Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாதவப்பெருமாள்
  உற்சவர்: அரவிந்த மாதவன்.
  அம்மன்/தாயார்: அமிர்தவல்லி
  தல விருட்சம்: புன்னை
  தீர்த்தம்: சந்தானபுஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : வைகானஸம்
  புராண பெயர்: மாதவபுரம்
  ஊர்: மயிலாப்பூர்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை6.30 மணி முதல் 11மணி வரை, மாலை 4.39 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  நிர்வாக அதிகாரி, அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர் - 600 004. சென்னை.  
   
போன்:
   
  +91 -44-2498 5112, 2466 2039, 94440 18239. 
    
 பொது தகவல்:
     
 

பிரகாரத்தில் பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், பால ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.இக்கோயிலுக்கு அருகில் கபாலீஸ்வரர் கோயில், பின்புறம் முண்டககண்ணியம்மன் கோயில் இருக்கிறது.இத்தல பெருமாளை தரிசிக்கச் செல்பவர்கள் இக்கோயில்களுக்கும் சென்று வரலாம்.





 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள மூலவர் அமர்ந்த திருமண கோலத்தில் அருளுகிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உள்ளது. மூலவரின் விமானம் ஆனந்த நிலை என அழைக்கப்படுகிறது.வேதவியாசர் நாரதரிடம் பூலோகில் தோஷம் இல்லாத தலம் எது என்று கேட்க, அவர் இத்தலத்தை கூறினாராம்.  இத்தலத்தில் மாதவப்பெருமாள், அமர்ந்த திருமணக்கோலத்தில் இருக்கிறார். அமிர்தவல்லித்தாயார் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரிணியில் ஒரு மாசி மகத்தன்று குழந்தையாக தோன்றினாள். எனவே இத்தீர்த்தம், "சந்தான புஷ்கரிணி' என்றழைக்கப்படுகிறது. தாயார் அவதரித்த நாளில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இத்தீர்த்தத்தில் சங்கமித்ததாம். இதன் அடிப்படையில் மாசி மகத்தன்று இங்கு விழா நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் தாயார், சுவாமியுடன் சேர்ந்து தீர்த்தக்குளத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது தீர்த்த நீராடி, தாயாரை வணங்கிட பாவம் நீங்கி, புண்ணியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் மூன்றும் சேர்ந்த கலவையை நைவேத்யமாக வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் குழந்தைப்பேறு உண்டாவதாக நம்பிக்கை. உற்சவர் தாமரை மலர் போன்று, அழகான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், "அரவிந்த மாதவன்' என்று அழைக்கப்படுகிறார். அரவிந்தம் என்றால், தாமரை என்று பொருள். சதய நட்சத்திர நாட்களில் இவர், வீதி புறப்பாடாகிறார்.

சம்பத்குமாரர்: பெருமாள் தலங்களுக்கு யாத்திரை சென்ற ராமானுஜர், கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்குச் சென்றார். அங்கு உற்சவர் சம்பத்குமாரர் இல்லை. கலங்கிய ராமானுஜர், டெல்லியை ஆண்ட மன்னர் தன் மகளின் விருப்பத்திற்காக சிலையை கொண்டு போனதை அறிந்தார். பின்பு டெல்லி சென்ற அவர், திருமாலை வேண்டி வணங்கினார். அப்போது மன்னரின் அரண்மனையில் இருந்த பெருமாள் சிலை, அவரது மடியில் வந்தது. அச்சிலையை நாராயணபுரம் கொண்டு வந்த ராமானுஜர், மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த சம்பத்குமாரர் இங்கு உற்சவராக இருக்கிறார். இவரது பாதத்தில் டெல்லி மன்னரின் மகள் பீபி நாச்சியார் இருக்கிறாள். இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே இவருக்கு, "செல்வப்பிள்ளை' என்ற பெயரும் உண்டு. பங்குனியில் சம்பத்குமாரருக்கு 10 நாட்கள் விழா நடக்கிறது. இவ்விழாவில் சுவாமி, ராமானுஜர் மடியில் அமரும் வைபவம் பிரசித்தி பெற்றது.
 
பேயாழ்வார் அவதார தலம்: முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. திருக்கோவிலூர் தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், "திருக்கோவிலூர் வைபவம்' நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. தாயார் சன்னதி முன்மண்டப தூண்களில் இவர் கிளி, யானை, குதிரை, சூரிய பிரபை மற்றும் அம்ச வாகனங்களில் காட்சி தரும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  திருமாலின் சாந்த குணத்தை சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி, அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி, சுவாமியை பிரிந்தார். தன் தவறுக்கு பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். லட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "அமிர்தவல்லி' எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலம், "கலி தோஷம் இல்லாத தலம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar