Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர்
  உற்சவர்: அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்
  அம்மன்/தாயார்: செஞ்சுலட்சுமி
  தீர்த்தம்: காவேரி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
  புராண பெயர்: பத்மகிரி
  ஊர்: ஓடத்துறை
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை ராம நவமி. வைகாசி நரசிம்ம ஜெயந்தி, கருட சேவை புறப்பாடு, ஆடி ஜேஷ்டாபிகேம், திருவாடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆவணி பவித்தோர்ஸ்த்தவம், புரட்டாசி அனைத்து சனிக்கிழமை மற்றும் நவராத்திர் நாட்கள். விஜய தசமி அன்று குதிரை வாகன புறப்பாடு, கார்த்திகை 5 வார ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் விசேஷமாக சிறப்பு பூஜைகள் கொண்டாடப்படுகின்றன. தை சங்கராந்தி அன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  விசேஷமாகப் போற்றப்பட கூடிய நரசிம்ம ஸ்தலங்கள் காட்டழகிய சிங்கபெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப் பெருமாள் ஆக மூன்று ஸ்தலங்களில் மிகவும் விசேஷமாக போற்றக்கூடிய ஸ்தலம் ஆகும். அதிலும் லோகமாதாவும் ஜகன் மாதாவுமான மஹாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்ந ஸ்தலமானது பிரார்த்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது, வைணவ சமயத்தின் படி தாயாரை வணங்கியப்பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும் என்பார்கள். இதில் தாயாரின் பணியாவிம் கூறப்படுவது என்னவென்றால் பக்தர்களின் குறைகளை திருமாலிடம் எடுத்து கூறுவதே ஆகும். ஆதலால் அந்த பரிபூர்ணமான கைங்கர்யம் இந்த ஸ்தலத்தில் தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் செய்து வருவதால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது சத்தியம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆற்றழகிய சிங்கர், ஓடத்துறை, கீழச்சிந்தாமணி, திருச்சி - 2  
   
போன்:
   
  +91 99420 52558 , 9965142307 
    
 பொது தகவல்:
     
  காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் ஒரேநாளில் வழிபாடு செய்வது நம் ஜென்ம பாவங்களை போக்கும்.  
     
 
பிரார்த்தனை
    
  கார்த்திகை ஞாயிறன்று 108 பிரதஷ்ணம் செய்து வர நினைத்த காரியம் உடனே நிறைவேறும். 5 சனிக்கிழமைகள் ஜாதகம் வைத்து பிரார்த்தனை செய்ய திருமண தடை அகலும். பிரதி ஸ்வாதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட குடும்ப ஒற்றுமை , தம்பதி ஒற்றுமை பெருகும். பிரதோஷத்தில் பிரார்த்தனை செய்ய குழந்தை பேறு உண்டாகும். பௌர்ணமியில் பிரார்த்தனை செய்ய வியாபாரம் பெருகும். அமாவாசையில் பிரார்த்தனை செய்ய ஸரீர ரோகங்கள் நிவர்த்தி ஆகும்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் நம் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேறுவதை கண்கூடாக காணலாம். 
    
 தலபெருமை:
     
  கருடன் தனது வலது திருக்கரத்தில் நரசிம்மர் திருவடியும் இடது கரத்தில் தாயாரின் திருவடியையம் தாங்கியிருக்கும் படி சேவை சாதிப்பதால் கருட சேவை லெக்ஷ்மி நரசிம்மராக மிகவும் விசேஷமான ஸ்வரூபத்தில் அருள் பாலிக்கிறார்.
லட்சுமி நரசிம்மர், உற்சவர் அழகிய மணவாளன் ஸ்ரீதேவி பூதேவி தாயார் கருட சேவையில் திவ்ய தரிசனம். மற்றும் கருடாழ்வார், நம்மாழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனி, தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் நம்மை அனுக்கிரஹம் செய்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  காவேரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராகவும், காவேரி தென் கரையில் ஆற்றழகிய சிங்கராகவும் சேவை சாதிப்பது தனி சிறப்பு. ஆதியில் திருவரங்கத்திற்க்கு செல்ல பாலம் இல்லாத காரணத்தால் காவேரியில் ஓடம் மூலம் சென்றனர். மாதம் மும்மாரி பெய்து காவேரியில் ஏற்படும் வெள்ள பெருக்கின காரணமாக, மக்கள் அவதியுற்று தரிசனம் செய்ய முடியாமல் வருந்தி பிரார்த்தனை செய்தததை ஏற்று ஸ்ரீரங்க பெருமாள் இத்தலத்தில் உபய நாச்சியாருடன் உற்சவராக ஸேவை சாதிக்கிறார். அதனால் இவ்விடம் ஓடத்துறை என பெயர் பெற்றது. ஆங்கிலேயர் காலத்தில் தென் மற்றும் வடகரையை இணைக்க பாலம் அமைத்தபோது மூன்று முறையும் இடிந்து விழுந்தது. அச்சமயம் இத்தல ஆஞ்சனேயர் ஆங்கிலேய பொறியாளரின் கனவில் தோன்றி இத்தலத்து லட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு கர்ப்பக்ரஹம் (கருவறை) நிர்மணம் செய்து கொடுத்தால் பாலம் கட்டும் பணி எளிதில் முடிவடையும் என்று கூறினார். அதன்படி கட்டி கொடுக்க பாலம் கட்டும் பணியும் முடிந்தது.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆஞ்சநேயர் மூன்று கண்களுடன் மூலஸ்தானத்தின் உள்ளேயே விசேஷ பார்வையில் திவ்ய சொரூபத்தில் நம்மை வரவேற்க்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar