Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணியர்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  ஊர்: கோவனூர்
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒரு கால பூஜையுடன் செயல்பட்டு வரும் இத்தலம் காலை 8 முதல் பகல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும். முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சித்த மருத்துவர்களுக்கும், சித்த மருந்து சாப்பிடுபவர்களும் வழிபட வேண்டிய தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோவனூர் முருகன் கோயில், பில்லூர் கிராமம், கோவனூர், சிவகங்கை மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
 

மூலவரின் தோற்றம் திருச்செந்தூர் செந்திலாதிபனை போல மிக அழகாக இருக்கும். முருகன் சன்னதி முன்பு மயில் மண்டபமும், கோபுர வாசலின் வட புறத்தில் இடும்பன் சன்னதியும், இடது பக்கம் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி சன்னதியும், விநாயகர் சன்னதியும் தனித்தனியாக அமைந்துள்ளன.


நவரத்தின தாய்மார்கள்: ஒவ்வொரு ரத்தினமும் பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த நவரத்தின தாய்மார்கள் ஆளுக்கொருவராக 9 குழந்தைகளை பெற்றார்கள். இந்த 9 குழந்தைகளும் நவவீரர்கள் எனப்பட்டனர். இவர்கள்தான் முருகப் பெருமானுக்கு படைத்தளபதிகளாக விளங்கினர். மாணிக்க வல்லியின் மகன் வீரபாகுத்தேவர், முத்து வல்லியின் மகன் வீரகேசரி, புஷ்பராகவல்லியின் மகன் வீரமகேந்திரர், கோமேதகவல்லியின் மகன் வீரமகேஸ் வரர், வைடூரியவல்லியின் மகன் வீரபுரந்தரர், வைர வல்லியின் மகன் வீரராக்கதர், மரகதவல்லியின் மகன் வீரமார்த்தாண்டர், பவளவல்லியின் மகன் வீராந்தகர், நீலவல்லியின் மகன் வீரதீரர் எனப்பட்டனர்.


 
     
 
பிரார்த்தனை
    
 

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பார்கள். நாகதோஷம் உள்ளவர்கள், தீராத நோய்க்காக சித்த மருந்து சாப்பிடுபவர்களும், சித்த மருத்துவர்களும் வழிபட வேண்டிய தலம் சிவகங்கை மாவட்டம் கோவனூர் முருகன் கோயில்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் முருகப்பெருமான் மயிலேறி வந்து காத்திடுவான் என்பது ஐதீகம். 
    
 தலபெருமை:
     
 

கோவானூரில் சாத்தப்பன் என்ற சிறுவன் இருந்தான். இவனுக்கு சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம். ஒரு நாள் இவன் காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, தாகம் மிகுந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினான். அந்த முனிவர்களும் இந்த சிறுவனுள் ஆழ்ந்து கிடந்த இறையுணர்வை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றார்கள். இந்த சிறுவன் பிற்காலத்தில் இக்கோயிலே கதி என கிடந்தான். பின் பல தலங்களுக்கு சென்று "சாத்தப்பஞானி' என எல்லோராலும் போற்றப்பட்டார். இவர் தான் சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்தவர். சிவகங்கை மன்னர்களின் ராஜகுருவாகவும் இருந்தார்.


 
     
  தல வரலாறு:
     
 

அகத்தியர் ஒரு முறை திருப்புவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்த பின் கானப்பேர் காளீசரைத் தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது மாலைநேரமாகி விட்டது. எனவே பூஜை செய்வதற்காக தியானித்து ஒரு ஊற்றை தோற்றுவித்தார். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்ய தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராக பெருகியது. இது தான் சித்த வைத்தியத்தில் சிறப்பாக பயன்படுத்தப்படும் "பூநீர்' ஆகும். இதனை சேகரிப்பதற்காகத்தான் சித்தர்களும், சித்த வைத்தியர்களும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் அதிகாலை 6 மணிக்குள் இங்கு வந்து முருகனை தரிசித்து விட்டு பூநீர் சேகரித்து செல்கின்றனர்.


அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து, தனது இஷ்ட தெய்வமும், குரு முதல்வரும் ஆன சுப்பிரமணியரை வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பாண்டிய மன்னனைக்கொண்டு மூல மூர்த்தி பிரதிஷ்டையும், கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார். மயில் மண்டபத்தில் உள்ள மயிலானது வித்தியாசமாக பாம்பை வாயில் கவ்வி பிடித்திருக்கும்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்த மருத்துவர்களுக்கும், சித்த மருந்து சாப்பிடுபவர்களும் வழிபட வேண்டிய தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar