Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாண்டி முனிஸ்வர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாண்டி முனிஸ்வர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாண்டி அய்யா
  ஊர்: மதுரை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் ( ஆடி) தனி விழா நடைபெறுகின்றது. மக்கள் மாம்பழத்தை காணிக்கையாகத் தருகிறார்கள். பாண்டி அய்யாவுக்கு சர்க்கரை பொங்கல் படைகின்றார்கள்.  
     
 தல சிறப்பு:
     
  பாண்டி அய்யாவின் ஆலயத்துக்கு சென்றால் பேய் பிசாசுகளின் தொந்தரவு விலகும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள கழுன்கட்டி என்ற இடத்தில் பல வேல்கள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தை அடைந்ததும் பேய்பிசாசு பிடித்தவர்கள் துள்ளி குதிப்பார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களை பேய் , பூதங்களுக்கு பயந்து மரியாதை தரும் வகையில் வண்டிகளை நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள் அங்கு வந்து தொட்டில் கட்டிச் செல்கின்றார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 -- 
   
முகவரி:
   
  மதுரை மாட்டுத் தாவணிக்கு அருகில், மேலமடை, மதுரை,--  
   
போன்:
   
  -- 
    
 பொது தகவல்:
     
  பால்,பன்னீர் , அத்தர், ஜவ்வாது, மல்லிகைப் பூ போன்றவற்றை போட்டு ஆராதிகின்றார்கள். பாண்டி ஐயாவுக்கு சைவ உணவும், சமயக் கருப்புக்கு மிருக பலிகளும், கள், சுருட்டு போன்றவையும் தரப்படுகின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  நீங்கள் எங்கு அவரை நினைகின்றீர்களோ அங்கு வந்து குறைகளை நிச்சயமாகக் களைவார் என்றே கூறுகின்றார்கள். 
    
 தலபெருமை:
     
  ஆலயத்தின் கிழக்கு பகுதியில் ஆண்டிசாமிக்கு ஆலயம் உள்ளது. அவருக்கு உருவம் இல்லை. அவர் சுப்பிரமணியக் கடவுள் என்கின்றனர். மேலும் அங்கு சமயக் கருப்பு என்பவருக்கும் சிலை உள்ளது. அவர் பாண்டி அய்யா கூறுவதை நிறைவேற்றுகின்றார் என்று கூறுகின்றனர். பத்மாசனத்தில் உட்கார்ந்த நிலையில் காணப்படும் முனீஸ்வரர் பிரபலமானவர். பக்தர்கள் வேண்டியதை அருள்பவராம். அவருக்கு வெள்ளை உடை உடுத்தி பல வண்ணப் பூக்களால் ஆன மாலையை அணிவிக்கின்றார்கள்.  
     
  தல வரலாறு:
     
  மதுரை மாட்டுத் தாவணிக்கு அருகில் உள்ளது மேல்மடை கிராமம். அங்குள்ள தேவதையை பாண்டி அய்யா என்று அழைகின்றார்கள். அந்த தெய்வம் கண்ணகியின் கணவனான கோவலனை அநியாயமாகக் கொன்ற மன்னன் நெடுஞ்செழியனின் மறு பிறப்பே என்கிறார்கள். தற்போது உள்ள ஆலயம் முன்னர் ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. கரூருக்கு அருகில் உள்ள நெரூர் என்ற இடத்தில் இருந்து நாடோடிகள் மதுரைக்கு வந்தனர். அவர்களில் மூதாடியான வள்ளியம்மை என்பவளின் கனவில் ஒரு தாடி வைத்த தலைபாகை கட்டிக் கொண்டு இருந்தவர் தோன்றினார். அவர் அந்த காட்டில் இருந்த ஒரு இடத்தை கனவில் காட்டி தான் அந்த இடத்தில் புதையுண்டு கிடப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து வணங்குமாறும் கூறினார். அப்படி செய்தால் அவர்கள் அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டாம் எனவும், அவர்களை தானே பாதுகாப்தாகவும் உறுதி கூறினார். அதை அவள் மற்றவர்களிடமும் கூற அனைவரும் அவளுக்கு கனவில் வந்த எடத்தை தேடிக் கண்டு பிடித்து அந்த இடத்தை தோண்டிப் பார்க்க அங்கு முறுக்கு மீசை வைத்த ஒரு மனிதரின் சிலை கிடைத்தது. அதைக் காண பலரும் அங்கு வந்தனர். வந்தவார்களில் ஒரு முனிவர் அந்த இடத்தில்தான் கண்ணகி எரித்த மதுரை இருந்தது எனவும், அது நெடுஞ்செழியனே இருந்த இடம் எனவும் கூறினார். அதன் பின் வருத்தத்தினால் மரணம் அடைந்த நெடுஞ்செழியன் மதுரையில் மீண்டும் பிறந்தான். அவன் சிவ பெருமானை வேண்டிக்கொள்ள அவனுக்கு அவர் முக்தி கொடுத்தார். அந்த சிலை முக்தி பெற்ற நெடுஞ்செழியனின் சிலையே என்றார். ஆனால் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. அவரிடம் சில கேள்விகளை கேட்க முனைந்த போது அவர் மறைந்து விட்டார். ஆகவே அவர்கள் அந்த இடத்தின் பல பாகங்களையும் தோண்ட அங்கு எரிந்து போய் இருந்த பல சிலைகள் கிடைத்தனவாம். ஆகவே அவர்கள் அந்த சிலை பாண்டிய மன்னனின் சிலை எனக் கருதினார்கள். அதற்கு அங்கயே ஆலயம் அமைத்து பாண்டி முனீஸ்வரர் மற்றும் பாண்டி அய்யா எனப் பெயரிட்டு வணங்கலாயினர்.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar