Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜெயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஜெயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜெயவரத ஆஞ்சநேயர்
  உற்சவர்: ராமர்
  ஆகமம்/பூஜை : வைகானச ஆகமம்
  ஊர்: குலசேகரன் கோட்டை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அனுமன் ஜெயந்தி, அமாவாசை, ராமநவமி, ஆடிப்பெருக்கு, சித்திரை வருடப்பிறப்பு, ஆங்கிலப்புத்தாண்டு.  
     
 தல சிறப்பு:
     
  ஆசியக்கண்டத்திலேயே நவ ஆஞ்சநேயர் (நவ மாருதி) கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். சூரிய ஒளிக்கதிர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 மணிக்குள் ஆஞ்சநேயர் மீது படர்வது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  ஸ்ரீ நவ ஆஞ்சநேயர் திருக்கோயில், குலசேகரன் கோட்டை, வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 99440 95626 
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயில் வாசலில் தெற்கு நோக்கி 23 அடி உயர ஆஞ்சநேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார். மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவரைச்சுற்றி தெற்கு நோக்கி மூன்று ஆஞ்சநேயரும், மேற்கு நோக்கி இரண்டு ஆஞ்சநேயரும், வடக்கு நோக்கி மூன்று ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள்.
 
     
 
பிரார்த்தனை
    
  மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயரை வழிபட்டால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்க அனுக்கிரகம் புரிகிறார்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  காரியங்கள் வெற்றியடைந்தவுடன் பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெண்ணெய்க்காப்பு, வெற்றிலை மாலை, செந்தூரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அத்துடன் அமாவாசை நாட்களில் திருமஞ்சனம் செய்தும், பூஜைப்பொருட்கள் கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள மூலவர் சிலை செய்ய நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடியில் விக்கிரகக்கல் எடுக்கப்பட்டது. அங்கு சிலை வடிக்க நிறைய கல் தேர்வு செய்யப்பட்ட போது, ஆஞ்சநேயரே மாருதி வடிவில் வந்து, ஒரு கல் மீது அமர்ந்து, ஆஞ்சநேயர் சிலை வடிக்க கல்லை அடியாளம் காட்டியது கலியுகத்தின் சிறப்பு.

ஓடை மாலை: ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால் இங்குள்ள ஆங்சநேயருக்கு சிறுமலை ஓடையே மாலை போல் கோயிலை சுற்றி அமைய நடுவில் இந்த ஜெயவரத ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு. பொதுவாக மலைக்கோயில், மலை அடிவாரக்கோயில், குடவரைக்கோயில், தீர்த்தக்கரையில்  அமைந்திருக்கும் கோயிலுக்கு சிறப்பு அதிகம். அந்த வகையில் இந்த ஆஞ்சநேயர் கோயில், சிறுமலை அடிவாரத்தில், சிறுமலை ஓடையானது மாலை போல கோயிலை சுற்றி வர அதன் நடுவில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயரின் நவ கல்யாண குணம்:
வைகானஸ ஆகம விதிப்படி பஞ்சபேர விதான சன்னதியை உத்தமோ உத்தம பிரதிஷ்டை என  கருதப்படுகிறது. ஆனால் ஏக பேர மூர்த்தி என்று சொல்லக்கூடிய ஒரேயொரு மூர்த்தியாக இருந்த போதிலும், அந்த மூர்த்திக்கு அச்சுதன், அனிருத்தன், யக்ஞன் போன்ற ஒன்பது விதமான மூர்த்தி ஆவாகனங்கள் செய்வது மரபு. இந்த வகையில் ஆஞ்சநேயருக்கு ஒன்பது மூர்த்திகளை விக்கிரக வடிவிலேயே பிரதிஷ்டை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. பொதுவாக ஆஞ்சநேயருக்கு ஒன்பது வகையான கல்யாண குணங்கள் சொல்வார்கள். அந்த 9குணங்களின் அடிப்படையில் இங்கு நவ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நவ மாருதி:
சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ரஜோ குணம், சத்வ குணம், தாமச குணம் என்ற மூன்று குணங்கள் மாறி மாறி வரும். அந்தந்த குணங்கள் மனிதனுக்கு மேலோங்கி இருக்கும் போது, அந்த குணம் சம்பந்தப்பட் வேலைகளை செய்தால் மிகவும் சிறப்பாக அமையும். ஆஞ்சநேயர் ஒன்பது குணம் கொண்டவர். அவரது ஒன்பது குணங்களின் அடிப்படையில் இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் விக்ரகங்களை, அந்தந்த பிரார்த்தனைக்காக வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

1.  எல்லா செயல்களிலும் வெற்றியும் வாழ்வின் சகல மங்கலங்களையும் சவுபாக்கியங்களையும் அருளும் பொருட்டு மூலஸ்தானத்தில் - ஜெய வரத ஆஞ்சநேயராகவும்,
2.  சனி பகவானின் தோஷத்தில் இருந்து காக்கும் பொருட்டு- பக்த ஆஞ்சநேயராகவும்,
3.  புத்திர பாக்கியம் அருளும் பொருட்டு-பால ஆஞ்சநேயராகவும்,
4.  சகல லாபம் அருளும் பொருட்டு - பவ்ய ஆஞ்சநேயராகவும்,
5.  சகல யோகம் அருளும் பொருட்டு - யோக ஆஞ்சநேயராகவும்,
6.  மனதிற்கு அமைதி தரும் பொருட்டு - தியான ஆஞ்சநேயராகவும்,
7.  வீரம் அருளும் பொருட்டு - வீர ஆஞ்சநேயராகவும்,
8.  சகல வித்தைகளையும் அருளும் பொருட்டு-பஜன ஆஞ்சநேயராகவும்,
9.  மனோபலம் தரும் பொருட்டு - தீர ஆஞ்சநேயராகவும் அருள்பாலித்து வருகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  ஆஞ்சநேயர் வடக்கேயிருந்து சஞ்சீவிமலையை எடுத்துகொண்டு தெற்கே செல்லும் போது விழுந்த சிறு துகள்கள் எல்லாம் மலைகளாகி சிறப்பு பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையும் சஞ்சீவி மலையின் ஒரு துகள் என கூறப்படுகிறது. இந்த சிறுமலையின் அடிவாரத்தில், ஜெயவரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆசியக்கண்டத்திலேயே நவ ஆஞ்சநேயர் (நவ மாருதி) கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். சூரிய ஒளிக்கதிர்கள் தினமும் காலை 7 மணி முதல் 7.20 மணிக்குள் ஆஞ்சநேயர் மீது படர்வது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar