Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதிமூலப் பெருமாள்
  உற்சவர்: கஜேந்திர வரதராஜ பெருமாள்
  அம்மன்/தாயார்: ஆதிலட்சுமி தாயார்
  தல விருட்சம்: அரசமரம்
  ஊர்: வடபழனி
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதி மாதம் ஏகாதசி, திருவோணம் நட்சத்திரம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  வேலவனுடன் மாமன் மாலவன் இருக்கும் கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மண முடிக்கும் போது பவளக் கனிவாய் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோயில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர அடிவாரத்தில் சுந்தராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 முதல் 11.30 மணி வரைமாலை 4.30 முதல் 8.15 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதிமூலப்பெருமாள் திருக்கோயில் எண்.5, பழனி ஆண்டவர் கோயில் தெரு, வடபழனி, சென்னை 600 026.  
   
    
 பொது தகவல்:
     
 
கோயில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும்  வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.  சந்தான கோபாலன் , வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், வல்ல கல்யாண சர்ப்பம், கர்ப்பஸ்வபினி தாயார், சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள் அரச மரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இருபுறமும் நிலமகளும் திருமகளும் இருந்து அருள்மழை பெய்கின்றனர். இங்கே உற்ச்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதராஜப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே  இத்தலம் மகாவிஷ்ணுவின கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.  மூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.  தெற்கு சன்னிதியில் உடையவர் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருங்கள் காணப்படுகின்றன.  சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோயிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்ச்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  ஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டிக் கொள்பவர்கள், திருமணம் கை கூடியபின். ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து அதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து இறைவனுக்கும். இறைவிக்கும் செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு சக்கரம் ஏந்தியும் வரத அஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வேலவனுடன் மாமன் மாலவன் இருக்கும் கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மண முடிக்கும் போது பவளக் கனிவாய் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோயில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர அடிவாரத்தில் சுந்தராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar