Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கரி வரதராஜப் பெருமாள்
  ஊர்: நெற்குன்றம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் நெற்குன்றம், கோயம்பேடு பூந்தமல்லி செல்லும் வழியில், சென்னை.  
   
போன்:
   
  +91 99628 11792 
    
 பொது தகவல்:
     
  இங்கு சந்தானகோபாலன், விநாயகர், வரத ஆஞ்சநேயர், விஷ்ணுதுர்கை, விஷ்வக்சேனர், சனிபகவான் முதலான தெய்வங்கள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள சந்தான கோபாலரை வேண்டிச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்தக் கரி வரதர் சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் வடிவமைக்கப் பெற்றவர். காஞ்சி வரதரை ஒத்தவர். மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு. இவருக்கு விசேஷமான தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனமும் உண்டு. வைகானஸ முறைப்படி மற்ற விசேஷங்களும் உண்டு. மூலவருக்கும் உத்ஸவருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உத்ஸவர் தன் கையில் கதை வைத்திருக்கிறார். இவர் சத்யநாராயணரின் அம்சம்! அதனால், பவுர்ணமி நாட்களில் இந்தக் கரி வரதருக்கு விசேஷ பூஜை உண்டாம் ! தாயாருக்கு தனிச் சன்னதி கிடையாது. வரத ஆஞ்சநேயர் என்ற அனுமன் சன்னதியும் உண்டு. இவரும் மகா வரப்பிரசாதி ! சனிபகவானின் பார்வை பக்தர்கள் மேல் நேரடியாகப் படக்கூடாது என்பதற்காக அவர் கால் ஒன்று ஊனமானதாகவும், அதனால் சற்றே தலை சாய்த்து சனிபகவான் இருப்பதாகவும், இந்த தத்துவத்தை உணர்த்த அனுமனும் இங்கு சற்றே தலைசாய்த்து முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். உத்ஸவருடன் சந்தான கோபாலனும் உள்ளார். பிள்ளைவரம் வேண்டுவோர், இவரைப் பிரார்த்தனை செய்தால், அவர்கள் வீட்டில் குழந்தைச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.  
     
  தல வரலாறு:
     
  கரி என்றால் யானை என்று பொருள் வருமே ! ஏன் இந்தப் பெருமாள், தன் பெயருடன் ஆனைமுகத்தான் பெயரையும் இணைத்துக்கொண்டுள்ளார்? கஜேந்திர மோட்சக் கதை நினைவுள்ளதா? கடிகொள் பூம்பொழிலாய் காமமுறு பொய்கையாய் தாமரை மலர்களுடன் அந்தத் தடாகம் விளங்க, அதை வேழம் (யானை) பார்த்து நித்யம் ஒரு மலரை பக்தியுடன் மாலோனுக்குச் சமர்ப்பிக்க, அந்தக் கரியின் விதிப்படி ஒரு நாள் முதலை ஒன்று அதன் காலைப் பிடிக்க, நெடிய போராட்டத்துக்குப் பின் தோல்வியடைந்த யானை ஆதிமூலமே என அழைக்க, சரணாகதி என்று வந்த முந்தைய பக்தர்கள் பிரகலாதன் மற்றும் பாஞ்சாலியை விரைந்து வந்து காத்ததைப் போல, இந்தக் கரியையும் காப்பாற்றி, முதலை முகத்தில் கரி பூசி, இருவருக்குமே மோட்சம் தருகிறார் பரந்தாமன். இந்தச் சம்பவம் மதுரவாயிலில் நிகழ்ந்ததென்று ஒரு கருத்தும், நெற்குன்றத்தில் நடந்ததாக இன்னொரு கருத்தும் நிலவுகிறது. ஸ்ரீமத் பாகவதமோ, பாற்கடலின் உள்ளே திரிகூட பர்வதம் என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு தடாகத்தில், இந்த கஜேந்திர மோட்சம் நடந்ததாக விவரிக்கின்றது. கபிஸ்தலம் போன்ற தலங்களும் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன. கரி மோட்சம் எங்குதான் நடந்தது? ஒரு காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பாரத நாடு, இன்று சுருங்கி சிறிய தீபகற்பம் போல் இருப்பதும் (சரித்திர ஆராய்ச்சியாளர் கூற்று), அறுபதுகளில் நாம் கண்ட தனுஷ்கோடி பிறகு காணாமல் போனதும் உண்மைதானே ! எனவே, இந்த ஆராய்ச்சியைத் தவிர்த்துவிடுவோம். கண் இமைகள் மூடிய நிலையில் பக்தர்தம் பரிபாலனத்துக்காக (லோகசேமம் வஹாம்யஹம்) எப்போதும் யோசனையில் இருப்பதுபோல ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் காட்சி தருகிறார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar