Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சண்முகநாதர்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: அரசமரம்
  தீர்த்தம்: தேனாறு
  புராண பெயர்: அரசவனம்
  ஊர்: குன்றக்குடி
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

அருணகிரி நாதர்.


 
     
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும். சித்திரை - பால்‌பெருக்கு விழா வைகாசி - வைகாசி விசாகப் பெருவிழா ஆனி - மகாபிசேகம் ஆடி - திருப்படிபூஜை ஆவணி - ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி - அம்புபோடும் திருவிழா ஐப்பசி - கந்த சஷ்டி திருவிழா.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி - 630 206 சிவகங்கை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 4577 - 264227, 97905 83820 
    
 பொது தகவல்:
     
 

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.


 
     
 
பிரார்த்தனை
    
  இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம். 
    
 தலபெருமை:
     
 

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப்பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளியுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.


கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.


 
     
  தல வரலாறு:
     
 

சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar