Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கிருஷ்ணர்
  உற்சவர்: கிருஷ்ணர்
  ஊர்: நீலிக்கோணம் பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும் மாலை வேளையில் பஜனையும் நடைபெறுகின்றன. ஏகாதசி, பவுர்ணமி, திருவோணம், சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு திருமஞ்சன ஆராதனைகள் உண்டு. இங்கு நடைபெறும் கோலாட்ட நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வருட திருவிழாக்களில் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளும் திருவிழாக்கள் தான். குறிப்பாக ஐந்தாவது சனிக்கிழமை பெருவிழா வாகும். காலையில் சுவாமிக்கு திருக்கல்யாணமும் மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். இத்துடன் நிகழும் பஜனையும் வாணவேடிக்கையும் கண்களை விட்டு அகலாத நிகழ்வுகள் ஆகும். வருட திருவிழாக்களில் முதன்மையானது கிருஷ்ணன் அவதார தினமான “ கோகுலாஷ்டமி” விழாவாகும் இரு தினங்கள் கொண்டாடப்படும் பெருவிழாவாகும். முதல்நாள் காலையில் கிருஷ்ணருக்கு விசேச திருமஞ்சன பூஜை நடைபெறும். மாலையில் பஜனை மற்றும் ஆண்டாள் குழுவினருடன் சென்று யாதவர் தீர்த்தக் கிணற்றிலிருந்து தீர்த்த கலசம் எடுத்து வருதல் தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெறும். இரவு கிருஷ்ணன் ஜனன நிகழ்வும், ஊஞ்சல் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெறும் அடுத்தநாள் காலையில் பால் அபிஷேக பூஜையுடன் விழா தொடங்கும். பிற்பகலில் யாதவர் தீர்த்த கிணற்றிலிருந்து உறியும், மாவிளக்கும் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வருவர். பின் கோயிலின் முன் உறியடி உற்சவம் நடைபெறும் இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்வது சிறப்பு. கிருஷ்ண பக்தர் குழுவினர் பஜனைபாடிக் கொண்டு முன்னே செல்ல ஆண்டாள் மகளிர் குழுவினர் கிராமிய இசைக்கேற்ப நடனம் ஆடிச் செல்ல ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவீதி உலாவில் பவனி வருவர். இத்தலத்தில் பிறிதொரு சிறப்பு திருவீதி உலா செல்லும் பாதையில் 5 இடங்களில் நடைபெறும் உறியடி உற்சவம் தான். சுவாமி கோயிலையடைய இரவு சுமார் 1 மணியாகும். திருவீதி உலாவில் சிறு குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு வண்ண உடைகளுடன் பவனி வரும் அழகு மனதை விட்டு அகலாத ஒன்று. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். அந்த கிருஷ்ணனே குழந்தை வடிவில் இவர்களுடன் கலந்து வந்துவிட்டானோ என எண்ணும் அளவில் அமைந்திருக்கும். இதைக் காண நகரின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கூடுவர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கிருஷ்ணர் கோயில் நீலிக்கோணம் பாளையம் கோயம்புத்தூர்  
   
போன்:
   
  +91 98940 17187, 97917 84886 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முன்மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைப்பை கொண்டுள்ளது. விலாசமான மகா மண்டபத்தின் கன்னிமூலையில் தும்பிக்கையாழ்வாருக்கு கென விமானத்துடன் கூடிய தனிச் சன்னதி உள்ளது. கருவறையில் தும்பிக்கையாழ்வார் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். மற்ற கோயில்களில் காணப்படும் சிலைகளிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளதைக் காணலாம். பின்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தையும் முன்னிரு கரங்களில் மோதகம் மற்றும் தந்தத்தையும் ஏந்தி  உள்ளார். சன்னதி எதிரே மூஷிக வாகனமும் பலிபீடமும் உள்ளன.
இச்சன்னதிக்கு வடபுறம் ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர் சன்னதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் மற்றும் ஆலிலை கிருஷ்ணன் விக்ரகங்கள் உள்ளன. கருவறையில் கிருஷ்ண பகவான் நின்ற கோலத்தில் அபய, வரத ஹஸ்தம் காட்டி புன்னகை ததும்பும் முகத்துடன் எழுந்தருளியுள்ளார். வலது பக்கத்தில் ருக்மணி தாயார் இடது கரத்தில் மணியை ஏந்தியும் இடதுபக்கத்தில் சத்யபாமா தாயார் வலது கரத்தில் விரிந்தும் விரியாமலும் உள்ள தாமரை மலரை ஏந்தியும் நின்ற கோலத்தில் எழிலோடு சேவை சாதிக்கின்றனர்.

கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, பூமராகவன், நரசிம்மர், ஸ்ரீநிவாசன் மற்றும் ஹயக்ரீவர் அருள்கின்றனர். மகாமண்டப சுவற்றின் மேல்புறம் கிழக்கு நோக்கிய வண்ணம் தும்பிக்கை யாழ்வார் மற்றும் ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் ஆகியோரது சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. தெற்குநோக்கியபடி காளிங்க நர்த்தனர் மற்றும் பாம்பணையில் சயன கோலத்தில் மகாலட்சுமியுடன் சுதைச்சிற்பங்களாக அழகு சேர்க்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு ஊஞ்சலில் ஆவிலை கிருஷ்ணனை வைத்து ஆட்டுவர். குழந்தையில்லாத தாய்மார்கள் இப்பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். அது போலவே திருக்கல்யாண உற்சவத்தில் திருமண தடையுள்ளவர்கள் கலந்து கொண்டு வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறுகிறதாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  கிருஷ்ணன் கருவறை மேலுள்ளது ஏக விமானமாகும் இதில் தசாவதாரத்தைக் குறிக்கும் வகையில் சுதைச் சிற்பங்கள் அமைந்துள்ளன. வன்னிமரம் ஸ்தல விருட்சமாகவும் யாதவர் தீர்த்தம் (கிணறு) தீர்த்தமாகவும் விளங்குகின்றன. ஸ்தல விருட்சம் தற்போது பட்டுப்போனதாகத் தெரிவிக்கின்றனர்.

 
     
  தல வரலாறு:
     
  கோவை மாநகரின் கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்த குடியிருப்பு பகுதி நீலிக் கோணாம்பாளையம். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிழைப்பைத் தேடி கிராமங்களிலிருந்தும் வந்து இங்கு குடியேறினர். அவர்களில் நீலிக்கோனார் என்பவர் தற்போது கோயில் இருக்கும் பகுதியில் நிலத்தை வாங்கி குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு பிரித்து விற்பனை செய்தார். இங்கு குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வசிக்கத் தொடங்கினர். பின் இப்பகுதி அவரது பெயரில் “நீலிக்கோணாம்பாளையம் ” எனப் பெயர் பெற்றது. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற முது மொழிக்கு ஏற்ப கிருஷ்ணனைக் குல தெய்வமாகக் கொண்ட குலத்தவர்கள் ஒன்று சேர்ந்து சிறிய அளவில் கிருஷ்ணன் கோயிலை அமைத்தனர்.

ஊர்ப் பொது கோயில்களாக மாகாளியம்மன் மற்றும் மகாலட்சுமி கோயில்களையும் அமைத்தனர். புதிய குடியிருப்பு பகுதியாக இருந்த போது மிகச் சிறிய அளவில் மேடை அமைத்து அதன்மீது சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகளையும், திருவிழாக்களையும் நடத்தி வந்தனர்.

அப்பகுதியில் சாலை, தண்ணீர் போக்குவரத்து வசதிகள் கூட, அதிக அளவில் மக்கள் குடியேறத் தொடங்கினர். முன்பு குடியிருந்தவர்களின் தொழில்கள் சிறப்பாக மேன்மையடைந்ததின் பலனாக அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சிறிது சிறிதாக கோயில் விரிவாக்கம் மேற் கொள்ளப்பட்டு முழுமையான கோயிலுமாக மாறியது. நீண்ட காலமாக இருந்ததாலும் கட்டிடத்தின் வயது அதிகரித்து கட்டிடம் வலுவிழந்த நிலையை அடைந்தது. புதியதாகக் கோயில் கட்டி அதற்கேற்றால் போல் சிலைகளை நிறுவவேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே வலுத்தது. அனைவரின் ஒத்துழைப்புடன் கட்டிட வேலைகள் தொடங்கப்பட்டது. கருங் கற்களால் மிகவும் நேர்த்தியாக கோயில் அமைந்தது. புதிய சிலைகளையும் பிரதிஷ்டை செய்து 2013ம் ஆண்டு சான்றோர்களின் பங்களிப்புடன் நல்ல நாளில் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar