Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குளங்கரை கூத்த அய்யனார்
  அம்மன்/தாயார்: பூரண புஷ்கலை
  புராண பெயர்: திருப்புற்றூர்
  ஊர்: சிங்கம்புணரி
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் விக்ரகங்களும் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  ஸ்ரீபூரண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில், திருப்புத்தூர் 630211 சிவகங்கை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 94421 94395; 90951 62114 
    
 பொது தகவல்:
     
  மகா மண்டபத்தைக் கடந்தால், ஏழே கால் அடி உயரத்திலான நிலைகளின் முகப்பில் கஜ லட்சுமியும், வாயிலின் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கில் விநாயகர், வடக்கில் பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் மூலவர் குளம் கரை கூத்த அய்யனார் பூரண புஷ்கலை தேவியருடன் காட்சியளிக்கிறார். துவார பாலகர்கள், விநாயகர், பாலமுருகன் சிற்பங்கள் தற்போது புதிதாகச் செய்யப்பட்டுள்ளன. கோடி பூதம், ரிஷப வாகனம் பொருத்தப்பட்ட திருமதில் சுவரும் அதில் இரண்டாம் நுழைவாயிலில் 3 படிகளைக் கடந்து சென்றால்  இரண்டாமடுக்கு வருகிறது. அதில் மகா மண்டபமும், சுற்றிலும் மதில் சுவருடன் கூடிய பிரகாரமும் வருகிறது. பிரகாரத்தில் கலசங்களுடன் கூடிய நாற்கர விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ள தனிச் சன்னிதிகளில் பரிவார தெய்வங்கள் அனைவரையும் கண்குளிர வைக்கும்.

இரண்டாம் அடுக்கில் மகா மண்டபமும், சுற்றிலும் மதில் சுவருடன் கூடிய பிரகாரம் உள்ளது. பிரகாரத்தில் கலசங்களுடன் கூடிய நாற்கர விமானத்துடன் உள்ளது. சன்னிதிகளில் பரிவார தெய்வங்களான முன்னோடிக்கருப்பர், ராவுத்தர், ஆதம்மை, சன்னாசி, பேச்சி, சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர் சன்னிதிகள் உள்ளன. கன்னி மூலையில் வடக்கு நோக்கி சப்தகன்னியர் சன்னிதி உள்ளது. தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். அய்யனார் கோயில்களில் ராவுத்தர், ஆதம்மை, ஆஞ்சநேயர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னோடிக் கருப்பருக்கு பின்புறமாக தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. மூன்றடுக்கில் அமைந்துள்ள இக்கோயிலின், முதல் அடுக்கில் யானை வாகனம் இருபுறம் அமைக்கப்பட்ட 5 அடி படிகளுடன் நுழைவாயில் உள்ளது. இதனை அடுத்து, 3 அடி உயர பீடத்தில் 17 அடி உயரத்தில் இரு சேமக் குதிரைகள் கம்பீரமாக நிற்கின்றன. அதன் காலருகில் பூத கணங்கள் உள்ளனர். தெற்கு குதிரையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியரும், வடக்கு குதிரையில் பொம்மி, வெள்ளையம்மாள், மதுரை வீரன் சிலைகளும் சேமக் குதிரைகளுக்கு அழகூட்டுகின்றன. கோடி பூதம், ரிஷப வாகனம் பொருத்தப்பட்ட திருமதிலும் உள்ளன. தற்போதைய திருப்பணியில் துவாரபாலகர்கள், விநாயர், பாலமுருகன் சிற்பங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 53 ஆண்டுகளுக்கு பின் 2015ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
     
 
பிரார்த்தனை
    
 
திருமணத்தடை, புத்திரபாக்கியம சிறப்பு பிரார்த்தனையாக உள்ளது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அய்யனாருக்கு வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  மண்டபத்தின் நடுவில், கர்ப்பக்கிரகம் எதிரே யானை வாகனத்துடன் பலி பீடம் உள்ளது. மகா மண்டபத்தின் கூரையில் அய்யனார் வடிவத்துடன் கூடிய ராசிக் கட்டம், எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்க்கும் கஜ சித்திரம், மூன்று அழகிய கமலச் சித்திரங்கள் வரையப் பெற்றுள்ளன. கருவறையின் மீது மூன்று நிலையுடன் கூடிய விமானம் உள்ளது. அதில் பஞ்ச வர்ணத்திலான அழகான 42 பதுமை, ஆதிசேஷனுடன் விஷ்ணு, கமலத்தில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, அய்யனார் சுதை சிற்பங்கள் உள்ளன. மூன்றடுக்கில் அமைந்துள்ள இக்கோயிலின் முதலடுக்கில் கஜவாகனங்கள் இருபுறம் அமைக்கப்பட்ட 5 அடி படிகளை கடந்தால், பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தளத்தில் 3 அடி உயர பீடத்தில் 17 அடி உயரத்திலான இரண்டு சேமக்குதிரைகள் கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கின்றன.

காலில் பூதகணங்களும், தெற்கு குதிரையில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் வடக்கு குதிரையில் பொம்மி, வெள்ளையம்மாள் மதுரை வீரன் சிலைகளும் சேமக்குதிரைகளுக்கு அழகூட்டுகின்றன. மேற்கு முகமாக எழுந்தருளியுள்ள முன்னோடிக்கருப்பர் தனிச் சன்னிதி வடக்கு முகமாக எழுந்தருளியுள்ள ராவுத்தர், ஆதம்மை, சன்னாசி ஒரு சன்னிதி வடக்கு முகமாக எழுந்தருளியுள்ள பேச்சி, சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர் ஒரு சன்னிதி கன்னி மூலையில் வடக்கு நோக்கி அருளும் சப்த கன்னியர்களுக்கு தனி சன்னிதி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி ஐயனார் கோயில்களில் ராவுத்தர், ஆதம்மை, ஆஞ்சநேயர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அமைக்கப் பெறுவது அரிதானதாகும். பரிவார தெய்வங்களை அடுத்து, ஆஞ்சநேயர் சன்னிதிக்கு முன்பாக, முந்தைய கோயிலில் இருந்து பட்டுப் போன காசி வில்வம்’ மீண்டும் தழைத்து பச்சைப் பசலென பக்தர்களை குளிர்விக்கிறது. முன்னோடிக்கருப்பருக்கு பின்புறமாக தென்கிழக்கில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. வாயிற்காவலர்களைக் கடந்து 3 படியேறி சென்றால் மகாமண்டபத்திற்குள் கிரானைட் தரைத் தளத்தில் ரத்தினக் கம்பள வேலைப்பாடு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளன. கூரையின் முகப்பில் சாளகரத்தில் தேவியருடன் ஐயனார் திருவுருவம், மேல் தளத்தின் தெற்கே ஜனகர், ஜனார்த்தனர், ஜனந்தனர், ஜனந்தக்குமார் ஆகியோருடன் வீணாதார தட்சிணாமூர்த்தியும், வடக்கே சிவன், பார்வதி, விநாயகர், பாலமுருகன் திருவுருவங்களும் உள்ளன.
 
     
  தல வரலாறு:
     
  திருப்புத்தூர் ஆன்மிகச் சிறப்பு மிக்க பழமையான நகரம். புராணம், இலக்கியம், கல்வெட்டு ஆகிய வற்றின் அடிப்படையில் இந்நகருக்குப் பல சிறப்பு பெயர்கள் உண்டு. நூதன கிராமம், நவபுரம் வரகுணப்பாண்டியன் காலத்தில் இந்நகர் புதிதாக உருவாக்கப்பட்டாதால் நூதன கிராமம், நவபுரம் என அழைக்கப்பட்டது. நூதனம் என்றால் புதுமை என்றும், நவபுரம் என்றால் புதிய நகரம் என்றும் பொருள். கொன்றை வனம் புராண காலத்தில் கொன்ற மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கொன்றை வனம் என பெயர் உண்டானது. தமிழ் இலக்கியங்களில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது. ராமாயண காவியத்துடன் இத்தலம் தொடர்புடையது. வால்மீகி இவ்வனத்தில் தவம் இருந்ததால் இத்தலத்திற்கு வால்மீகிபுரம் என்று பெயருண்டு.

வால்மீகம்’ என்றால் புற்று’ இங்கு கரையான் புற்றுக்கள் அதிகமாக இருந்ததால் வால்மீகிபுரம் என அழைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்வர். திருப்புத்தூர் பகுதியில் அதிகமான புற்றுகள் இருந்ததால் புற்றூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. செல்வம் மிகுந்த நகராக மாறியதால் திரு அடைமொழிச் சேர்க்கப்பட்டு திருப்புற்றூர்’ எனப்பட்டது. அது நாளடைவில் திருப்புத்தூர் என்று மருவியதாகச் சொல்வர். திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரி சாலையிலுள்ள பெரியகண்மாய் கரைச் சரிவில் குளங்கரை கூத்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மூலவர் கர்ப்பகக் கிரகத்தனுள் செப்பு வண்ணத்திலான பித்தளை திருவாச்சியுடன் மூலவர் குளம்கரை கூத்த ஐயனார் உடனாய பூரண புஷ்கலை தேவியர் ஒன்றரை அடி கற்பீடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் விக்ரகங்களும் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar