக்கானவர்கள் பஸ், வேன் மூலமாக அம்மன் எடுக்கப்பட்ட மேட்டுப்பாளையம் தீர்த்தகரையில் முதல் தீர்த்தம் எடுத்தும், இரண்டாவதாக அம்மன் வலம் வந்த இடங்கள் பண்ணாரியில் இரண்டாவது தீர்த்தம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் மூன்றாவது தீர்த்தம், பவானி கூடுதுறை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோயிலில் கூடுகிற காவிரிநதி காஞ்சிமாநதி பவானி நதியில் நான்காவது தீர்த்தம், காசிக்கு நிகரான அவிநாசி கோயிலில் ஐந்தாவது தீர்த்தம் பக்தர்களால் எடுத்து வரப்பட்டு, குறிச்சி குளக்கரை பொங்காளியம்மன் கோயிலிலிருந்து மேள தாள, வாத்தியங்களோடு தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர் நேரிடையாக கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பஞ்ச தீர்த்த அபிஷேகம் செய்து வந்ததால் பூங்குழலி மாரியம்மன், பஞ்சமுக மாரியம்மன் என அழைக்கப்பட்டது. அம்மனுக்கு உருவ லிங்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மேற்படி ஐந்து அம்மன்களையும் உள்ளடக்கி ஐந்து சிரசுகளும் பத்து கரங்களும் உடைய உருவம் அமைக்கப்பட்டது. அம்மனை கருவறையில் பிரதிஷ்டை செய்யவந்த ஸ்ரீலாஸ்ரீ காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அம்மனுடைய வடிவமைப்பை பார்த்து அம்மன் காயத்திரியின் ரூபமாக இருப்பதால் அம்மனுக்கு காயத்திரி பஞ்சமுகபூங்குழலி மாரியம்மன் என பெயரிட்டார். இக்கோயில் 1993ம் ஆண்டு கட்டப்பட்டது.

காயத்திரியின் வரலாறை அறிந்து கொள்வதற்காக பவானி கோயில் வரலாற்று புத்தகத்தில் தகவல்கள் உள்ளன. பிரம்மனின் படைப்பில் சூரியபகவானுக்கு உள்வட்டத்தில் உயிரோட்டமாக நின்று சூரியனை இயக்குவதற்கு படைக்கப்பட்ட அம்சம்தான் காயத்திரிதேவி என வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன. கங்கையில் பக்தர்கள் அனைவரும் பிறவி தோஷங்களை போக்குவதற்கு கங்கையில் பல தோஷ பரிகாரங்கள் செய்வதால் அங்கே அலை தாங்கி கொள்ள முடியாத நிலையில் வேதகாலத்தில் காயத்திரிதேவி பவானி கூடுதுறை முக்கூடலில் மூழ்கி தவம் மேற்கொண்டு வந்ததாக வரலாறுகளை அறிய முடிகிறது. காவிரியிலிருந்து தொடர்ந்து ஆண்டாண்டுக்கு தீர்த்தங்கள் கொண்டுவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததால் இது காயத்திரியின் முழுவடிவமாகவே அம்மன் அருள்பாலிக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயிலில் அம்மன் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மாரியம்மன் ஸ்தாபிதம் செய்து காவிரியின் தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டதால் காயத்திரி ரூபமாக அருள்பாலித்து வருகிறாள் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar