Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மதுரகாளியம்மன்
  ஊர்: பெருங்களத்தூர்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிவெள்ளி  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் சன்னதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் 2, மதுரகாளி அம்மன் கோயில் தெரு, பெருங்களத்தூர், சென்னை - 600 063.  
   
போன்:
   
  +91 44-22762755, 9176666591, 9176666592, 9538285586 
 
பிரார்த்தனை
    
  தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டோர், மலட்டுத் தன்மை உடையோர், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற விரும்புவோர் இங்குள்ள மதுரகாளி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், பொங்கல் படைத்தும், எலுமிச்சை மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டு முறைகள் எப்படி இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே நடைமுறைகளைக் கொண்டு இந்த பெருங்களத்தூர் ஆலயத்திலும் வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேஷ்டியும் துண்டும் மட்டுமே அணிந்து வர வேண்டும். பெண் பக்தர்கள் புடவைதான் அணிந்து வர வேண்டும். இதுபோன்ற சில கட்டுப்பாடுகளும் இந்த ஆலயத்துக்கு உண்டு. ஸ்ரீ மதுரகாளி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், ஆலய அர்ச்சகர்கள், கோயில் சிப்பந்திகள் மற்றும் உபயதாரர்கள் மட்டும்தான் சன்னதியின் மேல் பிராகாரத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அம்மனை பிரதட்சிணம் செய்ய விரும்பும் பக்தர்கள் கீழ் பிரகாரத்திலுள்ள வலம் வர வேண்டும்.  மூலவர் சன்னதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். மற்ற தினங்களில் உத்ஸவரைத்தான் தரிசிக்க முடியும். மூல விக்கிரகத்துக்கு சேவார்த்திகளின் அர்ச்சனை கிடையாது. எல்லாமே, உத்ஸவருக்குத்தான்.


 
     
  தல வரலாறு:
     
  மதுரை நகரை எரித்த கண்ணகியே சினம் தணிந்து இங்கே மதுரகாளியாக அமர்ந்துள்ளாள் என்று சிறுவாச்சூர் ஆலய தல புராணம் சொல்லும். அக்கிரமம் எங்கு நடந்தாலும், எந்த ரூபத்தில் நடந்தாலும் மதுரகாளி அம்மன் பொறுக்க மாட்டாள். அநீதியைத் தட்டிக் கேட்கத் தவற மாட்டாள். இத்தகைய புகழ் வாய்ந்த மதுரகாளி அம்மனுக்கு, அதே திருநாமத்துடன் தற்போது சென்னை நகரில் தாம்பரத்துக்கு அருகே பெருங்களத்தூரில் தற்போது ஓர் அற்புதமான ஆலயம் உருவாகி வருகிறது. ஸ்ரீ மதுர காளி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்ட மதுரகாளிதாஸன் கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சார்யரின் மகன் ராமஸ்வாமி ஸ்ரீ மதுரகாளி அம்மன் கைங்கர்ய ஸபா என்கிற அமைப்பை ஏற்படுத்தி, அதன் முதன்மை அறங்காவலராக இருந்து வருகிறார். ஆன்மிக அன்பர்கள் பலரின் நன்கொடையைப் பெற்று சபாவின் பெயரில் பெருங்களத்தூரில் இருபத்திரண்டு சென்ட் நிலம் வாங்கப்பட்டது திருவாபுரி என்று அதற்குப் பெயரிடப்பட்டிருக்கிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் சன்னதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். மற்ற தினங்களில் உத்ஸவரைத்தான் தரிசிக்க முடியும். மூல விக்கிரகத்துக்கு சேவார்த்திகளின் அர்ச்சனை கிடையாது. எல்லாமே, உத்ஸவருக்குத்தான்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar