Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கண்ணீஸ்வரமுடையார்
  அம்மன்/தாயார்: அறம்வளர்த்த நாயகி
  தீர்த்தம்: முல்லையாறு
  ஊர்: வீரபாண்டி
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கவுமாரியம்மன் கோயில் சித்திரை விழா நடக்கும் போது, இங்கு தான் கொடிமர பூஜை நடக்கும். தமிழ் புத்தாண்டு அன்றும், பிற விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.  
     
 தல சிறப்பு:
     
  மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களைத் தீர்க்கும் மூலிகை சக்தி நிறைந்த முல்லையாறு இக்கோயிலின் அருகில் ஓடுவது மிகவும் சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில், வீரபாண்டி - 625 534, தேனி மாவட்டம்  
   
போன்:
   
  +91-4546-246 242 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில்  கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
 

பார்வைக்குறை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.



 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

 பார்வை குறைவுள்ளவர்கள் கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி, அருகிலுள்ள கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். இத்தல அம்பிகை அறம்வளர்த்த நாயகி கருணைக் கடலாய் அருள்புரிகிறாள். மன்னனின் பெயரால் இவ்வூர் "வீரபாண்டி' என பெயர் பெற் றது. அருகிலுள்ள முல்லையாற்றில் குழந்தைகளுடன் நீராடி மகிழலாம். இதுவே இத்தலத்து தீர்த்தமும் ஆகும். மேற் குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்நதியில் மூலிகையின் சக்தி நிறைந்துள்ளதால் நோய் தீர்க்கும் சக்தி மிக்கதாக கருதப்படுகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

 பாண்டிய நாட்டை வீரபாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். பார்வையோடு இருந்த அவனுக்கு முன்வினைப் பயனால் பார்வை போனது. அவன் பட்ட மனவருத்தத்துக்கு அளவே இல்லை. கஷ்டம் வரும் போது கடவுளை நினைக்காதவர் உலகில் இல்லை. வீரபாண்டியனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் சிவபெருமானை உணர்ச்சிப் பெருக்குடன் வணங்கினான். அவரது அறிவுரைப்படி முல்லையாற்றங்கரையிலுள்ள கவுமாரியை வணங்கச் சென்றான். கருணைத்தாயான அவள், அவனுக்கு ஒரு கண் பார்வையைக் கொடுத்தாள். மறுகண் ஒளி பெற தான் வணங்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அறிவுறுத்தினாள். வீரபாண்டியனும் அவ்வாறே செய்தான். சிவன் அவனிடம் தனக்கொரு கோயிலை எழுப்பும்படி கூறினார். அவ்வாறு எழுந்ததே கண்ணீஸ்வரமுடையார் கோயில். பின்னர் வீரபாண்டியனின் மற்றொரு கண்ணும் ஒளி பெற்றது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களைத் தீர்க்கும் மூலிகை சக்தி நிறைந்த முல்லையாறு இக்கோயிலின் அருகில் ஓடுவது மிகவும் சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar