Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாதாந்த சுப்பிரமணிய சுவாமி
  ஊர்: எழுமலை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 தல சிறப்பு:
     
  இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உருவானவர் என்பது சிற்பபுமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பேரையூர் வட்டம், எழுமலை-625 535, மதுரை.  
   
போன்:
   
  +91 93629 92837 
    
 பொது தகவல்:
     
  மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சேடபட்டி ஒன்றியம் எழுமலையில் அமைந்து அருள்பாலித்து வரும் மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் 400 வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும். தற்போது கோயில் திருப்பணி வேலைகளான மூலஸ்தான கோபுரம், இராஜகோபுரம் கட்டுதல், அம்மன் கோயில், சிவன், தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், நவக்கிரகங்கள் போன்ற பரிகார தெய்வங்களுக்கு தனி சன்னிதி அமைத்தல், ஆஞ்சநேயர் சன்னிதி புதுப்பித்தல், அவதூரு சுவாமிகள் ஜீவசமாதி புணரமைத்தல் கொடிமரம் அமைத்தல், கோட்டை சுவர் பராமரிப்பு, தெப்பம் சீரமைத்தல் போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.  
     
 
  தல வரலாறு:
     
  எழுமலை ஜமீனைச்சேர்ந்த ஆத்தாங்கரைப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணிய ஞானியார் என்ற முருக பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு சுமார் 80 மைல்களுக்கு அப்பால் உள்ள நெல்லை மாவட்டம். கழுகுமலை கந்தனை தரிசிக்க மாதந்தோறும் கார்த்திகை தினத்தன்று கால்நடையாக சென்று கந்தனை தரிசித்து பின்பு தன் விரதத்தை முடித்து வந்தார். இவ்விரத்தினை அவர் தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். அவர் தன் வயோதிக பருவத்தில் முருகனை கண்டு தரிசிக்க முடியாது போய் விடுமோ என்று மனம் நொந்து கந்தனிடம் வேண்ட அவர் ஞானியாரின் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அருள் வழங்கி வரும் முருகப்பெருமான், தான் கவுண்டிய நதியில் சுயம்புலிங்கமாக காட்சிதருவதாக கூறி மறைந்தார்.

பின்பு ஞானியார் சுயம்புலிங்க வடிவினை கண்டு வழிபட தொடங்கினார். இந்த விபரத்தினை அப்போது ஆண்டு வந்த கலியுகாதி 4832 முதல் 72 வரை ஆண்ட எழுமலை ஜமீன்தார் திரு. நல்தாது நாயக்கரிடம் ஞானியார் கூற ஜமீன்தார் அவர்கள் சுயம்புலிங்க வடிவினைக் கண்டு கர்ப்பகிரஹ வகையறாவை கல் திருப்பணியாக, மயில் மண்டபமும் கட்டி, தோப்புகள் வைத்தும், அநேக நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். ஞானியார் மாதந்தோறும் கார்த்திகை தினத்தன்று கழுகுமலை சென்று முருகனை வழிபாடு செய்து வந்த காரணத்தினால், ஜமீன்தார் அவர்கள் இத்திருத்தலத்திற்கு மாதாந்தம் என்ற நாமகரணமும் சூட்டினார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உருவானவர் என்பது சிற்பபுமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar