Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருச்செந்தில் ஆண்டவர் (கச்சியப்பர் மடாலயம்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திருச்செந்தில் ஆண்டவர் (கச்சியப்பர் மடாலயம்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருச்செந்தில் ஆண்டவர்
  உற்சவர்: திருச்செந்தில் ஆண்டவர்
  புராண பெயர்: ஈச்சனாரி
  ஊர்: கோயம்புத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  முருப்பெருமானுக்கு உரிய கிருத்திகை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  திருச்செந்துார் முருகப்பெருமானை அடிப்படையாக கொண்டு இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 7 மணி முதல் 10 மணி வரை மாலை: 5 மணி முதல் 8 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு திருச்செந்தில் ஆண்டவர் கோயில், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி, கோயம்புத்தூர் - 641024  
   
போன்:
   
  +91 98431 60804 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு திசையில் திருச்செந்தில் ஆண்டவர் அருள்பாலிக்கிறார். உடன் சிவன், விநாயகர், ராகு–கேது, மயில் வாகனம், சக்தி வேல், விழாக்காலத்தில் சிறிய திருத்தேர் பவனி உண்டு.     
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலம் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் உண்டு.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அங்க வஸ்திரம் சாத்துதல், பிரசாதம் வழங்குதல், தேர் இழுத்தல், காவடி எடுத்தல் போன்றவை. 
    
 தலபெருமை:
     
  திருப்புராணம் பாடிய கச்சியப்பரின் பெயரில் இந்த மடாலயம் அமைந்துள்ளது.  
 
     
  தல வரலாறு:
     
  சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் அருகே வசித்து வந்த பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய திருச்செந்துார் முருகப்பெருமான் எனக்கு இங்கே ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என கூறியதை அடுத்து, அப்பக்தர் இக்கோயிலை அமைத்தார். மாத, மாதம் திருச்செந்துார் கோயில் செல்லும் பழக்கமுடைய இவரின் கனவில் முருகன் தோன்றியதை அடுத்து, முதலில் திருச்செந்துார் முருகப்பெருமானின் புகழ் பாடிய கச்சியப்பரின் மடாலயம் ஒன்றை நிறுவினார். பின் இங்குள்ள சில பக்தர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் உதவியுடன் இடம் மற்றும் கோயில் அமைக்க முயற்சித்தார். பல சோதனைகளை கடந்த இவர் பின் ஒரு ஏக்கரில் மூலவர் மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகியவை அமைத்து, கோயில் உருவானது. மூலவருக்கு திருச்செந்தில் ஆண்டவர் என பெயர் அமைத்து இன்று கல்யாண மண்டபம், வணிக வளாகங்கள் என்று வளர்ந்துள்ளது. ஈச்சனாரி விநாயகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள், இங்கு வருவதை தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருச்செந்துார் முருகப்பெருமானை அடிப்படையாக கொண்டு இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar