Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: உலக நாயகி, மகிஷாசுரமர்த்தினி
  தீர்த்தம்: சர்க்கரை தீர்த்தம்
  புராண பெயர்: தேவிபுரம், தேவிப்பூர்
  ஊர்: தேவிபட்டினம்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி, பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம்-623 514. ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4567 - 221 213, 264 010, 94444 57971, 94444 57978 
    
 பொது தகவல்:
     
  கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயிலில் 5 நிலை 7 கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரம் அமைந்துள்ளது.  மூலவருக்கு மேல் ஏகதள விமானம் அமைந்துள்து. கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தம் அமைந்துள்ளது. கோயில் உள்புறம் பலிபீடம், கொடிமரம்,  சிம்ம வாகனம் உள்ளது. கொடிமரம் அடுத்து பதினாறு கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்புறம் இருபுறமும் சிங்கம் வீற்றிருக்க அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. அடுத்துள்ள பதினாறு கால் மகாமண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணி. அதற்கடுத்து அர்த்தமண்டபம் தாண்டி , கர்ப்பக்கிரகத்தில் அம்மன் அருள்பாலிக்கிறாள். சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுயம்பு மூர்த்தியான இத்தல அம்மனுக்கு பலவகையான அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர் தோஷ நிவர்த்திக்காக கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன்  இங்குள்ள  உலகநாயகி அம்மனை வழிபட்டுள்ளார். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி 10ம்நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், அந்த தேவியால் இந்த பட்டினம் தேவிபட்டினம் ஆனதாகவும் கூறப்படுகிறது.  நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி ராஜமாதங்கி சியாமள பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி விசாலாட்சி மணிகர்ணிகாக பீடம் என்பது போல், தேவி பட்டினம் அம்மனின் வீரத்தை பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாகும். ராவண வதத்திற்கு முன்  ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் ராமநாதபுரம் அருகிலிலுள்ள உப்பூர் விநாயகரை தரிசித்துவிட்டு, வீரசக்தி பீடமான இத்தலத்தில் தங்கி அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.


 
     
  தல வரலாறு:
     
  பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள். இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும்  அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar