Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்தால பரமேஸ்வரியம்மன்
  உற்சவர்: முத்தாலம்மன்
  தல விருட்சம்: கடம்ப மரம்
  தீர்த்தம்: வைகை
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  ஊர்: பரமக்குடி
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசி பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், பரமக்குடி - 623 707, ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4564 - 229 640, +91- 94434 05585. 
    
 பொது தகவல்:
     
 

அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் மாரியம்மன் சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் நாகதேவதைகளுடன் மாரியம்மன் காட்சியளிக்கிறாள். முன்மண்டபத்தில் மார்த்தாண்டியம்மன், காவல் தெய்வம் போத்திராஜா, கருப்பணசாமி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக மதுரையில் அருளும் சுந்தரேஸ்வரர், எழுந்தருளிய தலம் இது. இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இவர் இக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.



 
     
 
பிரார்த்தனை
    
  அம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இங்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்பிகையிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் 
    
 தலபெருமை:
     
  வைகை நதியின் தென்கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் முத்தால பரமேஸ்வரியம்மன், சாந்த சொரூபமாக தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. குழந்தைகள்  புத்திசாலித்தனத்துடன் இருக்க இவளுக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. மதி நுட்பம் பெருகவும், அறிவார்ந்த செயல்களில் புலமை ஏற்படவும் இவளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவ விழா நடைபெறும்.

பூச்சொரிதல் சிறப்பு: அம்பிகை இங்கு உக்கிரமாக இருப்பதால், மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக மலர் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்க பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக தானே எழுந்தருளியவர் இவர். இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இந்த சிவன், இக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.

அம்பிகைக்கு பால்குடம்: முருகன் கோயில்களில் பக்தர்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால், அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.
 
     
  தல வரலாறு:
     
  முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி! அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான். அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன. சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப் பெண்ணை பாராட்டி பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளை கட்டாயப்படுத்தினான். இதனால் மனம் வெறுத்த அப்பெண், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டினர். முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் "முத்தால பரமேஸ்வரி' என்று பெயர் பெற்றாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar